.

Pages

Monday, October 22, 2012

[ 7 ] பயண அனுபவங்கள் – சீனா

எண்ணற்ற நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் எனது சீனப் பயண அனுபவங்களை தொடர்வதில் மகிழ்கின்றேன்.

இதற்காக தொலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும், வீடு தேடி வந்தும், என்னை நேரில் காணும் போதும் எனது எனது சீனப் பயண அனுபவங்களை தொடரச்சொல்லிக் அன்புடன் கேட்டுகொண்ட உறவினர்கள், நண்பர்கள், சகோதர, சகோதரிகள் என அனைவருக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய தொழில் முனைவோருக்கு நல்லோதொரு வழிகாட்டியாக அமைய எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் அனைவருக்கும் கிட்டட்டும் என்று பிரார்த்தனை செய்தவனாக மீண்டும் தொடர்கிறேன்...
சீன தேசத்தில் “Air-condition” சாதனங்களை தயாரிக்கக் கூடிய முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகிய குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன்.

இங்கே பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் உலக சந்தைகளைக் கீழ் கண்டவாறு பிரித்துருப்பார்கள்

  Europe

America

Middle East & North Africa

South East Asia

Australia & New Zealand

ஒவ்வொரு சந்தைகளுக்கும் ஒரு நிர்வாகி எனவும், அவர்களுக்கு கீழ் இரு உதவியாளர்கள் என்று பணியில் அமர்த்தி அவர்களின் பணியாக வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன ? என்பதை ஆய்வு செய்தல், சந்தைகளின் நிலவரம், வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப பொருட்களின் விலைகளை உறுதி செய்தல், வாடிக்கையாளர் எதிர்நோக்கும் அனைத்து தேவைகளையும் தயாரிப்பு பிரிவுக்கு எடுத்துச்சென்று வாடிக்கையாளர் - தான் பணிபுரியும் நிறுவனம் ஆகிய இருவருக்குமிடையே ஒரு பாலமாக இருந்து தகவல் தொடர்புகளை பரிமாறிக்கொள்வது, வாடிக்கையாளரின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்வது  போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

சீன நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களை வரவேற்கும் பண்புகள் மிகச் சிறப்பாகவே இருக்கும். எந்தவித பாகுபாடுகள், ஏற்றதாழ்வுகள் இருக்காது. அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி ஒரே மாதிரியான வரவேற்பும், அணுகுமுறையும் இருக்கும். [ ஆனா நம்மாளுக வசதி படைத்தோருக்கு ஒரு அணுகு முறை எனவும், ஏழை எளியோருக்கு  மற்றொரு அணுகு முறை எனவும் இருப்பார்கள். குறிப்பாக திருமண வைபவத்தில் நடக்கும் வரவேற்பிலும், விருந்து உபசரிப்பிலும் இவற்றைக் கண்கூடாக் காணலாம். அதே போல் ஏழை வீடுகளில் நிகழும் இறப்புகளுக்கு சென்று வரும் கூட்டமும் குறைவாகக் காணப்படும் என்பதை நாம் மறுக்க இயலாது. ] வாடிக்கையாளர்களோடு தொடர்புகளை வலுப்படுத்தும் விதமாக  நட்புடன் பழகக்கூடிய அவர்களின் அணுகுமுறை என்னை வியக்க வைத்தன.

அடுத்தது அவர்களின்  சுறுசுறுப்பு, நேரந்தவறாமை போன்றவற்றை பற்றிக் குறிப்பிட வேண்டும். தங்களின் பொறுப்பின் கீழ் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு வேலைகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்பதும் இதற்காக சுறுசுறுப்புடன் செயலாற்றி எடுத்துக்கொண்ட காலத்திற்குள் வேலைகளை விரைந்து முடித்துக் கொடுத்து தங்களின் மேலாளரிடம் பாராட்டுகளைப் அவ்வப்போது பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [ இங்குள்ள சமூக அமைப்புகள் நடத்தும் கூட்டத்திற்கு நேரந்தவறாமையை கடைபிடிப்பதில் இருக்கும் இடைவெளியை கவனத்தில் கொண்டால், மிகப்பெரிய கிலோ மீட்டர் தூரத்தில் நாம் உள்ளோம் என்பதை மறுக்க இயலாது ]

அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைமை நிர்வாகியின் பரஸ்பரம் நலம் விசாரிப்பு போன்ற வாடிக்கையான வரவேற்பை முடித்துக்கொண்டு அமர்ந்து பேச இலகுவாக முதல் தளத்திற்குச் சென்றோம்...

சுவையான ‘கிரீன் டீ’ யை அருந்திக்கொண்டே எங்களின் பேச்சு சந்தை நிலவரம், எரிபொருள் மற்றும் காப்பர் போன்றவற்றின் விலையேற்றத்தைப் பற்றி அமைந்தது.

அப்போது எனது பேச்சு ‘எக்ஸ்க்ளுசிவ்’ பற்றி அமைந்தன.

அது என்ன Exclusvie  !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...

பயண அனுபவங்கள் - சீனா - 1 அறிமுகம் 

6 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    அருமையான தொகுப்பு, பார்ப்பதற்கும் படிப்பதற்கும் இனிமை அருமை.

    தொடரட்டும்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Rights.
    HO Palayankottai TN.,
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ------------------------------------------------------------------------------------------------

    ReplyDelete
  2. இப்போதான் உன் பயண அனுபவம் முதல் எபிஸோடுலேர்ந்து படித்தேன், அருமையா எழுதிருக்கே, நேரில் கூடவே கூட்டிக்கிட்டு போகும் உணர்வு.. எப்படியெல்லாம் கொள்முதல் செய்ததை நம்மூர் சந்தையில் விற்பது என்பதை பற்றியும் விரிவா எதிர்ப்பார்கிறேன்

    ReplyDelete
  3. சீனதேசம் சென்றாலும் சீர்கல்வியை தேடு என்ற நாயகத்தின்(ஸல்) கூற்றிர்க்கு சீனதேசம் சீரான தொழிலுக்கும் உகந்ததாய் இருப்பதை ஆசிரியரின் கட்டுரையில் கானமுடிகிரது
    திருப்பூரின் தொழில் போட்டியாலர்களே சீனர்கள்தான்

    ReplyDelete
  4. எல்லா நாட்டவரையும்
    சமமாக மதிக்கும் பண்பு
    சீனர்களின் வெற்றிக்கு
    வித்தாக இருக்கலாம்

    ReplyDelete
  5. அருமையான பதிவு இன்னும் பல பதிவுகள் வழி நடத்தட்டும்...

    ReplyDelete
  6. Please visit
    http://nidurseasons.blogspot.in/2012/11/7.html

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers