.

Pages

Tuesday, October 23, 2012

[4] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...


கல்யாணமாகி...
நாலு மாதமாகும் முன்பே
வெளிநாடு சென்று வா
என்னிடம் நீ சொன்ன போது 
இன்னும் கொஞ்சம்  காலம் 
உன் அருகில் நான் இருக்கேன் 
என்று நானும் சொன்ன போது 
தந்தையாக போகும் நீங்கள் 
கடல் கடந்து காசு சேர்த்து 
செல்வமாக வந்திடனும் என்றாய் நீயும் 
வெளி நாடு சென்றிடவே 
உன் நகையை புன்னகையுடன் 
விற்று தந்தாய் பெட்டி தூக்கி நான் 
புறப்படுகையில் புன்னகையுடன் 
வழியனுப்பி விசும்பி சென்றாய் 
நான்கு வருடம் கரைந்து போக 
நேற்று வந்த போனில் நீயும் 
எப்ப வருவீங்க என்றழுதாய்...
பிரிவெனும் கொடுமையில் அழுதாயா...?
உள்ளூர் உழைப்பின் வல்லமை அறிந்து அழுதாயா...?
ஏன் அழுதாய்...? சொல்லி அழு...! 

அதிரை சித்திக்
இறைவன் நாடினால் ‘அழும் குரல்’ தொடரும்...

4 comments:

 1. பிரிவின் இழப்பை அழகாக வர்ணித்துள்ளார் பத்திரிக்கைத்துறை நிபுணர்.

  இறைவன் நாடினால் ! தொடரட்டும்.....

  சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்திற்கு என் உறவினர் ஒருவரை வழியனுப்ப சென்றேன். அங்கே கண்ட காட்சிகள் என் மனதை வருடியவையாக இருந்தன.

  தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது.
  குறிப்பாக....

  1. குழந்தைகள் தங்களின் வாப்பாவைக் [ Father ] “டாட்டா” க் [ Bye Bye ] காண்பித்து வழியனுப்பியது... விரைவில் வந்துவிடுவேன்ட “செல்லம்” , “தங்கம்” என கன்னத்தில் தட்டி கண்ணீரை அடக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது..

  2. அன்பான மனைவியோ தங்கள் கணவன் இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது...

  3. பெற்றோர்களோ தங்களின் எதிர்பார்ப்பில் “ நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான் ” என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது...

  4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற என்னற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு “கையசைத்து” விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது..

  ReplyDelete
 2. தொடர்ச்சியாக....

  முயற்சிக்கலாமே !?

  1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.

  2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.

  3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.

  4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.

  5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
 3. பதிவுக்கு முதலில் நன்றி.

  அழுதாயா..? ஏன் அழுதாய்..? சொல்லி அழு..!!
  இப்படி விடைபெற்று இருப்பது மிகவும் நன்று, அருமையாக இருக்கின்தது. தொடரட்டும்.

  சிரித்தாலும் கண்ணீர் வரும், அழுதாலும் கண்ணீர் வரும்.

  கண்ணீர் கண்ணீர்தான் ஆனால் சிரிப்புக்கும் அழுதலுக்கும் ஒலி அலைகள் வேறு.

  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED.
  Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 4. சகோ நிஜாம் சகோ ஜமால் காக்கா ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers