.

Pages

Tuesday, October 23, 2012

அதிரை : காலை 7 மணியிலிருந்து 8 மணி வரை... [ காணொளி ]


இன்னிக்கி காலைலே எழுந்துரிச்சு பஜ்ர் தொலுதுட்டு அப்புடியே சூட ஒரு கப் 'டீ'யைக் குடிச்சிட்டு ஈசிஆர் ரோட்டுலே கொஞ்ச தூரம் ஜோரா வாக்கிங் போயிட்டு நம்ம MP காக்கா கடையிலே செய்தித்தாளை வாங்கி புரட்டுனா அதிலே "டெங்கு" காய்ச்சல் பரவுதுன்னு செய்தி ! நம்மளுக்கு அதிர்ச்சியாருந்தாலும் அடுத்தப் பக்கத்திலே நம்ம ஆளுங்கட்சி அமைச்சர் கொடுத்துக்கிற செய்தி கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சி. சரி அப்புடி என்னதான் செய்தியை கொடுத்துருகிறார்ன்னு பார்த்தா "டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தனிக் குழு அமைக்கப்பட்டு, சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தமிழக முதல்வர் ரூ.2.5 கோடி ஒதுக்கியுள்ளார். அனைத்து வகையான மருத்துவ உதவிகள் மற்றும் தகவல்களுக்கென தனி உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்புடி சொல்லிக்கிறாரே சரி டெங்குன்னா என்னப்பான்னு கூட இருந்த நண்பர்களிடம் அப்பாவியா கேட்டுவைக்க அவிய்ங்களும் உனக்கு சொன்ன புரியாது..... சரி கூடவே எங்களோடு வா... எங்கெல்லாம் உற்பத்தியாவுதுண்டு காட்டுறோம்ன்னு சொல்லி உசுப்பேத்த

கேட்கவா வேண்டும் உடு ஜூட்... ஊரையே ஒரு ரவுண்ட்ஸ் விட்டுலாம்ண்டு நம்ம பேட்டரிக்கு கொஞ்சம் சார்ஜ் போட்டுக்கிட்டு டெங்கு வசிக்கும் இடமா பார்த்துப் போனோம்ல...

[ தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிரைப்பட்டினம் என்ற ஊரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று [ 23-10-2012 ] காலை 7 மணியிலிருந்து 8 மணி வரை பதிவு செய்யப்பட்டக் காணொளிக் காட்சியைக் காணுங்கள். ]

நோய் தீவிரமாகப் பரவும்போது அதைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை, நோய் தோன்றக் காரணமாக இருக்கும் விவாகரத்தில் கண்மூடி இருக்கக்கூடாது. நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் நோய் வராமலே தடுப்பதுதான் செலவையும் வலியையும் பதற்றத்தையும் அலைச்சலையும் இழப்பையும் தடுப்பதாக இருக்கும்.
இப்பகுதிகளில் சுகாதாரத்தை அச்சுறுத்துகின்ற வற்றிற்கு எதிராக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மக்கள் நல் வாழ்வுத்துறையாகிய சுகாதாரத்துறையின் தலையாயக் கடமையாகும்.

அன்பான வேண்டுகோள் :
1.கூடுதல் பணியாளர்கள் / குப்பை வண்டிகள் போன்றவற்றைக் கொண்டு தினமும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது.

2.மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரினை வெளியேற்றுவதற்குரிய வடிகால் வாய்க்கால்களை சுத்தப்படுத்தும் முயற்சிகளை துரிதமாக மேற்கொள்வது.

3.கொசு உற்பத்தியை தடுக்கும் நோக்கில் குப்பை கழிவுகளிலும், நீர் தேங்கக்கூடிய இடங்களிலும் நோய்த்தடுப்பு மருந்துகளை தெளிப்பது.

4.15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை குளோரினேஷன் செய்வது 

5.பொதுமக்களிடேயே துண்டுபிரசுரம் மூலம் சுகாதார விழிப்புணர்வு பிராச்சாரத்தை மேற்கொள்வது.

6.இப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகளை அவ்வப்போது ஆய்வுகளைத் தொடர வலியுறுத்துதல்.

போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு :
நமது ஒத்துழைப்பை பொறுத்தே உள்ளாட்சி அமைப்பின் நடவடிக்கை அமையும். ஆதலினால் தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது, கழிவு நீர் செல்லும் கால்வாயில் குப்பைக்கூளங்களை எறிவது, திறந்த வெளியில் மலம் கழிப்பது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகிவிடுகிறது. இதுபோன்ற சுகாதாரத்தை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சம்பந்தப்பட்டதுறையின் கவனத்திற்கு எடுத்துச்செல்வது என்பது நமது கடமையாகவும், நம்முடைய பகுதி சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்குரிய முக்கிய பொறுப்பு நம்மிடம் மட்டும்தான் உள்ளது என்பதையும் மனதில் இருத்திக்கொள்வது அவசியமானதொன்றாகிறது.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
குறிப்பு : இப்பதிவு யாரையும் குறை கூறுவதற்காக அன்று. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், சுகாதாரப் பிரச்சனையை ஆட்சி அதிகார வர்க்கத்தினரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதேயாகும்.

7 comments:

 1. பொதுமக்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக வேண்டும்.தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது, கழிவு நீர் செல்லும் கால்வாயில் குப்பைக்கூளங்களை எறிவது, திறந்த வெளியில் மலம் கழிப்பது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகிவிடுகிறது. இதுபோன்ற சுகாதாரத்தை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்

  ReplyDelete
 2. தேங்ஸ் நண்பர் நிஜாம்.
  ஊரையே முழுமையாக பார்த்த திருப்தி!
  ஆனால் எங்கும் அசிங்கமாகவே!
  ஆள்பவர்களுக்கு அக்கரையிருந்தாலும் வாழ்பவர்களின் ஒத்துழைப்பின்மையை காட்டுகிறது.

  ReplyDelete
 3. ஆள்பவர்களின் மெத்தனம் என்றாலும்
  வாழ்பவர்களின் அக்கறையின்மை உள்ளது
  சரியாய் சொன்னீர்கள் ஜாபர் ...
  அந்த அந்த பகுதி இளைஞர்கள் கூட்டாக
  சேர்ந்து மாதம் ஒரு முறை
  சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யலாம் ..
  அது நமக்கு தான் நல்லது.

  ReplyDelete
 4. பதிவுக்கு முதலில் நன்றி.

  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் என்று என் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  அதிகாரிகள் யாரு? நேற்றைய அதிகாரிகள் இன்று மக்கள். இன்றைய மக்கள் நாளை அதிகாரிகள்.

  இந்த காணொலியை பார்க்கும்போது. இந்த குப்பைகளெல்லாம் இந்த வாரத்து குப்பைகள்போல் தெரியவில்லை, பல நாட்கள் சுத்தம் செய்யாமல் தேங்கி கிடக்கும் குப்பைகளே!

  ஒவ்வொரு வீடுகளும் அவங்க அவங்க பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஊரே சுத்தமாக இருக்குமே!!

  சுத்தம் சுகம் தரும் ஆனால் சுகம் சுத்தம் தருமா? இது ஒரு போதும் பொய்யாகாது.

  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED.
  Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
  *****************************************************

  ReplyDelete
 5. அருமை அருமை, நல்ல பொழுதுபோக்கா நல்ல விடயங்கள் பதிவு செய்யப்படுது, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இவ்வளவு மோசமா இருந்தா டெங்கு என்னா ஒலகத்துலே என்ன புதுநோயெல்லாம் அதிரைலேதான் முதலில் வரும்போல் தெரியுது, பஞ்சாயத்து போர்ட் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மேலும் குப்பை கொட்டும் நாமும் அதற்கென உள்ள தொட்டிகளில் கொட்டி கொஞ்சமேனும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கப்பம் கட்டுவதைவிட்டும் தவிர்த்துக்கலாம்......

  ReplyDelete
 7. சிரமப்பட்டு வீடியோ பதியப்பட்டதை பார்க்கும் பொழுது தெரிகிரது எல்லவற்றிர்க்கும் அல்லஹ்வின் கூலியுண்டு தொடருங்கள் உங்கள் சமுதாயப்பனியை நீடூடிகாலம் வாழ வாழ்த்துகிறோம்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers