kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, October 25, 2012
[ 5 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...
குளிர்ந்த அறை அலுவலகம்..!
பலர் மதிக்கும் பதவி
புன்முறுவல் மரியாதை
பலர் கொடுத்தான் அவர் மனம்
பரிதவித்து அழுதது ஏன்...?
உலகின் உயரே...!
வெண் மேகம் பல கிழித்து
விமான பயணம்
சென்ற அவர் மனம்
விம்மி விம்மி அழுதது ஏன்...?
தான் வாழும் இடம் தன்னில்
குறைவொன்று இல்லை இல்லை
பஞ்சணைகள் பல இருந்தும்
நிம்மதிகள் குறைந்த அவர்
நித்தம் நித்தம் அழுதது ஏன்...?
அழகு மனைவி அருகில்
அள்ளி கொஞ்ச அழகு குழந்தை
மழலை சொல் கேட்டும்
அவர் மனம் மகிழவில்லை
மாறாக அவர் அழுதது ஏன்...?
ஆட்சி பங்கு எங்களுக்கு
வேண்டும் என்று ஒருசாரார்
கூறியதன் விளைவாக
கொன்றனரே ஆட்சியாளர்...!
குழந்தையென்று பார்கவில்லை
கிழவர் என்று பார்க்கவில்லை
கோவில் என்று பார்க்கவில்லை
கல்வி தரும் பள்ளியென்று பார்க்கவில்லை
கொன்று குவித்த சிங்களவர்
கொடுமை கண்ட ஈழ தமிழர்
நாடு கடந்து செல்வமாக வாழ்ந்தாலும்
இனமது அழிந்த காட்சி
கண் முன்னே வந்து போக
அழுகின்றான் ஈழ மறவன்...!
ஈழத்தை அடுத்து சிரியாவில்
நடந்தேறும் கொடுமைக்கு
அழ கூட ஆளில்லை
அழுகின்ற காரணத்தை
அறிந்தால் ஆட்சியாளன் மாறுவானா...?
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
நம்மை தட்டி எழுப்பி சமூக அவலத்தை சுட்டிக் காட்டும் கவிதை
ReplyDeleteதொடரட்டும்...
பதிவுக்கு முதலில் நன்றி
ReplyDeleteகவிதைக்கும் நன்றி.
அழுது அழுது கண்ணீரும் நின்று விட்டது.
பார்த்து பார்த்து பார்வையும் போய்விட்டது.
சிரித்து சிரித்து சிரிப்பொலியும் நின்று விட்டது.
உழைத்து உழைத்து உடம்பும் தளர்ந்து விட்டது.
வாழ்ந்து வாழ்ந்து வாழ்க்கையும் கசந்து விட்டது. ஆனால்,
படித்து பின்னூட்டம் இடுவதற்கு மட்டும் உற்சாகமே.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
----------------------------------------------
குழந்தையின் அழுகை
ReplyDeleteதாயின் அழுகை
அடுத்த பரிணாமம்
நாட்டுமக்களுக்காக அழுகை
நபரே உங்கள் என்ன ஓட்டங்கள்
விசாலப்படுகிறது
வாழ்த்துக்கள்
சித்தீக்கின் கவிதை
ReplyDeleteகுழந்தை அழக்கேட்டோம்
தாய் அழக்கேட்டோம்
அழுகையின் பரினாமம்
நாட்டிற்க்காக அழக்கேட்கயில்
அர்ப்புதாம் கலக்குங்கள் தோழரே
முதல் 4 பத்திக்கு பதில் என்னவோ?
ReplyDelete//நடந்தேறும் கொடுமைக்கு
அழ கூட ஆளில்லை//
கண்ணீரும்
உறைந்துவிட்டது
எல்லோரும்
மூச்சற்ற நிலையில்
அழுதாலும்....................