கண்களே நீ எதை பார்க்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பார்ப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
கால்களே நீ எந்த பாதையில் நடக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்ல பாதையில் நடப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
கைகளே நீ என்ன செய்ய ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செய்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
இதயமே நீ எதை நினைக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே நினைப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
நாக்கே நீ எதை பேச ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே பேசுவாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
வாயே நீ எதை உட்கொள்ள ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே உட்கொள்வாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
காதுகளே நீ எதை செவிமடுக்க ஆசைபடுகின்றாய் ?
நீ நல்லதையே செவிமடுப்பாய் என்று அல்லாஹ் நம்புகின்றானே !
நீ அவனை நம்பவில்லையா ?
ஓ மனிதா, படைத்த ஜீவராசிகளிலேயே உன்னை உன்னதமான படைப்பு என்று அல்லாஹ் புகழ்கின்றானே ?
நீ அவனை புகழ்ந்தாயா ?
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
மாஷா அல்லாஹ் !
ReplyDeleteமனித உரிமைக்காவலரின் கவிதை அனைவரையும் சிந்திக்க வைக்கும் !அல்லாஹ்வின் மீது பற்று அதிகரிக்க வைக்கும் !!
இறைவன் நாடினால் ! தொடரட்டும்...
Excellent masha allah
Deletemasha allah
ReplyDeletemasha allah
ReplyDeleteஅருமையான கவிதை வாழ்த்துக்கள்...
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்...................
ReplyDelete