.

Pages

Saturday, October 27, 2012

[ 6 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...

தள்ளு வண்டி தள்ளி நாளும்...!
பிழைத்து வந்த பழனியாண்டி..!
பழங்கள் பல விற்று
பணம் காசு பார்த்து வந்தான் 
பலம் கொண்ட முரடனின்
தொல்லைகள் வந்திடவே 
போலீசில் புகார் செய்து 
நிம்மதியாய் வீடு வந்தான் 
மறுநாள் ..விம்மி அழுதான் ஏன்..?

கல்லூரி சென்று வந்த கீதா
நாள் தோறும் இளைஞனின் சீண்டல் 
சினம் கொண்டு எதிர்த்தாலும் 
தொல்லைகள் தீர வில்லை 
போலீசில் புகார் செய்தாள்
மறுநாள் மனமுடைந்து அழுதாள் ஏன்..?

மூக்காயி...சேர்த்து வைத்த 
முன்னூறு ரூபாய் களவு போக 
மூக்கை சிந்தி அழுதவாறு 
போலீசில் புகார் செய்தாள் 
புகார் செய்த மறுநாளே 
மாரடித்து அழுது புரண்டாள் ஏன்..?

பழனியாண்டி ..முரடனிடம் .
பறிகொடுத்தது ..சில ரூபாய் 
போலிஸ் கேட்ட கையூட்டு பலநூறு 
பதறி அழுதான் பழனியாண்டி..!

கல்லூரி சென்று வந்த கீதாவுக்கு 
இளைஞனிடம் கேலி மட்டுமே...!
பாது காப்புக்கு கற்ப்பை விலை கேட்ட 
போலிசின் கொடூர காம பசி கண்டு 
பதறி அழுதாள்...!

முன்னூறு பரி கொடுத்த 
மூக்காயி இடம் மூன்றாயிரம் 
பேரம் பேசிய போலிசின் 
நிலை கண்டு பதறி அழுதாள் 
புகாரினை பெற்றுக்கொள்ள 
போலிசின் நிலை தன்னை  
விவரிக்கும் கவியாக 
இந்த "ஏன் அழுதாய் "கவியாகும்

அதிரை சித்திக்
‘அழும் குரல்’ தொடரும்...
[ ஐந்தாவது அழும் குரலை கேட்க ]

8 comments:

  1. பட்டுக்கோட்டை பாட்டுப் போல எளிமையாகவும் கருத்தில் வலிமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  2. சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுகின்றன

    இறைவன் நாடினால் ! தொடரட்டும்...

    ReplyDelete
  3. பதிவுக்கு முதலில் நன்றி.

    அழுகையில் பல வகை உண்டு, இத்தனை நாட்களில் அழுததைவிட இது ஒரு வித்தியாசமான அழுகை.

    அடுத்தது என்ன மாதிரியான அழுகை?

    அன்பின் தம்பி அதிரை சித்திக் அவர்களின் இந்த படைப்பு படிப்பதற்கு இனிமையாக இருந்தாலும் மனதை நெருடவும் செய்கின்றது.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ......................................................

    ReplyDelete
  4. எளிமையா புரியும்படி இருக்கு... லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று

    ReplyDelete
  5. கனடா கவிஞரின் பாராட்டைப் பெற்ற அமெரிக்காவில் வாழும் அதிரைத் தமிழூற்று சித்திக் அவர்கட்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கவிதை மூலம் அழுது..அருமையாக,எளிமையாக,கருத்தினை,
    பதிவு செய்துள்ளார்.

    சித்திக் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!!!!!!

    ReplyDelete
  7. அழுகையில் பல வகை உண்டு, இத்தனை நாட்களில் அழுததைவிட இது ஒரு வித்தியாசமான அழுகை.


    எளிமையா புரியும்படி இருக்கு... லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

    சித்திக் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!!!!!!

    ReplyDelete
  8. கவிதை நாயகர்கள் ..

    அதிரை சொந்தம் ....

    கனடா வாழ் கவிஞர்

    புகாரி அவர்களின் வாழ்த்து ..

    கவியன்பன் கலாம் காக்காவின்

    வாழ்த்து ..என் கவியை

    சுய பரிசோதனை செய்ய சொல்கிறது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers