.

Pages

Friday, October 12, 2012

திருச்சி : புத்தக கண்காட்சியில் நான் !!!


11/10/2012 அன்றைய தின நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் மிகப்பிரமாண்டமான புத்தக கண்காட்சியில் கலந்துகொள்வது என்று முடிவு செய்தேன்.

கரண்ட் இல்லாத ஊரில் எப்படி நம்முடைய பணிகளை மேற்கொள்வதென்று எண்ணினாலும் சீனக் கம்பெனிகளும் தொழிலாளர் விடுமுறையில் இருந்து வருவது எனக்கு பயணத்தை மேற்கொள்ள தூண்டுதலாக இருந்தன.

பொதுவாக புத்தக கண்காட்சி நடைபெறும் இடங்களில் வாடிக்கையாக கலந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருக்கும் நான் திருச்சியை நோக்கி பயணமானேன். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் வந்தவுடன் எனது இரு சக்கர வாகனத்தை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தினேன். அதிகபட்ச வாடகையாக ரூ 7 வசூல் செய்யபட்டு வருவது நமக்கு அதிர்ச்சியளித்தாலும் மூலப்பொருட்களின் விலையேற்றம் என்ற காரணத்தினால் உயர்த்தினோம் எனச் சொன்னாலும் சொல்வார்கள் !? என்ன செய்வது ? நாட்டின் நிலைமை அப்படி உள்ளது ! 

இதன் தொடர்ச்சியாக எனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்தில் பயணமானது எனக்கு சலிப்பை ஏற்படுத்தின. காரணம் ஒரே கூட்டம் ! [55+2] என்ற அரசின் விதிமுறை இருந்தாலும் அவற்றை பின்பற்றாமல் !? நிறுத்தும் இடங்களில் எல்லாம் ஆடு மாடுகளைப் போல் கூட்டத்தை ஏற்றிச் செல்வது ‘வசூல்’ மட்டும்தான் அவர்களின் பிரதான குறிக்கோள் என எனக்கு நன்கு புலப்பட்டது.



ஒருவழியாக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தடைந்த எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன அங்குள்ள மிகப்பிரமாண்டமான மூன்று அரங்குகள். நுழைவாயிலை சென்றடைந்தவுடன் பல்வேறு பதிப்பகத்தார்களின் ஸ்டால்கள் அங்குள்ள அரங்கில் வரிசைப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் அதில் இடம்பெற்றிந்தன.

மின் விசிறிகள் இருந்தும் அரங்கில் ஒரே புழுக்கமாக இருந்தாலும் கீழ்க்கண்ட புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன.

மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் [ஸ்ல்]
வட்டி – ஓர் உயிர்க்கொல்லி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், மாசுக்கட்டுப்பாடும்
கைது செய்யும் குற்றங்களும், கைது செய்யப்படாதக் குற்றங்களும்
ரிலாக்ஸ் ப்ளீஸ்
யார் கட்டுவது பூனைக்கு மணி ?
போஸ்ட் மார்ட்டம் [ மருத்துவ இதழ் ]
Shadow of Tamil Documents

ஆகிய புத்தங்களை வாங்கினேன்.
இரு முறை அரங்கைச் சுற்றி புத்தகங்களை பார்வையிட்ட நான் 
அங்குள்ள இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்- சென்னை என்ற பதிப்பகத்தில் நமதூர் பிரபல எழுத்தாளர் – தமிழ் அறிஞர் அதிரை அஹமது அவர்களின் புத்தகங்கள் அதில் இடம்பெற்றிந்தது எனக்கு மிகவும் மகிழ்வை தந்தன. இதுபோல் நமதூர் பிரபல எழுத்தாளர்களின் அனைத்து புத்தகங்களும் இதுபோன்ற கண்காட்சியில் பங்குபெற வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது/எழுதுவது தொடரவேண்டும்.

குறிப்பு : பதிவின் தலைப்பு "புத்தக கண்காட்சியில் நான்" என்றாலும் இப்புகைப்படத்தில் நான் எதிலும் இடம்பெறவில்லை :)

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

5 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    அன்பின் தம்பி நிஜாம் அவர்களின் புத்தகக் கண்காட்சியை நோக்கிய பயணம். இந்த சிறு கட்டுரை என் மனதை ஒரு அலசு அலசியது.

    வாழ்க உங்களின் பல நன்மையுள்ள தொண்டுகள்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    HO Palayankottai TN.,
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    *************************************************************************************

    ReplyDelete
  2. தேனை நாடும் தேனியை போல்
    அறிவை நாடும் நிஜாம்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. புத்தகப்பரனில் 'ஆசிரியர் ஷேக்கனா .எம்.நிஜாம் ' என்று ஏதாவது
    தென்படுதா எனத்தேடுகிறேன்.
    வாழ்க-வளர்க வளமுடன்,
    -ராஃபியா,
    ஜித்தா.

    ReplyDelete
  4. We shouldn't miss those event in order to gather knowledge, good nijam

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers