நமது பாரதப் பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் கீழ் சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கும் நீடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 55 கோடி நிதி ஒதிக்கிடு செய்யப்பட்டுள்ளன.
மதரஸாக்களில் தொடக்க கல்வி தரத்திற்கான திட்டம் :
[ Scheme for Providing Quality Elementary Education in Madarasa ]
மதக் கல்வி போதிக்கும் மதரஸாக்களில் அறிவியல், கணிதம், சமூகவியல் மற்றும் மொழி போன்ற பாடங்களையும் சேர்த்து கற்பிக்கப்பட்டால் ஆசிரியர்களுக்கான சம்பள செலவீனம் மத்திய அரசால் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மதரஸாக்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை :
1. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சம்பள உதவித்தொகை [ பட்டப்படிப்பு ஆசிரியருக்கு பிரதி மாதம் ரூ 6,000/- , முதுநிலைப் பட்டப்படிப்பு ஆசிரியருக்கு பிரதி மாதம் ரூ 12,000/- , அதிகபட்சம் மூன்று ஆசிரியர்களை நியமிக்கலாம் ]
2. மதரஸாக்களில் பாட நூல் வாங்குவதற்காக ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ 50,000/-
3. அறிவியல், கணிதம், சமூகவியல் போன்ற பாடநூல் வாங்குவதற்கு ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் உதவித்தொகை ரூ 5,000/-
4. அறிவியல் உபகரணங்கள், கணித உபகரணங்கள் மேலும் கற்றுக்கொடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உதவித்தொகை ரூ 15,000/-
5. அறிவியல், கணிதம், கம்யூட்டர் ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு ரூ 100,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
6. ஆய்வுக்கூடத்தை பராமரிப்பதற்காக உதவித்தொகை ரூ 5000/- வருடம்தோறும் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் :
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர்,
சென்னை – 600 006
தொலைப்பேசி : 044-28271169
Ministry of Human Rights Development,
Department of Higher Education, Govt. of India
Shastri Bhavan, New Delhi
அரசாங்கம் சிறுபான்மையான நமக்கு நிறைய செய்கின்றன, அதை எப்படி பெறுவது என்பதில்தான் குழப்பமே, நிஜாம் நீ அதை முழுமையான செயல்ப்டுத்துகிறாய், நற்கூலி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும், தொடர்ந்து செய்....
ReplyDeleteவிழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்.உடன் இம்மடல்/ஆக்கம் நம்மூர்த் தன்னார்வ அமைப்புகள், முஸ்லிம் இயக்கங்கள், பைத்துல் மால் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஆகியோர்கட்கு நீங்கள் இதனைப் பிரதி எடுத்து அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்; இதில் பைத்துல் மால் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஊடகவியலாராக நியமிக்கப்பட்டிருக்கும் நீங்கள் சொன்னால் அவர்களும் உறுதியாக -உடனடியாகச் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
ReplyDeleteதேடிப்பிடித்து தகவல் தருவதில்
ReplyDeleteதம்பி நிஜாமின் விழிப்புணர்வு பக்கங்கள்
முன்னிலையில் உள்ளது என்பது மிகையாகாது
கவியன்பன் காக்கா அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்