.

Pages

Sunday, October 7, 2012

சந்திப்பு : ‘இயல்வாணர்’ அதிரை அண்ணா சிங்காரவேலு [காணொளி]


முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல்’ என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகும். உணர்வு மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இவற்றை நாம் பயன்படுத்தி பிறர் பயனடையச்செய்யலாம்.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. பேச்சுக் கலைப்பற்றி....
2. பேச்சில் நகைச்சுவை...

ஆகிய கேள்விகளுடன் அதிரை அண்ணா சிங்காரவேலு  அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

அதிரை அண்ணா சிங்காரவேலு அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
பேச்சாளராக இருக்கும் இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாடி வருகின்றார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பேச்சரங்க நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழைப்பின்பேரில் சந்தித்து பாராட்டைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கைத்துறையோடு நெருங்கிய தொடர்புடைய இவர் 'நதியோர மரவேர்கள்', 'சிறகு முளைக்காமலே', 'இந்தப்பகலும் விடியட்டும்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

5 comments:

  1. நண்பர் சிங்காரவேலனை பார்க்கும்போது பள்ளிக்கூட நாட்களில் பார்த்த அதே முகம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். எப்போதும் கலகலப்பாக பேசுவதுடன் பக்கத்தில் அவர் வந்து நின்றாலே அந்த இடமே மகிழ்ச்சியாக மாற்றிவிடக்கூடிய அசாத்திய திறமை படைத்தவர்.

    பின்னாலில் பேராசிரியர் ஆனது எனக்கு தெரிந்திருந்தாலும், அரட்டை அரங்கத்தில் அவரும் ஒரு அங்கம் என்று காணொளியில் பார்த்து சந்தோசம்.

    சகோதரர் சேக்கனா எம். நிஜாம் அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது. Well Done Brother keep it up.

    ReplyDelete
  2. தம்பி நிஜாம் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிரையின் மண்ணில் பிறந்த அசாத்திய திறமையாளர்களை இணையதளத் திரைக்குக்கொண்டுவந்து அறிமுகப்படுத்துவதை பாராட்டுகிறேன்.

    தம்பி அண்ணா சிங்காரவேலு அவர்களுடைய ரசிகர்களில் நானும் ஒருவன். நமது ஊரில் இருக்கும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை, கலந்துரையாடலை அடிக்கடி எற்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு இது ஒரு ஆரம்பமாகக்கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நிஜாம் அவர்களே சிங்காரவேலனை சிங்காரிக்கின்றீர் அபுல் கலாம்கலை ஆராதிக்கின்றீர் செல்லுங்கள் உங்கள் வீருனடையை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அதிரைக்கு பெருமை சேர்த்த
    பேராசிரியர் சிங்காரவேலனுக்கு
    நிஜாம் அவர்கள் பெருமை சேர்த்தது
    பாராட்டுக்குரியது ..

    ReplyDelete
  5. தமிழர்கள் மத்தியில் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருக்கும் இவரின் எளிமை என்னை வியக்கவைத்தன !

    வாழ்த்துகள் சகோதரருக்கு !

    உங்களின் படைப்புகள் அனைத்தும் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியன அமையப்பெற்றுள்ள பேச்சுகாக/எழுத்தாக இருக்கட்டும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers