.

Pages

Tuesday, October 9, 2012

சந்திப்பு : ‘ஆசிரியர்’ வீரமுத்து அவர்கள் [காணொளி]


இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, சராசரியாக 74 சதவீதமாக உள்ளது. இவற்றை மேலும் வளர்க்க வேண்டுமென்றால் நம்மில் கல்வி நன்கு கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும்.

‘சந்திப்பு தொடருக்காக....

1. மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு ?
2. மாணவர்களின் ஒழுக்கம் ?

ஆகிய கேள்விகளுடன் ‘ஆசிரியர்’ வீரமுத்து அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

‘ஆசிரியர்’ வீரமுத்து அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த 15 ஆண்டுகாலமாக ஆசிரியப்பணியை மேற்கொள்ளும் இவர் அரசுப் பொதுத்தேர்வில் நூறு சதவீதத்தை பெற்றுத்தந்துள்ளவர். ‘நதி’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதேயே குறிக்கோளாகக் கொண்ட இவர் ‘செந்தமிழ் இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பில் செயல்பட்டவர் ஆவார்.

கடந்த ஆசிரியர் தினத்தன்று ‘நெறிமிகு ஆசான்' விருதினை தட்டிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

4 comments:

  1. தகுதியான பதிவுக்கு முதலில் நன்றி.

    ஆசிரியர் திரு வீரமுத்து அவர்களை நான் நன்கு அறிவேன். பெயருக்கு ஏற்றார்போல் அவர்களுடைய அனுகுமுறைகளும் அப்படி இருக்கும்.

    ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக மாணவச்செல்வங்களுக்கு நல்லதை விதைத்த வண்ணம் இருக்கின்றனர்.

    நல்ல மண்ணில் விழுந்த விதை சுலபமாக முளைக்கும்.

    கொஞ்சம் கடினமான மண்ணில் விழுந்த விதை தாமதமாக முளைக்கும்.

    பாறையில் விழுந்த விதை அதிகம் சிரமப்படும்.

    விதைப்பது நம்கடமை.
    முளைப்பது அதுகடமை.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    Head Office Palayankottai. TN.,
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    **************************************************

    ReplyDelete
  2. இவருடன் பயின்ற மாணவர்களில் நானும் ஒருத்தன்.........
    ஆசிரியர் வீரமுத்து அவர்கள் "பணி,ஒழுக்கம்,கண்ணியம்" ஆகியவற்றில் மிகவும் சிறந்தவர்..........அப்படிப்பட்ட ஆசிரியரிடம் நான் பயின்றிருக்கிறேன் என நினைக்கும் போது மனம் குளிர்ந்த பெருமை அடைகிறேன்......
    ஆசிரியர் வீரமுத்து அவர்களுக்கு வாழ்துக்கள்...
    ______________________________________
    J.M முஹமது நிஜாமுதீன்,(www.nplanners.webs.com)
    s/o K.M.A JAMAL MOHAMED

    ReplyDelete
  3. சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிகழ்ச்சியொன்றில் இவருடைய சமூக விழிப்புணர்வுத் தூண்டும் நாடகம் ஒன்றை மேடையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றியதைக்கண்டு வியந்தேன்.

    வாழ்த்துகள் ஆசிரியருக்கு...

    உங்களுடைய இச்'சந்திப்பு'பதிவை போடச்சொல்லி உங்களிடம் கல்வியை கற்ற மாணவர்கள் பலர் அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஆசிரியருக்கு...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers