kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, November 12, 2012
[ 11 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...
செல்ல மகனே நீ..!
பிறந்த நாள் முதல்
உன் சிரிப்பில் என் மகிழ்வு
நீயே என் உலகம்
ஓர் வயது முதல் ஐந்து வரை
என் மடியே உன் இருப்பு
உன் ஆசை எதுவானாலும்
மறு நொடியே தீரும்… நீ
பள்ளி சென்று திரும்பும்
சில மணி நேரம் எனக்கு பல வருடம்
உன் சிரிப்பு என் பூரிப்பு
ஒன்று முதல் ஒன்பது வரை
தேர்வு பெற்ற சிரிப்பில்
உன் அறிவின் வெற்றி என்று
அகம் மகிழ்ந்து போனேன்
சிறு வயதில் விளையாட பொம்மை தந்தேன்
சில காலம்...
காலம் செல்ல உன் தேவை அதிகரிக்க
மன நிறைவாய் நான் தந்தேன்
கையடக்க வானொலி என்றாய்
மறு நிமிடமே உன் கையில்
நவீன கண்டு பிடிப்பு அன்றாடம்
உன் கையில் கைய்யடக்க
பதிவு நாட முதல் மடி கணணி வரை
உன் ஆசை நிறை வேற்றினேன் நான்…!
செல்வத்தின் செல்லம் நீ...!
என் அழுதாய்...? என் மகனே..!
நான் வளர்ந்த விதம் நான் அறிவேன்
ஒன்று முதல் ஒன்பது வரை
நான் பெற்ற வெற்றி..!
நம் மனம் கோனா வண்ணம்
வாத்தியார் தந்த வெற்றி
செல்வத்தின் செல்லம்
நம் வீடு வரை தான்
பத்தாம் வகுப்பு வந்தும்
அறிவு தேட்டம் அறியா நான்
அன்பு வலைக்குள் அடைபட்டு கிடந்தேன்
அதட்டலும் சிறு அடியும்
அறிவை பட்டை தீட்டும்
என்பதை அறியா நீ
அன்பை மட்டும் அள்ளி தந்தாய்
பத்து வகுப்பு வரை என்னை
பொத்தி பொத்தி வளர்த்தாய்
அதில் குறை ஒன்றும் இல்லை அம்மா
நேரங்கள் பொன் போன்றது
என்பதை அறியா நான்
பொழுது போக்கி கழித்து விட்டேன்
பாடங்கள் படிக்காமல்
படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எனக்கு
பேரிடியாய் அமைந்ததுவே
அடைந்து விட்டேன் படு தோல்வி
அதனாலே அழுதேன் தாயே…!
இனி எழுவேன்...வெல்வேன்...
வெற்றி பெறுவேன் உழைப்பால்...!
அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
மாணவச் செல்வங்களுக்கு ஏற்றோதொரு கவிதை
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
அருமை... தன்னம்பிக்கையை தரள விடாமல் இருத்தால் சரி...
ReplyDeleteபதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஅருமை... தன்னம்பிக்கையை தரள விடாமல் இருத்தால் சரி...
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அன்பு சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ..அவர்கள்
ReplyDeleteவருகை இதல்திற்கு வலிமை சேர்க்கிறது வருகைக்கு நன்றி
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
செல்வத்தின் செல்லம் நீ...!
ReplyDeleteஏன் அழுதாய்...? என் மகனே..!
அருமையான வரிகள் அனைத்துக்கும் ஒருவர் அவர்தான் நமது அதிரை சித்திக்.வாழ்த்துக்கள்
படிப்பை ஊட்டாமல் பாசத்தை
ReplyDeleteமட்டும் ஊட்டி வளர்த்தால்
இதுதான் முடிவெண்பதை
அழகாய் சொல்லியமைக்கு
வாழ்த்துக்கள்