என் நெஞ்சம் அது இன்று புண்ணாச்சி,
வெளி நாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி
நித்தம் அதை நினைத்து நினைத்து வெம்புகின்ற மனசே...
தூக்கம் இன்றி புறண்டு கண்ணீர் சிந்தும் விழியே
நெஞ்சில் வேதனை வாழ்வில் சோதனை சேர்ந்திருக்க
எத்தனை வண்டி எத்தனை வேலை போவதும் வருவதும்
பிடிக்கவே இல்லை சம்பளம் இல்லை சாப்பாடு தொல்லை
நினைக்கையில் இருக்கவே விருப்பம் இல்லை.
மூளை கெட்ட ஒரு வேலைதான் வந்தது என்றும் இனி போகாது சோகம்
அது தன்னந் தனியா நான் ஏறி வந்தது, இன்று வெறும் சோகமாய்
ஆனது அதை எண்ணி எண்ணி மனம் நாட்டு நினைவில் பாடு படுதப்பா
ரோட்டிலே வேலை மேட்டிலே வேலை ஒரு சிலர் படுவதும் பெரும் அவதி
பார்க்கவும் இயலா தாங்கவும் இயலா கொடுப்பதோ கையிலே குறைந்த நிதி,
கேடு கேட்டு போனாலும் நாட்டோடு போ,
இங்கு வந்து சாகாமல் வீட்டோடு போ
இங்கு ஒன்றும் சேராது நீ எண்ணிக்கோ,
நல்ல நிலை நான் சொல்லுகிறேன் நீ கேட்டுக்கோ,
உன் அன்பு மனைவியும் செல்லக் குழந்தையும் பாவம்மா
என் நெஞ்சம அது இன்று புண்ணாச்சி,
வெளிநாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி
குறிப்பு : இது எல்லோருக்கும் பொருந்தாது, அடிமட்ட சம்பளத்துக்கு வந்து அவதிப்படுவோருக்கு மாத்திரம் எழுதப்பட்டதாகும்.
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
நல்லதொரு விழிப்புணர்வு !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்....
நமது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம் என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது “பாஸ்போர்ட்” எடுப்பதற்கே !
பயணமாகி அங்கே வசிக்கும் உங்களால்
1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ?
2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?
3. ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறீர்களா ?
4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?
5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?
சகோதரர்களே சிந்தியுங்கள் !
கீழ்க்கண்டவற்றில் நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது ?
1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.
2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.
3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.
4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.
5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.
ஆக என்ன ஒரு அனுபவம் கொண்டு எழுதி இருக்கிறார் நமது ஜமால் காக்கா அவர்கள் இதில் சொல்லப்படும் வார்த்தைகள் எல்லாம் உண்மை இருந்தும் நாம் போக மனமில்லை.வெளிநாடு வந்த பிறகு தான் படிப்பின் அருமையே உணர்கிறோம்.வாழ்த்துக்கள் பதிவுக்கு.
ReplyDeleteஇதை நினைத்து அதை விட
ReplyDeleteஅதை நினைத்து இதை விட
இக்கரைக்கு அக்கரை பச்சை
இதையே வாழ்வாக்கி காலம் போச்சு
மனக்குறைக்கு மாற்று மனைவி
பாசத்திற்கு பிள்ளைகள்
நேசம் தரும் நண்பர்கள்
இருக்கும் இடம் நிம்மதி
கிடைத்த இடம் சிறப்பு
Nice
ReplyDelete