.

Pages

Wednesday, November 21, 2012

[ 14 ] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்’ தொடர்கிறது...

குளிர் பிரதேசம்...
உன் பிறப்பிடம்...
பசும் சோலையோ
உன் இருப்பிடம்...
வானுயர வளர்ச்சி...
உன் இயற்கை...
தன் துயர்... பிறர் கானா வண்ணம்
செழிப்பாய் காட்சி தரும்
ரப்பர் மரமே....
தினம் உன் உடல் கீறி
ரணம் [ ரப்பர் ] எடுத்து...
உயிர் பிழைக்கும் மனிதர்
நீ என்றும் நீ அழுததில்லை
வனத்தை வனப்பாய் ஆக்கிய நீ
ஏன் அழுதாய் இன்று...
இதோ ரப்பர் மரத்தின் பதில்கள்...
தினம் என் நெஞ்சை கீறி
பணம் பார்க்கும் மனிதா...
உனக்கென உழைக்கும்
தொழிலாளி படும் அவலம்...
நான் அறிவேன்... இலை சருகுகளும்
தண்ணீர் கலந்த சருகுகளும்
சகதியாய் மாறி கிடக்க
காணு கால் அளவு சகதியில்
நீ நடக்க புழுவும் பூச்சியும் அட்டையும்
நெளியும் போது நீ நடந்து
ரப்பர் எடுக்கும் போது
உன் உடலில் அட்டை இரத்தம் எடுக்கும்
அட்டை உன் உடம்பில்
இரத்தம் உறிஞ்சியது போதாது என
உன் முதலாளி உன் உழைப்பை உறிஞ்சி
கால தாமதமாக குறைந்த ஊதியம் தன்னை
கால தாமதமாக உனக்கு தரும் நிலை
நான் அறிவேன்...
எனை கீறி பணம் பார்க்கும்
மனிதரை கண்டேன்... மனிதரின்
மனம் கீறி பணம் பார்க்கும் மனிதரால்
மனம் அழுதேன்... சிலர் எடுக்கும் சினிமா
பலர் நோகும் நிலையாகும்...
உலகில் வாழும் பல கோடி மக்கள்
மனம் நோகி பணம் பார்க்கு
நிலை கண்டு அழுகிறேன்...

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ பதிமூன்றாவது அழும் குரலை கேட்க ]

7 comments:

  1. சமூகத்தில் அவதியுறும் ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் நிலையை தன் கவியால் வடித்துள்ளார்.

    வாழ்த்துகள் !

    அதிரை சித்திக் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்
    ஏன் அழுதாய்...? அழும் குறல்கள் கவிதையாக தொடர வேண்டும்... இறுதியில் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். இறைவன் நாடினால் ! அதற்குரிய எனது பங்களிப்பு நிச்சயமாக இடம்பெரும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.

    சமூகத்தில் அவதியுறும் ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் நிலையை தன் கவியால் வடித்துள்ளார்.

    வாழ்த்துகள் !

    அதிரை சித்திக் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்
    ஏன் அழுதாய்...? அழும் குறல்கள் கவிதையாக தொடர வேண்டும்... இறுதியில் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். இறைவன் நாடினால் ! அதற்குரிய எனது பங்களிப்பு நிச்சயமாக இடம்பெரும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. 14 ஆம் ஏன் அழுதாய்... ஏழைத்தொழிலாளியின் அவல நிலையை அழகாக சொல்லி இருக்கிறார் சகோதரர் சித்திக்

    அழுகையுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்ட இருகின்றது நம் மனதில் இதை படிக்கும் போது அழகாக சொல்லி இருக்கிறார் சகோதரர் சித்திக் வாழ்த்துக்கள்.

    இன்னும் நமக்குள் இருக்கும் அழுகை எத்தனை?

    ReplyDelete
  5. அன்பு தம்பி நிஜாம்
    தங்களின் தாரமிக ஆதரவிற்கு நன்றி
    அதை வழிமொழிந்த ஜமால காக்கவிற்கும் நன்றி
    சகோ அதிரை மெய்சா சகோ ஹபீப் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. மிக மிக அருமை
    பாம்பின் கால் பாம்பறியும் மட்டுமல்ல
    துன்பப்பபடுபவன் துன்பத்தையும்
    துயர்படுபவந்தான் முழுமையாக அறிவான்
    மனம் தொட்ட படைப்பு
    தொடா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அழும் குரல் கலங்க வைக்கிறது...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers