தண்ணீரின் அருமையை பற்றியும் மகத்துவத்தை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இலார், அந்த அளவுக்கு தண்ணீரின் பயன்பாட்டை மனித இனம், விலங்கினம் மற்றும் தாவரினம் அனைத்தும் பெற்று வருகின்றன.
விலங்கினங்களும் தாவரினங்களும் தண்ணீரை வெகு சிக்கனமாக உபயோகித்துக் கொள்கின்றன, ஆனால் ஆறு அறிவு பெற்ற மனிதனுக்கு மற்றும் அடிக்கடி தண்ணீரின் சிக்கனத்தைப்பற்றி சொல்ல வேண்டியதாயிருக்கு.
நம்மில் பலருக்கு தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லரை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அனேகம்.
தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோரும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடம்பில் சென்று சேர்கிற உணவு பிராண வாயு, ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் என்று பார்த்தல் அவை 83 சதவீதம் தண்ணீராகவே உள்ளது. உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது.
உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், வெப்பநிலையை சீராக வைத்துருக்கவும் தண்ணீர் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம சிரமப்படும், மலச்சிக்கல் வரும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் ஆங்காங்கே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் என்று அனேக உபாதைகள் வரும், சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
சிறுநீரின் நிறம் அடர்ந்த காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டில் தற்போதுள்ள நீர் வளமானது ஒருவருக்கு 1600 சதுர மீட்டர் அளவிற்குக் கிடைக்கிறது. பன்னாட்டு அளவில் 1700 சதுர மீட்டருக்கு குறைவான அளவை பற்றாக்குறையாக மதிப்பீடு செய்கிறார்கள். இது 1000 சதுர மீட்டராக குறைந்தால் அதனை நீர் வறட்சி நிலையாக மதிப்பீடு செய்கிறார்கள். நமது நாற்றில் தற்போது நீர் வளத்தைக் தருகிற 20 நதிகளில் 9 நதிகள் வறண்டு கிடக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர் ஆனால் நாம் பயன்படுத்தக்கூடிய தண்ணீரின் அளவு 4 சதவீதம்தான். அத்துடன் வேகமாக பொருளாதார வளர்ச்சி மற்றும் நகர்மயமாதல் காரணமாக தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் அளவுக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இன்று நமக்கு உலக அளவிலோ, தேச அளவிலோ, மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ, வட்ட அளவிலோ ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை, முதலில் நமதூரைப் பற்றி ஆராய்வோம் பின்பு படிப்படியாக நகர்ந்து போவோம்.
நமதூரை எடுத்துக்கொண்டால் இன்றைய நிலையில் நீரின் தேவை மிக மிக அதிகம், காரணம் பச்சை மரங்கள் இருந்த இடத்தில் எல்லாம் பல வண்ணங்களில் உருவான வீடுகளின் ஆதிக்கம் தான், மக்கள் பெருக்கம் ஜனப்பெருக்கம் போன்ற காரணங்களினால் புதுப்புது இருப்பிடங்கள் தேவைதான்.
நாம் இப்படியே பெருக்கிக் கொண்டே போகின்றோமே தவிர அதற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பற்றி சிந்திக்கிறோமா ? அல்லது அது குறித்து விழிப்புணர்வு கொள்கின்றோமா ?
நமதூரில் 90 சதவீதம் வீடுகளில் நீரை தேக்கிவைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்துகிறோம், அதாவது தேக்கியிலிருந்து நீரைப் பெறுவதற்கு குளியல் அறை, சமையல் அறை, படுக்கை அறை இன்னும் எத்தனையோ தேவையான இடங்களில் திறந்து மூடும் வசதியுள்ள நீர்குழாயை பொருத்தி இருப்போம்.
நாளடைவில் அந்த திறந்த மூடும் நீர்குழாய் தேய்ந்து மூடும் திறனை கொஞ்சம் இழந்துவிடும், இப்படியான நிலையில் அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு :-
இந்த கணக்கு ஒரு சராசரியாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் பத்து நீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், அந்த பத்து நீர்க் குழாய்களின் வழியே நீர் சொட்டு சொட்டாக வடிந்து வீணாகிறது, ஒரு நீர்க் குழாய் மூலமாக 10 விநாடிகளுக்கு ஒரு சொட்டு என்று கொண்டால், ஒரு நிமிடத்திற்கு 6 சொட்டுகள் , ஒரு மணிநேரத்திற்கு 360 சொட்டுகள், ஒரு நாளைக்கு சராசரியாக வீட்டின் நீரின் உபயோக நேரம் 10 மணி நேரத்தை கழித்துவிட்டு மீதி இருப்பது 14 மணி நேரங்கள். இந்த 14 மணி நேரத்தில் நீர் சொட்டுகள் வெளியாகின்றன, அப்போ 10 நீர்க் குழாய் வழியாக மொத்தம் 50,400 நீர் சொட்டுகள் வெளியாகின்றது.
இது ஒரு வீட்டுக்கு கணக்கிடப்பட்டது
தாகமெடுத்து குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்ற போது, நா வறண்டு போக, ஒரு சொட்டு நீர் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் எழும்போது நீரின் அருமை நமக்கு புரியும், முக்கால்வாசி நீரால் சூழப்பட்ட உலகத்தில் வாழ்கின்றோம், ஆனால் குடிப்பதற்கு நீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றோம்.
பச்சை நிறங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
பாவங்கள் நிறைந்து கொண்டிருக்கின்றன.
வறட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.
மரணத் தருவாயில் மரணப் படுக்கையில் இருப்பவருக்கு நீர் அருந்த வேண்டும் என்ற தாகம் இருக்கும், அருகில் இருப்பவர்கள் நீரை சொட்டு சொட்டாக அவர் வாயில் ஊற்ற முயற்சிப்பார், ஆனால் நீர் உள்ளே செல்லாது.
எல்லா வற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லும் மனிதன், அந்த இறைவன் உனக்கு ஞானத்தை கொடுத்தது எதற்காக ?
சிந்திப்போமா ?
விழிப்புணர்வு அடைவோமா ?
மாணவச் செல்வங்களே உங்களுக்கும் தான், கன்னத்தில் கைவைப்பதை எடுத்துவிட்டு இன்று முதல் சிந்தித்து செயல்பட உங்களால் முடியாதா ?
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !
ReplyDelete“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”
தண்ணீருக்காக எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்...
இன்று முதல் நாம் அனைவரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அவற்றை சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம்
காலத்துக்கேற்ற, தேவையான விழிப்புணர்வுக் கட்டுரை. எங்கள் ஊரில் தெரு தெளிக்க ரப்பர் குழாய்! இப்படி வீணடிக்கிறார்களே என்றிருக்கும். வாசல் மட்டுமல்ல, காம்பௌண்ட் சுவரை எல்லாம் கழுவி விடுவார்கள் - தினமும்!
ReplyDeleteஅவரவர்கள் தங்களுக்குள்ள கடமையை உணர வேண்டும். இல்லாவிடில் தண்ணீரும் கிடைத்தற்கரிய பொருளாய் விடும்.
ஒவ்வொரு சொட்டு நீரும் சேமிக்கப் பட வேண்டும்.
நல்ல கட்டுரை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்!
வருங்காலத்தில் உலகமே அச்சப்படப் போகும் விஷயம் தண்ணீர் தான்...
ReplyDeleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ...இல்லை... இல்லை... உணர வேண்டிய தகவல்கள்...
நன்றி...
அமீரிகத்தில் தன்ணீரின் சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு விளம்பர போர்ட் நிறைய இருக்கும்...
ReplyDeleteஅருமையான ஒரு விழ்ப்புணர்வு ஆக்கம் .தந்தமைக்கு நன்றி. நம் உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ அதே அளவுக்கு உயிர் வாழ அவசியமானது தண்ணீர். . அனைவரும் அறிந்ததே .ஆனால் நாம் தண்ணீரை கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் தான் செலவு செய்கிறோம். கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.
ReplyDeleteஉதாரணம் அருமை.அருமையான ஒரு விழ்ப்புணர்வு ஆக்கம்
ReplyDeleteஇன்று முதல் நாம் அனைவரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அவற்றை சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம்.
நல்ல கட்டுரை கொடுத்ததற்கு பாராட்டுக்கள் K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு.
அமீரிகத்தில் தன்ணீரின் சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு விளம்பர போர்ட் நிறைய இருக்கும்... அது மட்டுமல்ல அமீரகத்தின் ஒரு பகுதியாக செயல்படும் சார்ஜாவில் வருகின்ற 28.11.2012 அன்று முதல் ஆறு தினங்களுக்கு தண்ணீர் இல்லையாம் இன்று பேப்பரில் வந்துள்ளது தண்ணீர் பிலான் சரி செய்ய இருப்பதாள் தண்ணீர் கிடையாது?
ReplyDeleteநல்ல கட்டுரை கொடுத்ததற்கு பாராட்டுக்கள் K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு.
ReplyDeleteஅனைவரும் அவசியம் படித்து மனதில்
ReplyDeleteபதித்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு
பயனுள்ள அருமையான பதிவை
அழகாக பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
காற்று எப்படி நமக்கு இறைவனால் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதோ அப்படியே நீரும் கொடுக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஇந்த பதிவுக்கு கருத்திட்ட அத்தனை நல்லுங்களுக்கும் என் நெஞ்சார்நத நன்றிகளும் பாராட்டுக்களும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அருமையான ஒரு விழ்ப்புணர்வு ஆக்கம் .தந்தமைக்கு எனதன்புத்தந்தைக்கு நன்றி. நம் உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ அதே அளவுக்கு உயிர் வாழ அவசியமானது தண்ணீர். . அனைவரும் அறிந்ததே .ஆனால் நாம் தண்ணீரை கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் தான் செலவு செய்கிறோம். கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.
ReplyDelete_______________________
ஏக்கத்துடன்.............
MOHAMED NIZAMUDEEN.J.M
S/O JAMAL MOHAMED.K.M.A
www.nplanners.webs.com