தொண்டனுக்கு குதூகலம்
தலைவனின் வெற்றிக்கு
துணிந்து அவன் உழைத்திட்டான்
உக்கிரமான உச்சி வெயிலில்
கட்சி கொடிபிடித்து
பாதகைகள் பல தூக்கி
சுவரொட்டிகள் பல ஒட்டி
வெற்றிக்கு உழைத்திட்டான்
உழைப்பு வீண் போகாமல்
அவன் கட்சி வென்றதுவே..!
நாட்கள் பல கடக்க
தொண்டன் பதறி அழுதான் ஏன்...?
தொண்டனின் சாலையோர
சில காணி நிலம் மந்திரியின்
கண்ணில் பட
மந்திரியும் தந்திரமாய்
அபகரித்தார் அவன் நிலத்தை
வெகுண்டெழுந்து எதிர்த்தும்
ஒன்றுமே உதவ வில்லை
தொண்டை கிழிய கோஷமிட்டு
மக்களிடம் சேர்த்ததை போல்
அவன் குறையை தலைமையிடம்
கதறியழுது சொன்னபோது
பாராமுகமாய் இருந்ததுவே
தேம்பி அழுதான் தொண்டனுமே...!
அதிரை சித்திக்
நாட்டில் நடக்கும் நய வஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன பத்திரிக்கைத்துறை நிபுணரின் கவிதை
ReplyDeleteஇறைவன் நாடினால் ! தொடரட்டும்...
பதிவுக்கு முதலில் நன்றி்
ReplyDeleteசேக்கனா M. நிஜாம்November 5, 2012 4:06 PM
நாட்டில் நடக்கும் நய வஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன பத்திரிக்கைத்துறை நிபுணரின் கவிதை
இறைவன் நாடினால் ! தொடரட்டும்...
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அதிரை சித்திக் ஒரு கவிதை மழை எழுதும் ஒவ்வறு வரிகளும் முத்து பதித்தது போல் நம் மனதில் பதிகின்றது.எனது பாராட்டுகள்.தொடரட்டும் உங்கள் கவிதை மழை.அல்லாஹு உதவியோடு.
ReplyDeleteஅரசியல் வேஷத்துக்கு கொடி புடிக்கும் சாதாரண ஓட்டு வங்கி தொண்டர்களுக்கு இது ஒரு மரண அடி, போய் புள்ள குட்டிகளை படிக்கவைங்கடே...
ReplyDelete