kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, November 8, 2012
[ 10 ] ஏன் அழுதாய்...? 'அழும் குரல்' தொடர்கிறது...
படகு காரில் பவனி வந்து
பங்களாவில் குடியிருக்கும்
பல்லு போன தாத்தாவும்
பாசமிகு பேரனும் பக்குவமாய்
கொஞ்சி மகிழ்ந்த நேரம்
பேரனுக்கு ஆசையாய் வாங்கி
வந்த ஐஸ் கிரீமை அன்புடனே
கொடுத்து மகிழ்ந்தார் தாத்தா
தாத்தா தந்த ஐஸ் கிரீமை
ஆசையாய் வாங்கிய பேரன்
வாய்க்கு செல்லு முன்னே
அம்மா அழைத்திடவே.. அங்கேயே
வைத்து விட்டு அம்மாவிடம்
சென்று வந்தான்
வந்து அவன் பார்த்த போது
ஐஸ் அதும் கரைந்ததுவே
கரைந்த ஐஸை பார்த்த போது
பேரனுமே அழுது விட்டான்
தாத்தாவும் தேம்பி தேம்பி
அலுத்து விட்டார்.. அழுத பேரன்
அழுகை நின்று.. ஏன் அழுதாய்
தாத்தா..? என பேரன் கேட்க
உனது ஐஸ் கரைந்தது போல்
என் இளமை அந்நிய நாட்டில்
உழைப்பிலேயே கரைந்த தப்பா
உன் பாட்டி இல் வாழ்வு
இல்லாமலேயே இறந்து விட்டால்
பணம் மட்டும் வாழ்க்கையல்ல
என்பதை நீ உணர்ந்து விடு
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
சமிபத்தில் இணையத்தில் கவிதை ஒன்றை வாசிக்க நேரிட்டது....
ReplyDeleteஅதில்,
வசதியாகத்தான் இருக்கிறது பெயரனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது !
முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன் !
இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன் !
இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று !
நல்லதொரு விழிப்புணர்வு !
ReplyDelete1. நமதூரில் இன்னும் வயதான தங்களின் தகப்பன்களை பணிபுரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் ஏராளமாகவே உள்ளது...
2. குறிப்பிட்ட வயதில் அவர்களின் முதுமை கருதி தங்களின் வீட்டில் ஓய்வு எடுக்க அனுமதிப்பது கிடையாது...
3. வயதானவர்களுக்கு தங்களின் வீட்டில் அதிகாலை நேரங்களில் அவர்களின் வயிற்றுப்பசிகளை ஆற்றுவதற்கு உணவுகளை கொடுக்க தாமதப்படுத்துவது...
4. வயதானவர்களை அவர்களின் முதுமை கருதி அவர்களுக்கு உரிய அன்றாட கடமைகளை செய்வது கிடையாது.
5. வயதானவர்களை அதிகளவில் நமதூரில் இருக்ககூடிய தர்ஹாக்களில் பார்க்கலாம்.
இன்னும் இதைபோல ஏராளமாக...
இன்று அவர்களுக்கு ! நாளை நமக்கு !!
சிந்தியுங்கள் சகோதரர்களே !
ஆக என்ன ஒரு நெகிழ்வு இந்த கவிதை தாத்தாவுக்கும் பேரன்க்கும் மட்டும் இல்லை இது வெளிநாட்டில் வாழும் நம்மளுக்கும் தான் இளமையே கழிக்கும் ஒவ்வோர்க்கும் தான்.அருமையான ஆக்கம் சதோர் சித்திக் அவர்களுக்கு என்ன மனமார்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்போதும் பல பேருக்கு கடைசி காலத்தில் தான் புரிகிறது...
ReplyDeleteபதிவுக்கு முதலில் நன்றி்.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்November 9, 2012 12:05 AM
இப்போதும் பல பேருக்கு0 கடைசி காலத்தில் தான் புரிகிறது...
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.