.

Pages

Thursday, December 13, 2012

[ 2 ] பூனைக்கு மணி கட்டுவது யார் ?

ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.

சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.

ஏறக்குறைய நான்காயிரம் வேதிப்பொருட்களை வேறு வேறு கூட்டணிகளில் பயன்படுத்திதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாத்திரைக்கு வெவ்வேறு கம்பெனிகளில் வேறு வேறு பெயர்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய "எங்கள் புராடக்ட்'களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்" என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.

டாக்டர்களே தாங்கள் நடத்தும் கிளினிக்கிள் மருந்துக் கடைகளை ஏற்படுத்தி சேவை செய்வது பரவலாகக் காணப்பட்டாலும்  மருந்து கடை நடத்துனர்களின் போட்டியால் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் டாக்டருக்கு 'பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், ஊக்கத்தொகை, இன்பச் சுற்றுலாவிற்கான பேக்கேஜ், அன்பளிப்புகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை அசத்தி விடுகின்றனர். இதனால் டாக்டரால் பரிந்துரை செய்யும் மருந்துகளை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை என்பது நமக்கெல்லாம் வியப்பைத் தந்தாலும் அரசால் நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிலோ, அல்லது கூட்டுறவு மருந்து கடை மூலமாகவோ M.R.P விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து கிடைப்பதுதான். 

மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே !? என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.

இறுதியாக 'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதால் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமானதொன்றாகும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'பூனைக்கு மணி கட்டுவது' தொடரும்...

9 comments:

  1. அருமையான ஆக்கம் காக்கா சேக்கனா M. நிஜாம் அவர்களின் இந்த படைப்பு மிக அருமை இதன் தலைப்பே சொல்லும் பூனைக்கு மணி கட்டுவது. மக்களுக்கு மணி கட்டுவது யார் என்று அருத்தம் வரும் ஏன் என்றால் மருந்துகள் வாங்கும் போது யாரும் விலை அறிவதில்லை. கடைக்காரன் சொல்லும் விலைக்கே நாம் வாங்கி விடுகிறோம்.அதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகமே.அதில் பாதி டாக்டர்களுக்கும் கொஞ்சம் பங்கு உண்டு.தெளிவாக விலக்கி உள்ளார் நமது காக்கா நிஜாம் அவர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.

    இந்த விஷயத்தில் மக்கள் முழுமையான விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே இதில் நாம் முழுவெற்றியை காணமுடியும். நிச்சயமாக காணமுடியும் சந்தேகமே கிடையாது.

    அப்புறம் என்ன? கல்ல மியாவ் மியாவுக்கு மணியென்ன சங்குதான்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    -------------------------------------------

    ReplyDelete
  3. விரிவான பல தகவல்கள் அடங்கிய கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தங்களின் முதல் வருகைக்கும்....கருத்துக்கும்...

      Delete
  4. இந்தளவு கவனித்து வாங்கும் அளவிற்கு (சிலரைத் தவிர) மக்களுக்கு நேரம் ஏது...? என்ன அவசரமோ எப்போதும்...!

    மற்றபடி நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும்...

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்கள்
    தொடரட்டும் இது போன்ற
    தகவல்கள் ..நன்றி ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல பதிவு
    அவசியமான பதிவு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  8. மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே !? என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.//மிகவும் உண்மையான அனைவரும் உணரவேண்டிய கருத்து நீண்ட நெடுநேரம் காத்திருந்து டாக்டரை அனுகினாலும் சாமி தரிசனம் போல நம் குறைகளை சொல்லிவிட்டு மட்டுமெ வெளி வரவேண்டிஉள்ளது. விபூதிக்கு பதிலாக மருந்து சீட்டு அவ்ளவே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers