kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, November 3, 2012
எது சுமை ?
பிறந்து இருப்போமா ?
சுமை என்று மரம் நினைத்து இருந்தால் ?
கனிகளை பெற்று இருப்போமா ?
சுமை என்று ஆசிரியர்கள் நினைத்து இருந்தால் ?
கல்வியை கற்று இருப்போமா ?
சுமை என்று காற்று நினைத்து இருந்தால் ?
சுவாசித்து இருப்போமா ?
சுமை என்று மேகம் நினைத்து இருந்தால் ?
நீரை பெற்று இருப்போமா ?
சுமை என்று பூமி நினைத்து இருந்தால் ?
இரவு பகலை கடந்து இருப்போமா ?
சுமை என்று எல்லாம் [கூடுமானது] நினைத்து இருந்தால் ?
எல்லாத்தையும் அடைந்து இருப்போமா ?
ஓ மனிதா !
எது சுமை ?
சுமை சுமை என்று காலத்தை தள்ளூகிறீயே !!
காலத்தை தள்ளுவது உனக்கு சுமையாக இல்லையா ?
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Subscribe to:
Post Comments (Atom)
மனித உரிமைக்காவலரின் அழகியக் கவிதை....
ReplyDeleteஇறைவன் நாடினால் தொடரட்டும்...
படத்திலுள்ள எறும்புகளைப் பாருங்கள்...சுமை என்று கருதிஇருக்குமானால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லதான் முடியுமா ?
“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பழமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.
இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !
மாஷா அல்லாஹ்...............
ReplyDeleteநல்லதொரு அருமையான ஆக்கம்...........வாழ்த்துக்கள் எனதன்பு தகப்பனாருக்கு......
ஆக என்ன ஒரு அழகான கவிதை. சுமை என்று நினைத்தால் இந்த பூமி நம்மளை தாங்கி இருக்குமா? ஜமால் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்...
ReplyDeleteசிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
தனபாலன் அண்ணன் சரியா சொன்னீர்கள்.
ReplyDeleteசுமைகள் முதுகிலே சுமையை ஏற்றிவிட்டூட்டிங்க ஜமால் காக்கா, வாழ்த்துக்கள்........
ReplyDeleteசுமை என்று எல்லாம் [கூடுமானது] நினைத்து இருந்தால் ?
ReplyDeleteஎல்லாத்தையும் அடைந்து இருப்போமா ?
வாழ்த்துக்கள்........
Nice
ReplyDeleteமனதில் உதித்தை இப்படி எழுதினேன்.
ReplyDeleteஇதை படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதும் ஒரு வகை சுமையே!!
அந்த சுமையையும் சுமை என்று கருதாமல் பின்னூட்டம் இட்டு இன்னும் என்னை ஆர்வமடையச்செய்த அத்தனை நல்லுங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.