.

Pages

Saturday, December 1, 2012

[ 1 ] ஏன் சிரித்தார் கவிஞானி…?

வாடிய முகம்...
வதங்கிய கண்கள்...
மெலிந்த தேகம்...
அடர்ந்த தாடி...
அடி எடுத்து வைக்க...
கையில் தடி...
அவர் தான் நம் கவிஞானி...!
சமூக அவலங்களை எண்ணி
அவர் நகைக்கும் காட்சியே...!
ஏன் சிரித்தார் கவிஞானி..?
என்ற கவி தொடர்...

இறுதி ஊர்வலம்...
சவம் சுமந்து செல்பவர்கள்
முகத்தில் சோகம்..!
சொந்தங்கள் தொடர்ந்து செல்ல
சவம் செல்லும் திசை பார்த்து
கவி ஞானி ஏளனமாய் சிரித்தார் ..
ஏன் சிரித்தார் கவிஞானி...?

அதிரை சித்திக்
சிரிப்பது தொடரும்...

10 comments:

  1. ஏன் சிரித்தார் கவிஞானி...?

    கவிதை அனைவரையும் போல் என்னையும் எதிர்பார்க்க வைக்கின்றன.

    தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. நாளை செல்வதற்கு...
    வழியை அறிய...(வோ...?)

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMEDNovember 28, 2012 9:40 PM

    பதிவுக்கு நன்றி.

    ஒருபக்கம் அழும் குரலின் வரிசைகள் ஓடிக்கொண்டிருக்கு.
    மறுபக்கம் ஏக்கத்தின் வரிசைகள் ஓடிக்கொண்டிருக்கு.
    இன்னொருபக்கம் சந்தோஷத்தின் வரிசைகள் ஓடுமா?
    சபாஷ், மொத்தத்தில் சரியான வரிகள்.
    பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    அன்று சந்தோஷத்தின் வரிகள் ஓடுமா? என்று வினவி இருந்தேன். வரிகள் ஓடிக்கொண்டிருக்கு.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.

    ReplyDelete
  4. இறுதி ஊர்வலத்தில் ஆரம்பித்து நம்மை இறுக்கமாக எதிர்பார்க்கவைத்து விட்டார் நமது கவிஞ்சர் அதிரைசாதிக்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மன்னிக்கவும் சித்திக் என்ற பெயரை தவறுதலாக சாதிக் என்று எழுதி விட்டேன்.

    ReplyDelete
  6. கவிதைவரிகள்... அருமை

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ..
    கவிஞானியின் சிரிப்புகளோடு
    தொடர்வோம் ..

    ReplyDelete
  8. கவிதைவரிகள்... அருமை அதிரை சித்திக் அவர்களுக்கு.

    ReplyDelete
  9. வாழ்த்துகள்.

    மகிழ்ந்த முகம்...
    சிமிட்டிய கண்கள்...
    வாலிப்பான தேகம்...
    சிறிது தாடி...
    அடுத்த அடி எடுத்து வைக்க...
    கையில் காகிதம்
    அவர் தான் நம் கவி.!
    சமூக முன்னேற்றகளை எண்ணி
    அவர் அடையும் மகிழ்ச்சியே ...!
    ஏன் மகிழ்ந்தார் கவிஞானி..?
    அதுவே அவர் கவிதைத் தொடர்...

    பாராட்டு ஊர்வலம்...
    வாழ்த்துப் பலகை சுமந்து செல்பவர்கள்
    முகத்தில் மகிழ்வு ..!
    சொந்தங்கள் தொடர்ந்து செல்ல
    செல்லும் திசை பார்த்து
    கவி ஞானி மகிழ்வாய் சிரித்தார் ..
    என் கவிதைக்கும் இத்தனை பாராட்டா என்று அதிசியத்துடன் ..?



    சேக்கனா M. நிஜாம் எப்போது வரும் !.அறிய ஆவல்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers