தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே அமைக்கப்பட்டிருந்தன. வணிகச்சந்தையில் கலந்து கொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் தவறாது கலந்துகொண்டு தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.
அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.
வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி ஆகியன இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கே விரும்பி செல்கின்றனர்.
பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
நாங்களும் அங்குள்ள வரிசையொன்றில் நின்றவாறே கடந்துசென்று கவுண்டரை அடைந்தோம். எதிரே உள்ள விற்பனை பெண்மணியால் தரப்பட்ட உணவின் படத்துடன் கூடிய விலைப்பட்டியல் அடங்கிய அட்டையில் எங்களின் விருப்ப உணவை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். குறிப்பாக சிக்கன், பீஃப் போன்ற உணவுகள் ஹலால் செய்யப்படவில்லை என்பதால் எங்களின் சாய்ஸ் கடல் சார்ந்த உணவாகவே இருந்தன. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்குரிய அனைத்து வசதிகளும் அந்நிறுவனத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பேசுவதற்கு இலகுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கே அமர்ந்தோம்.
சீன தேசத்தில் மொத்த சனத் தொகையில் 41 சதவீதத்தினர் துரித உணவையே விரும்புகின்றனர் என்பது ஆய்வு அறிக்கைகள் குறிப்பாக Mcdonalds , KFC, Pizzahut, போன்ற அன்னிய துரித உணவு வகைகளை சீன மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். மேலும் நகரில் ஆங்காங்கே காணப்படும் துரித உணவங்களில் வேலைக்குச் செல்லும் இருபாலர்களும் தினமும் உண்டு மகிழத் தவறியதில்லை. இது போன்ற உணவுகளில் அதிகளவில் கலோரிகள் காணப்படுவதால் உடலில் கொழுப்புச்சத்து கூடுவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
வணிகச்சந்தை நடைபெறும் பெரும்பாலான நாட்களில் சுயமாக சமைத்து சாப்பிடுவதற்கோ அல்லது சுவையுடன் கூடிய இந்திய - அரபிய உணவங்களை நாடிச்செல்வதற்கோ போதிய நேரம் இல்லை என்ற போதிலும் அதிகமான நேரங்களில் நான் எடுத்துக்கொள்ளும் உணவாக இவற்றையே பயன்படுத்தி வந்தேன். இதனாலேயே ஒவ்வொரு முறையும் சீனா சென்று திரும்பியவுடன் முதலில் எனது உடலின் இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறிப்பாக LDL மற்றும் Triglyceride போன்றவற்றின் நிலைகளை அறிந்துகொள்ள பரிசோதனை நிலையத்திற்கு செல்லத் தவறியதில்லை.
செயற்கை நிறமிகளையும், சுவையூட்டிகளையும் கொண்டுள்ள இதுபோன்ற உணவுகளை ருசிக்காகவும், நறுமணத்திற்காகவும் சாப்பிடுவதிலிருந்து சற்று நாம் விலகி இருந்தால் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதிலிருந்து சற்று விலகி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கலாம்.
உணவருந்திக்கொண்டு இருக்கும்போது எனது அழைப்பேசி ஒலித்தது... எடுத்தேன்... மறுமுனையில்..!?
‘பயண அனுபவங்கள்’ தொடரும்...
சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு
மிக அருமையான அனுபவப்பதிவு, அமீரகத்திலும் இந்த உணவகம் இருக்கிறது நான் எப்பவாவது ஒருநாள் போய் பார்சல் வாங்கிகிட்டு வந்துவிடுவேன், ஆனால் ஐஸ் கிரீம் சாப்பிட அடிக்கடி போவேன், விலையும் குறைவுதான். ஒரு திராம்ஸ், சுவையாக இருக்கும். உங்களுடைய கட்டுரையில் உங்க அளவையும் சொன்னது மிகச் சிறப்பு. அருமையான பகிர்வு.
ReplyDelete
ReplyDeleteசீனப்பயண கட்டுரையில் ஒரு பகுதியாக உணவு பற்றிய கட்டுரையாக இருந்தன.[பயணம் [11]]
துரித உணவின் தீமைகள் பற்றி எழுதி இருந்தீர்கள். சிந்திக்க கூடியவை. அருமையான விழிப்புணர்வு தந்தமைக்கு நன்றி.
சீனா தவிர்த்து மற்ற மேலை நாடுகளில் உள்ள துரித உணவுகள் எந்த அளவுக்கு ஹலால் என்று தெரியவில்லை.
விபரம் தந்தால் நாமும் அறிந்து கொண்டு தவிர்த்துக்கொள்ளலாம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅனுபவம் புதுமை அதில் இது ஒரு படி மேலே. தான் பார்த்த, ரசித்த, சுவைத்த, அனுபவித்த, நிஜங்களை கனவோடு கலந்து இங்கு பதிந்துருப்பது எங்களையும் கனவு காணவைக்கின்றது.
கனவுகளில் இரண்டுவகை உண்டு, ஒன்று உரக்கத்தில் மற்றொன்று விழிப்பில், நான் காணும் கனவு உரக்கத்தில் அல்ல.
ஆக்கத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
*****************************************************************
அனுபவம் புதுமை.
ReplyDeleteசீனாவில் 99% இந்த மாதிரியான உணவுகள் தான் அதிகம் சாப்புடுகிறார்கள்.இப்போது அமீரகத்தில் உள்ளவர்களும் இந்த மாதிரியான உணவுகள் KFC PIZZA Mcdonalds சாப்புடுகிறார்கள்.
அருமையான பதிவு சீனா பயணம்.
Nice. Articles
ReplyDelete.
இறைவன் நாடினால் ! ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...
ReplyDeleteஎப்பொழுது !
நான் சீனா போக வேண்டும் சீக்கிரம் தொடருங்கள் .அனைத்து கட்டுரையையும் படித்து விட்டு போக வேண்டும்
பயண அனுபவங்களை தொடர போதுமான நேரம் அமையவில்லை. இறைவன் நாடினால் கிடைக்கக்கூடிய நேரத்தை பயன்படுத்தி பயண அனுவத்தை தொடர முயற்சிக்கிறேன்...
ReplyDeleteசரி கட்டுரை ஆசிரியரையும் அவர் நண்பரையும் புகிப்படத்தில் காணோமே? கடைசி புகைப்படத்தின் கூதடத்தில் ஒளிந்துகொண்டு இருக்கின்றீரோ french fray போல் கட்டுரையும் மோருமொருப்பாய் சுவையோ சுவை
ReplyDeleteசீனம் சென்று ஞானம் தந்தீர்! நபிமொழியை நினைவுறுத்தும் வண்ணம், சீனாவில் சென்றும் கல்வி கற்க வேண்டும் என்பது போல், நீஙகள் சென்ற சீனப் பயணத்தில் எங்கட்கும் கல்வி ஞானம் கிடைத்து விட்டது, மிக்க நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎன்ன தம்பி நீங்க?
இப்படியே படத்தையும் போட்டுவிட்டு எழுத்தையும் எழுதிவிடுகிறீர்கள், அப்புறம் நாங்கள் படும்பாடு இருக்குதே அது பெரும் பாடாக இருக்கின்றது. இதில் கண்ட காட்சிகளை நேரில் காண்பது எப்போதோ.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
*****************************************************************
மீள் பதிவாயினும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் பதிவு.
ReplyDeleteமீண்டும் சீனப் பயணம் எப்போது.? [நாமலும் வரலாம்ண்டுதான்]
இருக்கும் இடத்திலேயே எங்களை சீனாவில் இருப்பதுபோன்று உணர்வைத் தந்தீர்கள்.
ReplyDeleteநன்றி !
ஏற்கனவே படித்தது போன்ற உணர்வு ஏற்படவில்லை புதிதாய் படிப்பதைப் போன்றே உள்ளது.
ReplyDeleteஇதுபோன்று மீள் பதிவு செய்வதால் ஏற்கனவே விட்டதை மீண்டும் படிக்க நல்ல வாய்ப்பு
வாழ்த்துக்கள் நிஜாம்
இறுதியாக சொன்னது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று எதுவும் அளவோடு இருந்தால் நல்லது என்பதை உணர்த்திய தங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஇன்னும் பல நாடுகள் சென்று ..
ReplyDeleteபயண கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்
கருத்திட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ! நேரம் கிடைக்கும்போது தொடரை தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்....
ReplyDelete