.

Pages

Saturday, November 16, 2013

[ 20 ] 'வளைகுடா வாழ்க்கை' [ ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் ! காசகண்டு விட்டு விடுவேன் ! ]

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன் ! காசகண்டு விட்டு விடுவேன் !
நம்மவர்களில் பலர் வளைகுடா வாழ்க்கை பற்றி சரியான தகவலை பெறவில்லை என்றே சொல்வேன். அரபு நாட்டில் பொருளீட்டி வருபவர்கள் நல்ல வசதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். நல்ல வருமானம் அவர்களுக்கென்ன !? என்று அங்கலாய்பவர்களுக்கு இந்த பதிவை முன் வைக்கிறேன்...

எல்லா நாடுகளிலும் உயர்நிலை ஊழியர், நடுநிலை ஊழியர், கடை நிலை ஊழியர் என்று மூன்று நிலை உண்டு. அதன் அடிப்படையில் வருமானங்களும் வசதிகளும் நிறை குறை உண்டு ஒவ்வொருவரின் நிலை என்ன ? என்பதை விளக்குகிறேன்...

முதலில் கடை நிலை ஊழியரின் நிலை :
குறைந்த சம்பளம் ஆனால் அரபு நாடுகளில் வீட்டு வாடகை அதிகம் தனி நபரால் ஒரு வீட்டை வாடகை எடுத்து வசிக்க இயலாது. குறைந்த சம்பளக்காரர்கள் ஐந்து அல்லது ஆறு நபர்கள் ஒன்று சேர்ந்து
ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பர். ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிடுவது வீட்டில் தங்கி கொள்வது. இதில் வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு செலவாகி விடும் மீதமுள்ள பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவர். அவ்வப்போது கடைவீதிகளுக்கு செல்லும் சூழல். அரபு நாடுகளில் புது வகையான கனி வர்க்கங்கள் விற்கும் ஐந்தாறு பலன்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை ஊர் காசுக்கு மூன்றாயிரம் ரூபாய் அளவிற்கு இருக்கும்.

ஆ ! இவ்வளவு விலையா ? வேண்டாம் என்று நகர்ந்து விடுவர். ஊரில் விற்கும் மாங்கனிகள் கூட அரபு நாடுகளில் அதிக விலை ஆசை பட்டு தொட்டு விடுவர்
காசை ( விலையை ) கண்டு விட்டு விடுவர்.

மற்றொரு தீராத கஷ்ட்டங்கள்  கடை நிலை ஊழியர்க்கு உண்டு. வேலை விட்டு வந்து அயர்ந்து தூங்க எத்தனிக்கும் போது மூட்டை பூச்சி தொல்லையால் மிகவும் கஷ்ட்டப்படுவார்கள். வார விடுமுறையில் மூட்டை பூச்சி ஒழிப்பு நடவடிக்கை தொடரும்... அது மட்டுமின்றி தனது துணி மணிகளை துவைத்து சுத்தம் செய்வர். வாரங்கள் முழுவதும் ஓய்வில்லை. ஆனால் இந்நிலை அறியா இந்தியாவில் வசிக்கும் உறவுகள் வளைகுடாவில் இருந்து வரும் பணத்தை தண்ணீரை போல செலவு செய்வார்கள்.

விளக்கத்திற்காக சிறிய காட்சி உங்கள் முன் கொண்டு வருகிறேன்...
கடை வீதி, மீன் விற்கும் நபரிடம் வளைகுடா வருமானம் உள்ள முதியவர் பேரம் பேசும் காட்சி :

மீன் எவ்வளவப்பா ?

நானூற்றி ஐம்பது

ஒரு ஆள் எடுத்து வைக்க சொல்லி விட்டார் !?

அதற்கு அந்த முதியவர், அட போப்பா... அவர் எப்போ வருவது

இந்தா ஐநூறு ரூபாய் எடுத்து போடு என்பார்.

பிள்ளை ஆசைப்பட்டு தொட்டு காச கொண்டு விட்டு விடுவது அங்கே ! ஐம்பது ரூபாய் கூடுதலாய் கொடுத்து மீன் வாங்குவது இங்கே.

வெளி நாட்டில் கஷ்ட்டப்படுவது யாருக்கும் தெரிவதில்லை. இந்தியாவில் நுழையும் போது ஏர்போட்டில் சுமை தூக்கும் தொழிலாளி முதல் சொந்த உறவுகள் வரை அரபு நாட்டில் பணம் கொட்டி கிடப்பது போலவும் அதனை அள்ளி கொண்டு வருவது போலவும் நினைப்பது தான் வேதனை !

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

28 comments:

 1. // வெளி நாட்டில் கஷ்ட்டப்படுவது யாருக்கும் தெரிவதில்லை. இந்தியாவில் நுழையும் போது ஏர்போட்டில் சுமை தூக்கும் தொழிலாளி முதல் சொந்த உறவுகள் வரை அரபு நாட்டில் பணம் கொட்டி கிடப்பது போலவும் அதனை அள்ளி கொண்டு வருவது போலவும் நினைப்பது தான் வேதனை !//

  இப்படி நினைப்பது தவறானது. சிறந்த உழைப்பே சிறந்த உயர்வு !

  ReplyDelete
  Replies
  1. வளைகுடாவில் பொருளீட்டும் சகோதரர்கள் ..
   தனத்து நிலையை விடுப்பில் வரும்போது ..
   தாய் தந்தை இடம் தெரிய படுத்துதல் நன்று ...
   ஐந்து ஆண்டுகளில் தனக்கு மாற்றம் வேண்டும் ..
   ஏதாவது தொழில் துவங்கவோ ..அல்லது வருமானம்
   தரும் சொத்து வாங்கவோ முயற்சி செய்ய சொல்ல வேண்டும்

   Delete
 2. காக்கா எனக்கு ஒரு டவுட் :)

  கழுதையெல்லாம் குதிரையாச்சு !? குதிரையெல்லாம் கழுதையாச்சு !? ன்னு வளைகுடாவில் அடிக்'கடி' பயன்படுத்துகின்ற வார்த்தை இது... இந்த வார்த்தை ஏன் இப்படி சொல்ல நேரிட்டது ?

  அறிந்தவர்கள் - அறியத்தரலாம்.

  ReplyDelete
  Replies
  1. மலையாளிகளில் பலர் அலுவலகப் பையனாகவே முதலில் சேர்வர்; பின்னர் அலுவலகத்தில் உள்ள மேலாளர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு அலுவலகத்தில் எழுத்தர்ப் பணியில் சேர்ந்து விடுவர்; இதனால் கல்லாமல் இருப்பவர் கூட குதிரையாகிவிடுவர்; குதிரையைப்போல பட்டம் என்னும் பளபளப்பு உள்ளவர்கள் பலர் அலுவலகத்தில் குப்பை அள்ளும் ஊழியராகவே ஆகியிருப்பர்; இதனை யான் கண்கூடாகக் கண்டு மனம் வெம்பி இருக்கிறேன். அப்படி ஒரு பட்டதாரித் தமிழர் இந்த நிலையை விட்டு மாற வேண்டும் என்றும் அதற்கான உத்திகளைச் சொல்லிக் ற்கொடுத்தும் கேட்பதுமில்லை; செயற்படுத்துவதுமில்லை; அதனால் அவரின் நிலைமை அப்படியே உள்ளது; இந்த நிலையில் அவர் திருமணம் ஆகி பொறுப்புகளும் சுமைகளும் கூடியவராகி விட்ட போதும், தன்னிலையை உயர்த்தத் தான் வைத்திருக்கும் பட்டத்திற்குரிய மதிப்பைக் காண விழைவதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை!

   Delete
  2. தம்பி நிஜாம் அவர்களுக்கு., என் தரப்பிலான பதில் எனக்குத் தெரிந்து ஊரில் கழுதைபோல சுத்தியவனெல்லாம் இங்கு வந்து நல்ல வேலை நல்ல சம்பளம் என்று குதிரை மாதிரி ஆகிவியவர்களும் உண்டு. ஊரில் குதிரையாய் இருந்தவன் இங்கு வந்து வேலைக்கு அலைந்து வேலை கிடைக்காமல் கழுதையை போல் ஆகியவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் கழுதை கழுதைதான். குதிரை குதிரைதான்.

   Delete
  3. மரியாதைக்குரிய கவிக்குறள் சொல்வதும், அன்புச்சகோதரர் அதிரை மெய்சா சொல்வதும் வெவ்வேறான சூழலில் ஏற்பட்ட இரு வேறு அனுபவங்களாக இருக்கக்கூடும். எனினும் இந்த இரு வேறு சம்பவங்களோடு வேறு காரணங்கள் ஏதும் உண்டா ? என்பதை மற்ற பங்களிப்பாளர்கள் கூறட்டுமே

   Delete
  4. அங்கு கடினமான வேலை செய்தாலும் இங்கு அதனைக் காட்டிக்கொள்ளாமல் பளபளப்பாக ஊரில் நடமாடுவதாலும், தேவையில்லாச் செலவு செய்யாமல் திறமையாகசொத்துக்கள் சேர்ப்பதாலும் இருக்கலாம்.

   Delete
  5. ஆம் ..ஊரில் மரியாதையாய் வளம் வந்து எந்த
   தொழிலும் தெரியாமல் வளைகுடா வந்து கழுதையாய் கஷ்ட படுவர் ..
   ஊரில் தொழில் தெரிந்து அதனால் தகுந்த வருமானம் ஈட்ட முடியாமல் கழுதையாய் காண
   பட்டவர்கள் வளைகுடா வந்து நன்கு பொருளீட்டி
   குதிரையாய் குதூகலிப்பார்...

   Delete
 3. அரபு நாட்டு வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து எழுதும் உங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியன்பர் அவர்களே ..
   இந்த ஆக்கத்தை புத்தகமாய் வெளியிட எண்ணி உள்ளோம் ..தங்களின் மதிபுரையும் இடம் பெற வேண்டும்

   Delete
  2. என் அன்பின் முதலாளிக்கு யான் கட்டுப்பட்டேன், இன்ஷா அல்லாஹ். மதிப்புமிக்க உங்களின் ஆக்கத்திற்குத் தமியேனின் மதிப்புரையை வேண்டியமைக்கு உளம்நிறைவான நன்றிகள்.

   Delete
 4. உழைப்பவனுக்குத்தானே தெரியும் காசின் அருமை. என்றாலும் தன் உழைப்பை தன் குடும்பத்தார்களுக்கு விளக்கினால் பொதுவாக அவர்களும் அவ்வாறு செலவும் செய்ய மாட்டார்கள். தேவைகளை குறைத்து சேமிக்கவும் பார்ப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ. நபிதாஸின் கருத்தும் கவனிக்கத்தக்கது

   Delete
  2. மிக சரியாக சொன்னீர்கள் நபி தாஸ் அவர்களே ..
   தங்களின் கருத்தும் ஏன் கறுத்தும் ஒன்றாய் உள்ளது

   Delete
 5. தாங்களது இந்தவாரப் பதிவு மிக அவசியமானதொரு பதிவு.

  ஊதாரி சகோதரர்களுக்கும் உறவார்களுக்கும் வளைகுடா வாழ்க்கையை நன்கு உணர்த்தியுள்ளீர்கள். அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ..அதிரை மெய்சா அவர்களே ..
   இவ்வாக்கத்திற்கு தாங்கள் காட்டும் அக்கறை ..
   ஆதரவிற்கு நன்றி ...

   Delete
 6. வளைகுடாவில் கல்வியும்.. அனுபவமும் இரண்டாம் பட்சம்தான்..அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே..! அதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும்.. அதுதான் ஏதோ உதவும்..

  சில மாதங்களுக்கு முன்பு நான் தங்கியிருக்கும் பில்டிங் கில் க்ளீனிங் செய்வதற்காக புதிதாய் ஒருவர் இணைந்தார். அவர் தமிழர் என்பதால் லேசாக பேச்சுக் கொடுத்தேன்..பின்பு அவரின் கல்வித் தகுதி குறித்துச் சொன்னதும் அதிர்ந்தேன்..

  ஆம்.. எம்.ஏ படித்துவிட்டு க்ளீனிங் லேபராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்..

  கவியன்பன் காக்கா சொல்வதுபோல,, மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காத பிற மாநிலத்தவர்கள் மேலாளராக பணிபுரிவர். நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாதே!

  ReplyDelete
  Replies
  1. அதிஸ்டம் எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, அதன் படி நடகின்றது போல் எழுத்துக்கள் உள்ளது.

   அறிவு இருந்தாலும் அதனை திறமையாக சந்தைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அந்த அறிவுக்கே மரியாதை. ஆனாலும் பயந்த சுபாவம்.சிலரைவிட்டு பிரியமாட்டேன் என்கிறது. ஒரு சமயம் பயந்த சுபாவமே அறிவின் முழுமை குறைபாடாக இருக்க காரணமாகலாம்.

   எது எப்படி இருப்பினும் துணிவு வேண்டும். அது நேர்மையானதாக இருக்கவேண்டும்.

   Delete
  2. அதிர்ஷ்டம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லின் விளக்கம்:

   திருஷ்டி என்றால் பார்வை, அதிர்ஷ்ட என்றால் பார்வைக்குப் புலன்படாத என்றும் பொருள்படும். இங்கு வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன என்றால், அதில் தான் இந்த அதிர்ஷ்டம் என்னும் “பார்வைக்குப் புலப்படாத”: நம் காலம் என்னும் அந்த வாய்ப்புகள் வருகின்றன நம்மைத் தேடி என்று உணர வேண்டும். ஞான குரு நபிதாஸ் அவர்கள் சொன்னதில் நூற்றுக்கு நூறு விழுக்காடு ஏற்கிறேன்; உடன்படுகிறேன்; வழிமொழிகிறேன்.

   Delete
  3. சகோ ஜாபர் ஹசன் அவர்களின் தகவல்..
   பதிவிற்கு உரியவை ..பி.ஏ...பட்டதாரி..எத்தனை
   வருடங்களாக வேலை செய்கிறார் என்ற தகவலையும் தாருங்கள் ..அவர் முயற்சி உடையவரா இல்லையா என்பதை அறிய முடியும்

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. பதிவுக்கு நன்றி.

  அருமையான தகவல்கள்.

  பெற்றோர்மார்கள், மனைவிமார்கள், பிள்ளைகள் இவர்கள் திருந்தாதவரை வெளிநாட்டு செல்வங்களை சேமிப்பது மிகவும் கஷ்டம்.

  புத்தி உள்ள கணவன்மார்கள் என்ன செய்து இருக்கணும்? தனக்கென்று தனியாக சேமித்துவைத்து தகுந்த தேவைக்குமட்டும் அனுப்பிவைத்தால் மீன் விளையும் கூடாது, ஆட்டோ கட்டனும் கூடாது.

  கணவன் சொல்லை மாணவி கேட்டே ஆகணும், அதேபோல் மனைவி சொல்லையும் கணவனும் கேட்டாகணும், எதை எடுத்துக்கொள்வது எதை விட்டுவிடுவது என்று கணவன்தான் தீர்மானிக்க வேண்டும்.

  ஆனால், என்ன நடக்குது?

  சிந்தித்துப் பாருங்கள்.

  இப்போ மீன் விலை குறைந்து இருக்குமே!?
  ஆட்டோ கட்டனும் குறைந்து இருக்கணுமே!?

  குறைய வில்லையா?

  அப்போ உங்கள் சிந்தனையில் உறுதி இல்லைஎன்று அர்த்தம்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. நன்றி காக்கா ..தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
   நன்றி

   Delete
 9. அருமையான மடல் வாழ்த்துக்கள்.

  வளைகுடாவில் இருந்து அனுபப்படும் பணம் ஓவ்வன்றும் அவர்களின் அயராத உழைப்பு ஆதலால் செலவு செய்யும் போது அதை ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்று பார்த்து செலவு செய்தால் நன்று.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கருத்தை தந்தீர்கள் ..அருமை சகோ ஹபீப்
   நன்றி

   Delete
 10. //பதிவிற்கு உரியவை ..பி.ஏ...பட்டதாரி..எத்தனை
  வருடங்களாக வேலை செய்கிறார் என்ற தகவலையும் தாருங்கள் ..அவர் முயற்சி உடையவரா இல்லையா என்பதை அறிய முடியும் //

  நான் அவரை சமீபத்தில்தான் சந்தித்தேன்... ஆனால் 3 மாதமாக அவர் க்ளீனிங் லேபராக பணிபுரிந்து வந்தார். தாற்காலிகமாகத்தான் என்றாலும் எனக்கு ஏதோபோல் இருந்தது.

  சமீபத்திய சட்டதிட்டங்களால் இவ்விடத்தை விட்டு அவர் போய்விட்டார். எங்கு இருக்கிறார்? என்ன வேலை செய்கிறார்? என்பது குறித்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
 11. வலைதள அன்பர்களின் கலந்துரையாடல்கள் எனக்கு அனுபவம் இல்லாததுதான் இருந்தும் அதிரையர்களின் அனுபவங்கள் நிறைய கேட்டு அது என் சொந்த அனுபவம்போல் தான் இருக்கின்றது கழுதை மேய்த்தாலும் கவர்மெண்டு கழுதையா மேய்க்கனும்னு இங்கே சொல்வதுண்டு அது அதிரைக்கு பொருந்தாது

  குழந்தை பிறந்தாலே ஆனா பெண்ணா என்று கேட்பதற்கு பதிலாய் பாஸ்போர்டா?! மனைக்கட்டா?! என்று கேட்கும் பழக்கமுள்ள ஊராகிவிட்டது

  நல்ல அனுபவக்கட்டுரையை நண்பர் தருகிறார் அனுபவியுங்கள் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. நீண்ட கால பதிவாய் அமைந்து ...வருங்கால
   இளைஞர்களுக்கு வழி காட்டியே அமைய வேண்டும்
   என்ற நோக்கில் புத்தகமாய் வெளியிட எண்ணி உள்ளோம் ஆதரவு தாருங்கள் ...

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers