சினிமா...
இயக்குநர் வீடு...
புல்வெளி நடுவே...
கம்பீரமாய் காட்சி தந்தது
என்றும் அமைதியான சூழல்
அன்று மட்டும்
அமைதி குலைந்து காணப்பட்டது
ஆசையாய் வளர்த்த மகள்
குமரி என்று பாராமல்
குழந்தையாய் வளர்ந்த மகள்
வளர்ந்து ஆளாகி
ஓடிவிட்டாள் ஒருவன் கூட
கடிதம் கூறியது அவள் காதலை
கதறி அழுதாள் தாயவள்
தயங்கி நின்றார் இயக்குனருமே ..!
ஆறுதலுக்கு சொந்தங்கள்
சொல்லால் ஒத்தடம் இட
அங்கு வந்தார் நம் கவிஞானி ..!
அனைவரும் சினம் கொள்ளும் வண்ணம்
அதிர சிரித்தார்...! என்சிரித்தீர் ? என்று
பலர் கேட்க... பதில் பகர்ந்தார் கவிஞானி
இயக்குனரின் படம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் மணங்கள்
பாலாகி பெற்றவர்களை விட்டு
ஓடியபோது...
இயக்குனரின் படத்தின்
வெற்றி என்றார்கள்
அவர் மகள் ஓடியது மட்டும்
துயரமா !?
பல ஆண்டு காலம்
காதல் பாடம் கொடுத்த
இயக்குனருக்கு...
ஒரே நாளில் ஓராயிரம்
பாடத்தை அவர் மகள்
கொடுத்து விட்டால்...
நல்ல விழிப்புணர்வு ஊட்டும கவிதை !
ReplyDeleteசமூகத்தின் அவலங்களை நினைத்து சிரிப்பது தொடரட்டும்...
ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.
1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்...
2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்...
3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்...
4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்...
5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்...
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான ஆக்கம் என்றாலும் பல சிந்தனைகளை கொடுக்கின்றது, உண்மைச் சம்பவங்களை இப்படி கவிதை வடிவில் நாசுக்காக விளக்குவதில் தம்பி சித்தீக் ஒரு படி மேலே. பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஒரே நாளில் ஓராயிரம் பாடம்..! தந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete7ஆம் சிரிப்பை கவிஞானி மட்டுமல்ல நானும் படித்து சிரித்தேன்.
ReplyDeleteஏன் தெரியுமா..?
குடும்பம், தாய், தந்தை, கணவன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகள் இப்படி எல்லா உறவுகளுடன் கூடி சந்தோசமாக வாழ்ந்தவள் கேவலம் இந்த அற்ப சுகத்திற்க்காக மொத்தக்குடும்பங்களையும் இழந்து விடுகிறாள்.
அதை நினைத்து தான் கவிஞானி சேர்ந்து நானும் சிரித்தேன்.
சிரிக்கவைத்து இப்படி சிதையும் பெண்களை சிந்திக்க வைத்ததற்கு நன்றி. அதிரை சித்திக் அவர்களே...!
அருமையான கதை வசனம் கவிதை அதிரை சித்திக் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடம் எடுக்கும் இயக்குனருக்கு படத்தில் மட்டும் எழுதிய கதை அவர் வீட்டிலும் எழுதி உள்ளது.அதற்காக அவர் சிரிக்கட்டும்.