.

Pages

Tuesday, April 9, 2013

ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?


நேரத்தை அறிந்து கொள்வதற்காக நம் முன்னோர்கள பலர் இயற்கையையும், சில சாதனங்களையும் தங்களின் வாழ்வின் நடைமுறையில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக சூரியன் சந்திரன் போன்றவற்றின் சுழற்சி முறையிலிருந்து அன்றாட கால அளவை கணக்கிட்டும் வந்தனர். இப்படி படிப்படியாக நாகரிகம் வளர வளர புதுப்புது சாதனங்கள் பலவற்றை கண்டுபிடித்து அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்த தவறியதில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் ஒன்றுதான் மின்சார சங்கு.

இவை ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, தினமும் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி,  மாலை, 6 மணி மற்றும் இரவு 9 மணி போன்ற நேரங்களில் சங்கு ஒலிக்கப்படுகிறது. ஒரு நிமிட கால அளவைக் கணக்கில் கொண்டு ஒலிக்கப்படும் ஓசை ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் காதில் விழக்கூடியது.

முந்தைய காலக்கட்டத்தில் மின்சார சங்கின் மூலம் ஒலிப்பரப்படும் ஓசையினால் உறங்கிக்கொண்டு இருப்பவர்களை தட்டி எழுப்பவும், அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்போருக்கு நினைவூட்டவும் பயன்பட்டன. ஆனால் இன்றைய பொழுதில் அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இன்று நேரத்தை அறிந்து கொள்வது நமக்கு கடினமான வேலையில்லை என்றாலும் விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கையடக்க கடிகாரங்கள், அலைபேசிகள், ஐபோன் போன்றவற்றால் கால நேரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பழைமையை மறக்காமல், மின்சார செலவினங்களையும் பொருட்படுத்தாமல் மின்சார சங்கின் மூலம் அன்றாடம் ஒலி எழுப்பும் பணிக்கென்று ஊழியர் ஒருவரை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக தங்களின் சேவையை செய்துவந்தாலும், இவற்றின் மூலம் பெறப்படும் ஓசை நம்மின் காதைக்கிழிப்பது போல் உணர்வதும், பச்சிளம் குழந்தைகள் வீரிட்டு அழும் குரலை ஆங்காங்கே நாம் கேட்பதும் உண்டு. நோயாளிகள் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவதும், இவற்றை வெறுத்து ஒதுக்குமளவுக்கு வணிகர்களிடத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படுவதும் உண்டு. இதனைச் சுற்றியுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் இடையுறாக இருக்கின்றன என்பதையும் நம்மால் மறுக்க முடியவில்லை.

ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?
இது ஒரு மீள்பதிவு
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

16 comments:

  1. நவீனங்கள் பழமையை கண்டு
    பரிகாசிப்பது இயற்கைதான் ..
    பழமையே நவீனத்தின் காரணி ..
    வெறுத்தாலும் இன்றியமையாத
    தேவைகளில் மின்சார சங்கும் ஒன்று

    ReplyDelete
  2. என்னதான் நவீன கருவிகள் வந்தாலும் இன்றும் இந்த சத்தத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் ஆட்களையும் பார்கத்தான் செய்கிறோம்

    தூங்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதற்கு அலாரம் வைப்பதில்லையா? அது மாதிரிதான் நேரம்தெரியாமல் வேலையில் மூழ்கி இருப்போருக்கும் இந்த சத்தம் ஒரு சிறந்த அடையாளம், மேலும் பழமை பாதுகாக்காப்படுகிறது. இந்த சத்தத்தால் யாரும் பாதிக்கபடுவதில்லை......

    ReplyDelete
  3. //அன்றாடம் ஒலி எழுப்பும் பணிக்கென்று ஊழியர் ஒருவரை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக தங்களின் சேவையை //

    இதையாவது நேரந்தவராமல் ஒழுங்க செய்றாங்களே...

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    சங்குக்கே சங்கு ஊதுகிறமாதிரி தெரியுதே!!!!!!!!

    கிட்டத்தட்ட 35 வருடங்களாக நமதூரில் இந்தச் சங்கு ஒலி எழுப்பியவண்ணம் இருக்கின்றது. பழகப்பழக பாலும் புளிக்கும் என்று சொல்வார்களே, அப்போ பாலை மறந்துவிட முடியுமா? மறக்க முடியாது, சிறிது நாட்களுக்கு பாலுக்கு பதிலாக வேறு சத்துள்ள பானங்களை அருந்தவேண்டியதுதான்.

    பழமையை நேசிப்போம்.
    புதுமையை வரவேற்போம்.
    இரண்டையும் ஆதரிப்போம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு, பழைமையை பாதுகாக்கவேண்டும் .

    ReplyDelete
  6. எங்க வீட்ல அந்தக்காலத்ல பாட்டிம்மா எல்லாரும் வீட்டில் விழும் வெயிலின் நிலையை வைத்தே டயம் கணித்துவிடுவாங்க. நிழல் எங்க விழும்போது என்ன நேரம்னு ரொம்ப சரியா சொல்லுவாங்க. ஓல்ட் இஸ் கோல்ட் தான்

    ReplyDelete
  7. பழமைகளை பாதுகாத்து புதுமைகளையும் வரவேற்போம் என்பது என் கருத்து புதியவைகள் யாவும் ஆரோக்கியத்தை சிதைக்காமல் இருத்தல் நலம்.

    ReplyDelete
  8. அப்போது மின்சாரம் பிரச்சனை இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது மின்சாரம் இருந்தால்தான் சங்குக்கு வேலை.

    ReplyDelete
  9. கால சூழ்நிலைக்கு ஏற்ப மனிதன் யாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளான். அந்தக்கால சூழ்நிலைக்கு அது தேவைப்பட்டது. இப்பொழுது நாம் வாழும் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை.[michine life] நேரம் தெரிந்து கொள்வதற்கும் நேரத்தை நினைவூட்டவும் எல்லோர் வீட்டிலும் எல்லா வசதிகளும் உள்ளன. பழமையை அழித்து விடாமல் நினைவுச்சின்னமாக வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  10. தங்களின் இப்பதிவை வலைச்சரதில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள்http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி !

      எனது ஆக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த அன்புச்சகோதரர் சேசாத்ரி அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி !

      எல்லாப் புகழும் இறைவனுக்கு !

      தொடர வாழ்த்துகள்...

      Delete
  11. மீள் பதிவாயினும். நினைவூட்டல் அவசியமே.

    நினைவூட்டி பதிந்தமைக்கு நன்றி.

    [மின்சாரம் தடைபடுவதால் சங்கு முன்போல் சரியானநேரத்தில் ஒலிக்கிறதா..?]

    ReplyDelete
  12. மீள் பதிவானாலும் மீலாப்பதிவு சங்கு மனித வாழ்வில் ஒரு பங்கு இன்றும் பெரிய ஆலைகளில் சங்கொலி வைத்துதான் தேநீர் இடைவேளை உணவு நேரம் சிப்ட் மாற்ற நேரங்களை அறியப்படுத்துகிறது.
    சங்கொலி எப்பொழுது கேட்கும் என்று ஏங்கி நிற்கும் தொழிலாளர் கூட்டம் மூடப்பட்ட ஆலைகளின் வாசலில் காத்து கிடக்கின்றனர்.
    பிரசவம் முதல் பிரவாசவம் வரை சங்கு மனிதனின் கூடவேஇருக்கின்றது ஆம் குழந்தைக்கு புகட்டப்படும் பால் சங்கில்தான் இறந்த மனிதனுக்கு ஊதப்படுவதும் சங்குதான்

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி மீண்டும் நினைவூட்டல் அருமை.

    ReplyDelete
  14. ஊதுகின்ற சங்கினால் ஊருக்கு அறிவிப்பு
    ஓதுகின்ற கல்வியால் உனக்கே பெருமதிப்பு!

    இவ்வரிகள் அடியேன் புகுமுக வகுப்பில் ஆண்டுவிழா மலருக்கு எழுதிய கவிதையின் துவக்க வரிகள்; காரணம், அப்பொழுதெல்லாம் இந்தச் சங்கொலியும், பாங்கொலியும் தான் அதிகாலை வேலைக்குச் செல்வோர்க்கும், அஸ்தமனத்தில் வேலையிலிருந்து விடுபடுதவதற்கும் காத்திருக்கும் தொழிலாளர்கட்கு ஓர் அறிவிப்பாக இருக்கும். இன்னும், நோன்பு காலத்தில் நோன்பு துறக்க இச்சங்கொலிதான் முந்தி ஒலிக்கும்; மு அ தின் நோன்பு துறந்த பின்னர் தான் பாங்கொலி கேட்கும். அந்தகால வாழ்க்கையின் நடைமுறைகளும், உணவுகளும் கொடுத்த ஓர் அலாதியான இன்பம் இந்தக் காலத்தில் இல்லவே இல்லை; பழமையை மறவேன்.

    ReplyDelete
  15. தேவையான நினைவூட்டல். இதை ஊட்டி இருக்கும் தம்பிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers