தளர்ந்த நடை
தூக்கி நடக்க இயலா சுமை
அத்தனையும் சுமந்த வண்ணம்
மருந்தகம் ஏறி மருந்து வாங்கியவர்
ஆயாச மிகுதியால் தரையில்
அமர்ந்தார் அம்மனிதர்
பார்போர் மனமிரங்கி பரிதவிக்க
அங்கிருந்த கவிஞானியோ
எகத்தாளமிட்டு சிரித்தார்
பார்ப்போர் ஏன் என்க
பதில் பகிர்ந்தார் கவிஞானி
நோய் நாடி நோய் முதல் நாடி
என்றார் வள்ளுவர்
இம்மனிதனோ நோய் தொடுக்கும்
தின் பண்டம் தினம் திண்று
நோய் அதனை ஏற்று கொண்டான்
சர்க்கரை நோய்க்கு மருந்தகம்
வந்த இவன் மடி நிறைய்ய
தின் பண்டம் ஜிலேபி ஒரு பையில்
தினவெடுக்கும் கொழுப்பு பண்டம்
மறு பையில் சாலையோரம்
விற்கும் அங்காடி பொருள்
அனைத்தும் இவன் பையில்
பார்க்கத்தான் வயோதிகம்
வயதில் இவன் இளைஞன் ஐயா
புகை பிடிக்கும் பழக்கம் அது
பல நோயை கொண்டு வரும்
தெரிந்தும் இவன்
மனம் போன போக்கில் வாழ்க்கையில்
வாழ்ந்து இவன் வயோதிக
தோற்றம் அடைந்து விட்டான்
நோய் தொடுக்கும் பொருள்
பழக்க வழக்க மதை
விட்டு விட்டால் நோய் தவிர்த்து
வாழ்ந்திடலாம்
சுத்தமான உணவும்
நல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்
நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்
என்றாரே கவிஞானி...!
சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வமான எச்சரிக்கை விடுகின்றது. ‘CIGARATTE SMOKING IS INJURIOUS TO HEALTH’ சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கானது.” என்று ஆனால் இவை மனிதருக்கு தீங்கு தருவன என தெரிந்தும் இவற்றை தடை செய்யாமல் இருப்பது வேடிக்கை !
ReplyDeleteகடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.
புகை நமக்கு பகை !
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்
தொடர வாழ்த்துகள்...
புகை நமக்கு பகை !
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு தரும் ஆக்கம்
கடுமையான சட்டம் இயற்றி, இவற்றைத் தடுத்தால் சமூக நலத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.
well done sithik
சுத்தமான உணவும்
ReplyDeleteநல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்
நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்/
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்/
10ஆம் சிரிப்பை சற்று மாற்றமாய் சிரித்தார் நம் கவிஞானி.
ReplyDeleteஉணவே மருந்து.மருந்தே உணவு எனும் முதுமைச்சொல் உண்டு. யார் அதன்படி நடக்கிறார்கள்...?
நாக்கு ருசியை கட்டுப்படுத்தினாலே எந்த நோயும் அருகில் வராது.
புகைபிடித்தல் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லது மற்ற வர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் மனம் வைத்து நிறுத்த முயற்ச்சிக்க வேண்டும்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் பழமொழி இதற்கும் பொருந்தும்.
வாழ்த்துக்கள் கவிஞானி. இன்னும் சிரிக்கட்டும்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதுபாய்.
சுத்தம் சுகம் தரும் என்று அன்று சொன்னார்களே, அது இதுதானா?
புகைபிடிப்பது ஒருவித அசுத்தம், மது அருந்துவது ஒருவித அசுத்தம், ஒவ்வாதவைகளை உட்கொள்ளுவது அசுத்தம், தீய வார்த்தைகளை பேசுவது அசுத்தம், தீய கண்ணோட்டமும் அசுத்தம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாவற்றையையும் விட்டு விட்டு சுத்தமாக இருப்பதே சுகமான வாழ்க்கை, இன்று பெரும்பாளானவர்கள் அசுத்தமாக இருப்பதையே ஒரு கவுரவமாக நினைக்கின்றனர்.
கவிஞானிக்கு வயதுபோனாலும் வார்த்தையில் இளமை இருக்கு. கவிஞானி அவர்களே சிரித்துக் கொண்டே தகவல் சொன்னதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும், அடுத்தது எதைச் சொல்லி சிரிக்கப்போகிறீர்கள்?
வாழ்க வளமுடன்
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சுத்தமான உணவும்
ReplyDeleteநல்ல பழக்கமும் நல்ஒழுக்கம்
கடவுள் பக்தியும் இருந்தால்
நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்
மிக சிரியாக சொன்னீர்கள் தமிழ்
ReplyDeleteசரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட
கடவுள் பக்தியும் மன அமைதியை தரும்
நீண்ட நாள் வாழலாம்
இப்போது உள்ள சில இளைஞர்கள் எங்கே வயோதிகளை மதிக்கிறார்கள். அவர்களின் பேச்சியும் மதிப்பது கிடையாது எதாவது நல்லது சொன்னால் ஏய் பெருசு சும்மா கேட என்று சொல்லுகின்றார்கள்.அதற்க்கு இந்த கவிதை ஒரு சவுக்கடி அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு கவிஞானி இன்னும் சிரிக்கட்டும்
ReplyDelete// சரியான வழியில் தெளிவான பார்வை கொண்ட
ReplyDeleteகடவுள் பக்தியும் மன அமைதியை தரும்
நீண்ட நாள் வாழலாம் //
yes you are correct
அன்பு தம்பி சேகன M.நிஜாம் .நண்பர் சபீர், சகோ ரமணி சகோ அதிரை மெய்சா . ஜமால் காக்கா.சகோ தமிழ் ,சகோ ஹபீப் ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ReplyDelete