.

Pages

Sunday, January 20, 2013

[ 11 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

சிற்றூண்டி சாலை 
அதிகாலை முதல்
மாலை வரை 
அவசர பந்தி 
முட்டி மோதி
சிற்றுண்டிகளை கட்டி செல்லும்
தொழிலாளர் வர்க்கம்
ஈக்கள் மொய்க்கும்
பண்டல்கள் என்று பாராது
வாங்கி செல்லும் ஏழைகள்
நாகரிக உடை தரித்த
வாலிபன் ஒருவன்
வாங்கி சென்றான்
சிற்றுண்டிகளை 
தினம் வரும் வாடிக்கையாளர்களில்
இவனும் ஒருவன்
நல்ல உத்தியோகம்
கை நிறைய காசு இருந்தும்
வதைக்கும் வெயிலானாலும்
நடுங்கும் குளிரானாலும்
இவன் வருகை தினம் தினம்
வாடிக்கையாளர்களில் ஒருவர்
வேடிக்கையாய் இவனிடம் வினவினார்
மணமுடித்து வாழ்ந்தால்
மங்களமாக இருக்குமே
இல்லாளில் கை பக்குவத்தில்
தினம் தினம் உண்டிடலாமே
என்றார் அவர்
வாலிபனின் முகத்தில்
விரக்தியான சிரிப்பே பதில்
அவன் சிரிப்பை கண்ட நம்
கவிஞானி மிகைப்படுத்தி சிரித்தார்
ஏன் சிரித்தார் கவிஞானி...?
[ கவிஞானியின் பதில் அடுத்த இடுகையில் தொடரும் ]

11 comments:

  1. வாலிபன் ஏன் திருமணம் செய்துகொள்ள வில்லை !? அல்லது திருமணம் முடிந்து விட்டதா ?

    கவிஞானியின் பதிலை எதிர்பார்க்கும் பல நூற்று வாசகர்களில் நானும் ஒருவன் !

    பொதுவாக கணவன் மனைவிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால் இது போன்ற கடைகளுக்குச் சென்று உணவு அருந்த வாய்ப்பு இல்லாமல் இருக்கும்

    ReplyDelete
  2. பதிவு வழக்கம் போல் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. கவிஞானியின் 11ஆம் வரிகள் கன்னித்தீவு சிந்துபாத் கதைபோல் ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வைத்து விட்டது.

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // ஈக்கள் மொய்க்கும்
    பண்டல்கள் என்று பாராது
    வாங்கி செல்லும் ஏழைகள்
    நாகரிக உடை தரித்த
    வாலிபன் ஒருவன்
    வாங்கி சென்றான் //

    எல்லோரும் சத்துள்ள உணவை உண்போம்

    ReplyDelete
  5. கிளைமாக்சை எதிர் நோக்கி
    காத்திருக்கும்
    உனது நன்பன்
    நல்ல பல கருத்துக்களை
    நயமாய் எடுத்துச் சொல்லும்
    நன்பருக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கிளை மாக்சை எதிர் நோக்கி
    காத்திருக்கும் உனது நன்பன்
    நல்ல பல கருத்துக்களை
    நயமாய் எடுத்து சொல்லும்
    நன்பருக்கு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //மணமுடித்து வாழ்ந்தால்
    மங்களமாக இருக்குமே
    இல்லாளில் கை பக்குவத்தில்
    தினம் தினம் உண்டிடலாமே//

    பிரச்சனையே அங்கேதானே...
    சரியா... அதிரை சித்திக்...

    ReplyDelete
  8. சிற்றூண்டி ருசி அவனை இழுத்து சென்றது அது போல் தான் இந்த கவிதைவரிகள் நம்மளை தொடருந்து செல்கின்றது.அருமையான பதிவு அனுபவம் புதுமை.வாழ்க வளர்க.

    ReplyDelete
  9. இன்னும் பல கவிஞானி சிரிப்பு எதிர்பார்க்கபடுகிறது. வாழ்த்துக்கள் கவி அதிரை சித்திக் அவர்களை.

    ReplyDelete
  10. அன்பு தம்பி சேகன Mநிஜாம் ...
    அன்பு சகோ அதிரை மெய்சா..வழக்குரைஞர் ஜெயராஜன்..
    அன்பு நண்பன் சபீர் அகமது ....சகோ தமிழன் ...
    சகோ ஹபீப் ..வருகைக்கும் .கருத்திற்கும்
    நன்றி ...

    ReplyDelete
  11. வழக்குரைஞர் .சகோ .ஜெய ராஜன் ..,
    தங்களின் கூற்று சரியே ...நான் இக்கவி எழுதிய சமயம்
    ஒருவர் தனது நண்பனின் நிலை கூறினார் அதனையும்
    விளக்கவுள்ளேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers