வீட்டிற்குள் விசும்பல் சப்தம்
தேற்றும் தாயின் குரல்
என்றும் இசை சப்தம் ஒலிக்கும்
வீட்டில் விசும்பும் குரல் கேட்டு
உறவே கூடியது
மகன் அருகில் தாய் இருந்தாள்
வீட்டின் சூழல் வசதி வாய்ப்பை
பறை சாட்டியது
வீட்டின் நிலை கண்ட கவிஞானி
ஏளனமாய் சிரித்து விட்டார்
ஏன் சிரித்தீர் என்று பலர் கேட்க
வருமுன் காட்கா விடில்
பெரும் துன்பம் வந்து சேரும்
இந்த வீட்டு பாலகனும்
பள்ளிக் கூடம் சென்று வந்தான்
பள்ளியில் பயின்ற பாடங்களை
வீட்டில் வந்து பயிற்சி செய்ய
சூழலுமே சரியில்லை
தொலைகாட்சி பெட்டியது
தினம் தினம் அழுத வண்ணம்
அனைவரையும் அழைத்திடும்
மடி கணினியோ நொடி பொழுதையும்
வீணடித்து செல்கிறது
ஒரு நாள் பொழுதினை போக்கிட
ஓராயிரம் சாதனங்கள்
இவை அனைத்தும் இவன் படிப்பை
பாழடித்து விட்டதையா
பொது தேர்வு வந்த போதும்
வீட்டு பாடம் படிக்கவில்லை
படிக்காத பாலகனை ஏன் என்று
இவள் கேட்க வில்லை
தேர்ச்சி பெறா மகன் அழுகையை
என் என்று கேட்கின்றாள்
பொது தேர்வு வரும் முன்னே
மகனை படிப்பினில் தயார் செய்து
தேர்வெழுத அனுப்பி வைத்தால்
இக்குடும்பம் இன்பமாக சிரித்திருக்கும்
நேரங்களை வீணடித்து அழுதிருக்க
தேவையில்லை என சிரித்தார்
நம் கவிஞானி
[ சிரிப்பது தொடரும் ]
கவிஞானியின் 11 ஆம் சிரிப்பு நியாய மானதே.
ReplyDeleteசில பெற்றோர்கள் பொதுத்தேர்வு வந்த சூழலிலும் பிள்ளைகள் படிக்க இடையூறாகவும் படிப்பிலிருந்து கவனம் சிதறிப்போக காரணமாக தொடர் டி வி சீரியலை விடாமல் பார்ப்பதுடன் மற்ற நிகழ்ச்சிகளையும் ஓய்வில்லாமல் பார்கின்றனர். இதில் பிள்ளைகள் படிப்பு கெட்டு போவதுடன் அவர்களின் பார்வையும் கெட்டுப்போகின்றன
பெற்றோர்களே சற்று கவனம் செலுத்துங்கள்.
வாழ்த்துக்கள் சித்திக் அவர்களே தொடரட்டும் கவிஞானியின் சிரிப்பு...!
கவிஞானியின் 13 ஆம் சிரிப்பு நியாய மானதே.
ReplyDeleteசில பெற்றோர்கள் பொதுத்தேர்வு வந்த சூழலிலும் பிள்ளைகள் படிக்க இடையூறாகவும் படிப்பிலிருந்து கவனம் சிதறிப்போக காரணமாக தொடர் டி வி சீரியலை விடாமல் பார்ப்பதுடன் மற்ற நிகழ்ச்சிகளையும் ஓய்வில்லாமல் பார்கின்றனர். இதில் பிள்ளைகள் படிப்பு கெட்டு போவதுடன் டீ வி அதிகம் பார்ப்பதன் விளைவாக பார்வையும் கெட்டுப்போகின்றன
பெற்றோர்களே சற்று கவனம் செலுத்துங்கள்.
வாழ்த்துக்கள் சித்திக் அவர்களே தொடரட்டும் கவிஞானியின் சிரிப்பு...!
நல்லதொரு மெசஜ்ஜூடன் முடித்திருப்பது அருமை !
ReplyDeleteகல்வியை கற்போம் - கற்பிப்போம்
தொடர வாழ்த்துகள்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசிரித்து சிரித்து என்னையும் சிரிக்க வைத்துவிட்டார் இந்த கவிஞானி. நல்லதொரு செய்தியை சிரி்ப்பொலியோடு கவிஞானி கொடுத்திருப்பது மக்கள் எதையும் சுலபமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கின்றது.
பெற்றோர்களே நீங்களும் சிரிப்பது நியாமானதுதான் இருந்தாலும் கவணம், மறந்துவிடவேண்டாம்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அருமையான பதிவு அருக்காமையில் இருக்கின்றது முழு ஆண்டு தேர்வு அதற்காக இந்த பதிவு ஒரு பயன் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு.தொடரட்டும் கவிஞானியின் சிரிப்பு...!
ReplyDelete