.

Pages

Monday, January 28, 2013

டாக்டரும்... சினிமா டிக்கட் கிழிப்பவரும்...

தலைப்பை பார்த்ததும் காமெடி கதையென்று நினைத்து விடாதீர்கள் ! மிகவும் கவனமாக படிக்க வேண்டிய செய்தி

சரி விசயத்திற்கு வருகிறேன்...

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் தஞ்சாவூரில்
தங்களின் மருத்துவமனையை நிறுவி மருத்துவம் பார்த்து வருகின்றனர்

குழந்தைகள் மருத்துவத்திற்கும் சில புகழ் பெற்ற மருத்துவர்கள் உண்டுஅதில் முதியவர் சீதையின் மறு பெயரை முதலாவதாகக் கொண்டவர். இவர் மருத்துவம் கைராசிக்காரர் என்று பெண்கள் மத்தியில் நல்லகருத்து உண்டு !? எனவே குழந்தைகளுக்கு சிறு நோய் என்றாலும்உடனே அவரிடம் குழந்தைகளை அழைத்து செல்வதை வழக்கமாககொண்டுள்ளனர். இதனால் சினிமா தியேட்டரை போல் என்றும் ஒரே கூட்டம் ! டாக்டரும் அவசர கதியாய் ஒரு குழந்தைக்கு ஐந்து நிமிடம் வீதம் மருந்து, ஸ்கேன் என்று எழுதி காசு பார்த்து விடுகிறார் எப்படி சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவரின் அவசர கதிபோல்செயல்படுகிறார் !

சென்ற வாரம் எனது பேத்திக்கு விட்டு விட்டு ஜுரம் வர உள்ளூர்
டாக்டரிடம் கூட்டி செல்ல மருத்துவம் வேலை செய்ய வில்லை
குழந்தை துவண்டு போய் விட்டாள் ஒரு வயது குழந்தை வலியை
சொல்ல தெரியாமல் முனக்கம்... முதியவரிடம் [ டாக்டரிடம் ] தஞ்சைக்குஅழைத்து செல்ல...

சினிமா டிக்கட் கொடுப்பதை போல் ஸ்கேன் எடுக்கசொல்லி ஒரு டிக்கெட் மருந்துக்கு ஒரு டிக்கெட் ..அதனை பெற்று கொண்டுஊர் வந்து சேர்ந்தார்கள். மருந்து வேலை செய்ய வில்லை. பிள்ளை நிலை கவலை கிடமாக போகவே உள்ளூர் டாக்டரிடம் அழைத்துசெல்ல... இத்தனை நாள் ஜுரம் விட்டு விட்டு வருகிறது என்றால் ரத்தபரிசோதனை செய்து அதனை பார்த்து விட்டு தான் என்னால் எதுவும் சொல்ல இயலும் என்று அறிவு பூர்வமாக கூறினார் ரத்தம் பரிசோதனை செய்யப்பட பிள்ளைக்கு டெங்கு அறிகுறி தெரிகிறது உடனே தஞ்சைக்கு செல்ல உத்தரவிட்டார் இறைவனின் பேருதவியால் பிள்ளை குணமாகி கண் விளித்து பார்க்கிறாள். ஸ்கேனில் கிடைக்கும் கமிசன் கூடுதல் என்பதால் அந்த கிழம் ஸ்கேன் டிக்கெட் கிழித்து கொடுத்து விட்டது. இரத்த பரிசோதனை செய்ய அவருக்கு மனமில்லை !

எனது அருமை சகோதரர்களே !
விட்டு விட்டு ஜுரம் வந்தால் ரத்த பரிசோதனை செய்ய தவறாதீர்கள்..! கூட்டம் அதிகம் உள்ள டாக்டர் சினிமா டிக்கட் கிழிப்பவர் போல் செயல்படாமல் இருந்தால் மட்டுமே நோயாளி நிலை அறிய முடியும் அனைவரிடமும் இந்த செய்தியை எடுத்துச்சொல்லுங்கள்.

அதிரை சித்திக்

8 comments:

  1. நல்லதொரு படிப்பினை !

    அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவம் மேற்கொள்ளலாம். இதனால் நேரமும், பதற்றமும், செலவும் நமக்கு மிச்சமாகும்.

    ReplyDelete
  2. அருமையான கருத்து இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் நிறைய நபர்களுக்கு நடந்திருக்கிண்றது இன்றய மருத்துவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது செலவு செய்த தொகையை திரும்ப எடுப்பதிலேயா குரியாக இருக்கிண்றனர் குழந்தையின் கஸ்டம் நம்மை பொருத்தவரை நமக்கு ஒரு குழந்தை டாக்டருக்கோ ஒரு நாளைக்கு 100 குழந்தைகள் என்றாகிற்து

    ReplyDelete
  3. நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.பதிந்தீர்கள் சித்தீக் அவர்களே..!

    என்னையும் சற்று சிந்திக்க வைத்து விட்டது.

    அதாவது மருத்துவம் என்றால் தஞ்சை என்று சொல்லு மளவுக்கு நம்மவர்கள் மனதில் பதிந்து விட்டது.

    இந்நோய்க்கு முதலில் விழிப்புணர்வு என்ற மருந்தை கொடுத்து குணப்படுத்தி விட்டால் சரியாகிவிடும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்றால் அவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள். இன்றோ குணம் அடையுதோ இல்லையோ Fees வந்தால் போதும்.

    சகோதரர் அவர்கள் சுட்டிக் காட்டின மருத்துவரை அறியதவர்கள் யாரும் இருக்க முடியாது.

    2006ல் தஞ்சையில் உள்ள KRK வளாகத்தில் மாலை ஐந்து மணியளவில் கன்னா பின்னாவென்று பயங்கரமாக சப்தம் போட்டு ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டினது இன்றுவரை அந்த KRK என்னை மறந்திருக்காது, அந்த அளவுக்கு சுயநலவாதிகளான சில மருத்துவர்களினால் மருத்துவம் சீர்கேடாகி வருகின்றது.
    (அதைப்பற்றி இங்கு எழுதுவதைவிட நேரில் சந்தித்து உரையாடினால் இன்னும் நன்றாக இருக்கும்)

    ஆக மொத்தத்தில் சில வீடுகளில் கைமருந்து என்று சில வகைகளால்ஆன மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர். பழையன மீண்டும் உயிர்பெறுமேயானால் இந்த மாதிரி சிக்கலிருந்து விடுதலை கிடைப்பதோடு நேரங்களும் வீணாகாமல் மனஉலச்சல்களும் இல்லாமலும் இருக்கலாம்.

    நாமும் இதை முயற்சித்துப் பார்காலாமே.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தம்பி நிஜாமின் ஊடக பணி
    சிறக்க வாழ்த்துக்கள் ...
    காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் அவசியம் ரத்த
    பரிசோதனை செய்ய மறவாதீர் ..சில டாக்டர்
    தலை கணம் பிடித்தவர்களாக நமது பேச்சையே
    கேட்பதில்லை ..எச்சரிக்கையாக இருங்கள்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    நல்ல விழிப்புணர்வு ஆக்கம் தந்தமைக்கு நன்றி நீங்கள் எனனை விட வயதில் மூத்தவரா அல்லது இளையவரா என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் சகோதரர் சித்தீக் அவர்களே என்று கூறி விடுகிறேன், ஜமால் காக்கா அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்றால் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் அது என்னவோ உண்மை தான் ஆனால் இப்போது உள்ள டாக்டர்கள் அப்படியிருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும், அவர்களையும் குறை சொல்ல முடியாது ஏன் என்றால் பல லட்சத்தை கொடுத்து படித்து அவர்கள் நாம் போட்ட முதலையும் லாபத்தையும் எடுக்க ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு சம்பாரிக்கும் நோக்கில் தான் உள்ளனர் குணம் அடையுதோ இல்லையோ பணம் வந்தால் போதும் மென்பதே அவர்களில் நோக்கம்.

    ReplyDelete
  7. ஒரு டாக்டர் நோயாளியின் நோய் என்னவென்று
    கேட்டறிந்து மருந்து கொடுப்பார் .ஆனால் பேச தெரியாத மழலையின் காப்பாளர் கூறும் கருத்தை அறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும் அல்லவா
    அதை கூட செய்யாமல் தான் தோன்றி தனமாக செயல் படும் டாக்டர்களால் உயிர் சேதம் தான் ஏற்படும் ...பணம் போட்டு பணம் எடுப்பதில் குறை கூறவில்லை செய்யும் தொழிலை திறம்பட செய்ய வேண்டும் ...
    எனக்கு ஐம்பது வயதை நெருங்குகிறது ..சகோ ஜின்னா பாய் ..தங்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ..
    சகோ நிஜாம் ,நண்பன் சபீர் .சகோ அதிரை மெய்சா,ஜமால் காக்கா ஆகியோர் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. அருமையான ஆக்கம் இருபவர்களுக்கு தஞ்சை இல்லாதவர்களுக்கு நாட்டு வைத்தியம் தான்.விழிப்புணர்வு பதிவு தகவல் அருமை வாழ்த்துக்கள் சித்திக் அவர்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers