.

Pages

Saturday, January 5, 2013

[ 8 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

சிறை சாலை
குற்றவாளிகளின் சரணாலயம்
சூழ்நிலை கைதிகள் பலர்
மனம் வருந்தி 
வெளி வர நினைப்பவர்
சிலர் 
வெறித்த பார்வை 
பேச மனமில்லா நிலை
உணவருந்த அழைத்தும்
வெறுமையான பார்வை
பசித்தும் புசிக்க முடியா
நிலையில் ஒரு கைதி 
கைதிகளில் பலர்
பாவம் என்றனர் 
குற்றமில்லா நிலையில்
கைதாகி
சிறையில் கவிஞானி
அந்த கைதி நிலை கண்டு
சிரித்தார் 
ஏன் சிரித்தீர் என்று பலர் கேட்க
பதில் சொன்னார் கவிஞானி
வாழ்கையில் நல்ல நிலையில்
இருந்த இவன்
முன் கோபம் என்ற
துற்குணத்தால்
இந்நிலைக்கு ஆளானான
சிறு தவறு செய்த இல்லாளை
இவன் கோபத்தால் பலியானாள்
மனைவியை இழந்த இவன்
வாழ்வையும் இழந்து தவிக்கிறான்
உணவருந்த உள்ளம் மறுக்கிறது
இல்லத்தில் இருந்த இன்பம்
சினத்தால் துன்பமானது
சினம் என்ற துர்குணம்
சிறைக்கு அழைத்து வந்ததையா
என சிரித்தார் கவிஞானி...
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

7 comments:

 1. சமூகத்தில் பலரின் வாழ்வில் முன்கோபத்தால் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

  சமீபத்தில் இணையத்தில் ஒரு சிந்தனையைத் தூண்டும் ஒரு சிறுகதை படிக்க நேரிட்டது...

  அதில் முன் கோபத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் குறிப்பிட்டு அதற்கு சுவாரசிய தீர்வும் கொடுக்கப்பட்டுள்ளன.

  முன் கோபம்!

  ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

  கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

  நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

  அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

  ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

  முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

  நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

  அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

  எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

  மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

  ReplyDelete
 2. அழகிய விழிப்புணர்வு கவிதை !

  வாழ்த்துகள் பத்திரிக்கைத்துறை நிபுணருக்கு...

  ReplyDelete
 3. 8-இல் சிரித்த சிரிப்பு சிந்திக்கவும் வைத்தது.

  முன் கோபத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்கு கொடுக்கப்பட்ட கவிஞானியின் விழிப்புணர்வு சிரிப்பு

  அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.

  முன்கோபம்.
  எனக்கு ரொம்பவேவரும், கவிதையையும் தம்பி நிஜாம் அவர்களி்ன் கருத்தையும் படித்துவிட்டு இப்போதுதான் நான் திருந்தினேன்.

  இந்த பின்னூட்டத்தை யாரும் விளையாட்டாக எடுத்துவிடவேண்டாம், சீரியசாகவே நான் திருந்திவிட்டேன்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 5. மிக்க நன்றி காக்கா ..!
  எல்லா புகழும் இறைவனுக்கே !

  ReplyDelete
 6. கவிஞானி சிரித்தது சிலர்க்கு சிறப்பாக இருந்தது அருமையான பதிவு தொடரட்டும் சிரித்தது வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers