.

Pages

Saturday, January 12, 2013

அம்மம்மா...! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதே !!

காட்டில் திரிந்த சில 
காண்டா மிருகங்கள்
இரண்டு கால் மனித
மிருகமாய் உருவெடுத்த
கதை இது ! 

இதில் 17வது குட்டி [ மிருகமும் ] 
பங்கு கொண்டது கொடுமையிலும்
கொடுமை, அருவருப்பான
ஒழுக்கக்கேட்டின் விழுமிய
வெளிப்பாடு.

இந்திய திருநாட்டின்
தலைநகர் டில்லி மாநகரில்
மருத்துவ [ முடக்கியல் ] மாணவி
யரின் பரிதாப நிலை
இந்த வெட்கக்கேடான
சம்பவம் இந்திய 
திருநாட்டிற்கு இல்லையா ?

இறைநெறியும், ஒழுக்க நெறியும்
ஒன்றிப்பிணைந்து ஆலமர 
விருட்சமாய் செழித்தது
மக்கள் உள்ளங்களில் அப்போதே
ஆனந்தம் அமைதியாய் குடி
கொண்டது. ஆனாலும் என்ன !?
தொடர் ஒழுக்க நெறி
தொய்வால் எற்பட்ட ஆளுமை
கலாசார சீரழிவிற்கு
அப்போதே கால்கோலும்
ஊன்றப்பட்டது.

மனித புனிதனாக மாற்றங்கள்
ஏற்றங்கள் பெற வேண்டிய
மானுடனை பொதுவில் 
மிருகமாக மாற்றங்கள் 
செய்யப்பட்டுவிட்டது. 

சாத்தானிய்யத்தின்
புறப்பாடு ! இது !!
மார்க்கத்தையும், மதத்தையும்
அதன் சரியான பாதையில்
பின்பற்றபடாமல், மனோ
இச்சையை பின்பற்றியதின்
நிலைப்பாடு !!!

கண்ணின் மணியாய்
உயரின் ஒளியாய்
ஓசையாய் ஒளிர வேண்டிய
தீபஒளியாம் கற்பை
அனைத்து மிருக இச்சையால்
வேட்டையாடிய போது...!
அம்மம்மா...! நினைக்கவே
நெஞ்சம் பதறுகிறதே !!

ஏ ! மனிதா , மானுடனே !!
நீ உயர்ந்த படைப்பாய்
உயர்த்தப்பட்டிருக்கிறாய்
வரம்பு மீறாதே !!

வரம்பு நீ மீறும் போது
எல்லாவற்றிற்கும்
மொத்தமாக ஒரு முடிவு
உண்டு. அது நிச்சயம்
இறை நாட்டத்தால்
வந்தே தீரும் நெடுங்
கயிற்றை இழுத்துக்
கொண்டு வரம்பு மீறாதே
அதன்படி இறைவனிடம்
இருக்கிறது என்பதை
மறவாதே ! கரை சேர
வழியைக் கண்டிடு !!

இறுதியாக ஒன்று
சொல்வோம் மருத்துவ
மாணவியின் மகத்தான
இழப்புக்கு காந்திஜி
சொன்ன சுதந்திரச்
செய்தியினை நினைவு
கூறுகிறோம் ஆட்சி
யாளர்கள் இனியாவது
சிந்திக்கட்டும் சீர்
பெறட்டும்.

"ஒரு பெண் நடுநிசியில் தனியாக வெளியில் சென்றுவிட்டு எப்போது பாதுகாப்பாக வீடு திரும்புவாளோ அப்போதுதான் முழுச்சுதந்திரம் நாம் பெற்றதாக அடையாளப்படுத்தப்படும்"

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

9 comments:

  1. புதுமைக்கவியின் வெளிச்சப்பார்வை பொங்கி எழுகின்றது

    தொடரட்டும் என்றென்றும்...

    ReplyDelete
  2. புதுமைக்கவிஞ்சரின் புதுடில்லி பாலியல் நிகழ்வு குறித்த கவிதை என் நெஞ்சை புண்ணாக்கி விட்டது.

    சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காத நிலையில் நாம் வாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    துபாய் - சனிக்கிழமை - 12ஜனவரி2012.

    என் மரியாதைக்குறிய அதிரை ஜனாப் அப்துல் ரஜாக் அவர்களின் கவிதை என்றால் அதில் ஒரு தனிச் சிறப்பான விஷயம் இருக்கும். அந்த வகையில் இது ஒரு சிந்திக்கவைத்த கவிதை.

    பெண்.

    ஒரு மனிதன் பிறந்தவுடன்.

    இந்த உலகத்தில் ஒரு பெண்ணை பார்க்கின்றான்.
    அவள் மரியாதைக்குரிய தாய்.

    அதன் பிறகு பெண்ணை பார்க்கின்றான்.
    அவள் மரியாதைக்குரிய உடன் பிறந்த சசோதரிகள்.

    அதன் பிறகும் பல பெண்களை பார்க்கின்றான்.
    அவர்கள் உடன் பிறவா சகோதரிகள்.

    அதன் பிறகும் ஒரு பெண்னை பார்க்கின்றான்.
    அவள்தான் உடன் பிறவா சகோதரிகளில் ஒருத்தி.
    அவள் மனைவி.

    இப்படித்தான் ஆறு அறிவுபடைத்த மனிதரெல்லாம் பின்பற்றி வருகின்றனர்.

    காலத்தின் கேடோ, இல்லை கோள்களில் கேடோ, இல்லை வேறு எந்த பழக்கத்தின் கேடோ மனிதன் தன் சுய நிலையிலிருந்து மாறி வேறு நிலைக்கு தல்லப்படுகின்றான்.

    விளைவு?

    மகள் என்று பாரமாலும், சகோதரி என்று பாராமலும், உடன் பிறவா சகோதரி என்று பாராமலும், பெண்ணினம் என்று பாராமல் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றானே அவன் மனிதானா?

    உண்மையான மனிதன் தப்பு செய்ய மாட்டான்.

    மனிதன் திருந்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஓ, மனிதனே ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்று சொன்னார்களே, அதுக்கு அர்த்தம் என்ன?

    மிகுந்த வருத்ததுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. இது ஓரு மீள்பின்னூட்டம்.

    கவிதையின் தலைப்புக் கேற்றவாறு ஒரு புகைப்படம் (LOGO) மிகவும் நன்றாக இருக்கு.

    யாருடைய வேலை அது?
    நம்ம அன்பின் தம்பி இந்த வலைதளத்திற்கு உரிமையாளர் சேக்கனா M. நிஜாம் அவர்களாச்சே. அவர்களுக்கு சொல்லவா வேண்டும்?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    எனது நண்பனி தந்தையே மரியாதைக்குறிய அப்துல் ரஜாக் காக்கா அவர்களின் கவிதை மிக அருமையான ஆழமான கவிதை எல்லோரையும் சிந்திக்கவைத்த கவிதை உங்களின் சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்

    பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடுமையாக சென்சார் செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது....அதை முற்றிலும் தடை செய்ய வேண்டியதை தவிர வேறு வழியில்லை.

    அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது குற்றவாளிகளை உட்காரவைத்து சோறு போடும் சட்டங்களை அல்ல... இதே தவறு இனியும் நடக்காமல் இருக்க சட்டங்கள் கடுமையாகவில்லை என்றால் மக்கள் அரசாங்கத்தை நம்பமாட்டார்கள்....

    ReplyDelete
  6. செம செம அருமையா வெளிபடுத்தி இருக்கீங்க..

    ReplyDelete
  7. என் மரியாதைக்குறிய அதிரை ஜனாப் அப்துல் ரஜாக் அவர்களின் கவிதை என்றால் அதில் ஒரு தனிச் சிறப்பான விஷயம் இருக்கும். அந்த வகையில் இது ஒரு சிந்திக்கவைத்த கவிதை

    ReplyDelete
  8. கொடுமையான செய்தியாயினும் அதைக்
    கவிதையைச் சொன்னவிதமும்
    முடித்தவிதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையான கவிதை காக்கா சிந்திக்கவைத்த வரிகள் வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்கள் கவிதை ரசிகர்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers