.

Pages

Friday, January 11, 2013

[ 9 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

குற்றுயிரும்...
குலை உயிருமாய்...
தீயில் வெந்த நிலையில் 
துடி துடித்த நிலையில் 
கரை வேட்டி 
கட்டிய சிலர் 
வெறித்த கண்களோடு 
கூக்குரல் இட்டபடி
மருத்துவமனை வந்தடைதனர் 
பார்போர்கள் பதை பதைத்தனர் 
அச்சமேதும் மில்லாமல் ..
ஓங்கிய ஒலி கொண்டு 
சிரித்தார் கவிஞானி 

ஏன் சிரித்தாய் 
என்று சிலர் அதட்ட 
பதில் பகர்ந்தார் கவிஞானி 
பாவி மக்கா...
இந்த கொடுமை எங்கும் வேண்டாம் 
பெற்றடுத்தது இதற்கா 
கொலை குற்றம்
செய்த கட்சி தலைவன் 
கைதாகி சில நிமிடத்தில் 
செய்தி தீயாய் பரவ 
இப் பாதகன்
தீ'க்கு பலியானான் 
கைதாகி சில நொடியில் 
கட்சி தலைவன் 
விடுதலை யானான் 
பெற்றடுத்த தாயோ 
தவித்து நிற்கும் நிலை
பத்து மாதம் சுமந்த தாய் 
அல்லும் பகலும் 
அயராது உழைத்து 
வளர்த்த பிள்ளை 
முதுமையில் உதவும் 
என்று எண்ணிய தாய்க்கு 
பாவி மகன் கட்சி 
வெறியால் தீக்கு 
பலியானான் என 
கண் கலங்கினார் கவிஞானி...!
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

7 comments:

  1. ஒவ்வொரு பதிவிலும் நம் கவிஞானி சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் அவலங்கள் பலவற்றை எடுத்துச்சொல்லி நம்மை சிந்திக்க வைக்கின்றார்.

    சமூகத்தில் தொண்டர்கள் பலரின் நிலை இவ்வாறே இருக்கின்றன. அவர்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியத்தை கவிதையில் உணர்த்திருப்பது அருமையிலும் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    துபாய்.

    ஒவ்வொரு கவிதையிலும் அன்பின் கவிஞானி நம் மத்தியில் அன்றாடம் நடக்கும் அவலங்கள் பலவற்றை பக்குவாகமாக எடுத்துச்சொல்லி் நம்மை சிந்திக்க வைக்கின்றார்.

    தொண்டர்கள் தலைவன் என்று சொல்பவனுக்கு மரியாதை கொடுக்கலாமே தவிர, தலைவணங்குதல் உயிரை பலியாக்குதல் போன்ற செயல்கள் அகலவேண்டும்.

    தொண்டர்களே, நாளை நீங்கள் ஒரு கட்சிக்கு தலைவன் என்று சொல்லும் அந்தஸ்துக்கு வரும்போது தொண்டர்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகொடுத்து அவர்களையும் தலைவனாக்க முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  3. கவிஞானியின் 9ஆம் சிரிப்பில் அவசியம் உணர்த்தப்பட வேண்டிய வரிகளை சொல்லி இருக்கிறார்

    இன்றைய கால கட்டத்தில் கட்சி கட்சி என்று பாடுபடும் தொண்டனுக்கு கடைசியில் கிடைக்கும் வெகுமதி தான் தீக்குளிப்பு. இதனால் பாதிப்பு உன் குடும்பத்திற்குத்தான் என்பதை இனிமேல் உணர்வார்களாக...!

    ReplyDelete

  4. வணக்கம்!

    விழிப்புணா்வை ஊட்டும் வியப்புமிகு பக்கம்
    மொழியுணா்வை ஊட்டும் முனைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புச் சகோதரர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கட்கு,

      உங்களின் வருகையும் கருத்தும் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் !

      Delete
  5. அருமையான பதிவு கவிதையின் வரிகள் அருமை பதிவுக்கு நன்றி.அரசியல் தொண்டர்களுக்கு ஒரு விழிப்புணர்வு கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தீக்குளித்த தொன்டனுக்கு வீர மரனம் என்று பெயர் வைக்கிண்றனர் கட்சித்தலைவர்கள்! இப்படிப்பட்ட தொண்டனும் தலைவனும் இருக்கும் வரை பொற்ற வர்களுக்கு திண்டாட்டம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers