.

Pages

Sunday, January 6, 2013

சந்திப்பு : ‘தலைமை ஆசிரியர்’ ஹாஜி. மஹபூப் அலி அவர்கள் [ காணொளி ]

சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே !

1. மாணவர்களின் இன்றைய நிலை
2. மேற்கல்வி பயில்வது தொடர்பாக வழிகாட்டல்
3. மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய
ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்க்கும் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள்

ஆகிய கேள்விகளை முன்வைத்து சந்திப்பு தொடருக்காக அதிரை கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil., அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதின் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று தான் படித்த பள்ளியிலேயே வேதியியல் துறை முதுகலை ஆசிரியராக பணியை ஆரம்பித்து இன்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கைநிறைய சம்பளத்துடன் வேறு சில பணிகள் கிடைத்தும் அவற்றை உதறித்தள்ளி விட்டு ஆசிரியப்பணியின் மீதுள்ள அக்கறையால் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.

பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் பாட திட்டத்தில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை பலமுறை 100 சதவீத சாதனையாகப் பெற்றுத்தந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் அதிரையில் இயங்கி வருகின்ற நிதி உதவி அமைப்பான கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் பொருளாளராகவும் இருக்கிறார்.

பள்ளியின் வளர்ச்சி, மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த தயாராக இருப்பதும் இதற்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கூறுவது கல்வியின் மீது அவர் வைத்துள்ள பற்றுதலையே பறைசாற்றுகின்றன.


தொடர்புக்கு :
ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil.
[ தலைமை ஆசிரியர் – காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ]
மின்னஞ்சல் முகவரி : mahaboobali1505@gmail.com

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! சந்திப்புகள் தொடரும்...

6 comments:

  1. கல்வியில் பொருளாதாரத்தில் மேன்மை மிக்கவர்களாக மட்டுமல்லாமல் நல்ல ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக மாணவர்களை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பல பெற்றோர்களுக்கு இன்றைய மாணவ சமுதாயத்தின் நடப்புகள் பெரும் கவலையாக இருந்து கொண்டிருக்கிறது. புதிய தலைமை ஆசிரியர் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும் என்ற எண்ணம் கொண்ட துடிப்பான தலையாசிரியர் கிடைத்துள்ளார். அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதும் அவரோடு துணைநின்று காரியங்களை சாதிப்பதும் பெற்றோர்கள், பொதுமக்கள், பொது ஆரவலர்களின் கையில் இருக்கிறது.

    இனி ஒரு சாதனை படைப்போம், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    சேவைகளில் பல அதில் கல்விச்சேவை என்பது ஒரு மகத்தானது, எல்லையற்றது, உயிருள்ளது, போற்றத்தக்கது, மதிக்கத்தக்கது, கீழ்ப்படியதக்கது, துன்புறுத்தாது இன்னும் எவ்வளவு தூராம் வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டேபோகலாம்.

    அந்த வகையில் நோக்கும்போது
    ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil.
    [தலைமை ஆசிரியர் – காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி] அவர்கள் ஆற்றிவரும் இந்த கல்விச் சேவையை இந்த விழிப்புணர்வு பக்கத்தில் காணொலியோடு காணும்போது பள்ளிப்பருவத்தைக்காட்டிலும் மிக சந்தோஷமே.

    நிலத்திலிருந்து ஒரு கல் எறிந்தால் போதும் நிலத்தைநோக்கி ஏறாளமான இலந்தைப் பழங்கள் விழுவதுபோல் தன் பதவியில் இப்படியான தலைமை பொறுப்போடு மிகவும் நேர்தியானமுறையில் செயலாற்றும் உங்களுக்கு என்போன்ற நெஞ்சங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு தான் மட்டும் ஒழிந்துகொண்டு பதிவை மட்டும் பதிந்துவிட்டு என் போன்ற நெஞ்சங்களை மகிழச்செய்த அன்பின் தம்பி சேக்கனா M நிஜாம் அவர்களே உங்களை என்ன சொல்லி பாராட்டுவது?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

  4. ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil சாரை எங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்து அவர்கள் சேவை மனதுடன் ஆசிரியர் பணிக்கு வந்ததை எடுத்துச்சொன்ன அன்பின் சகோதரர் சேக்கனா M நிஜாம் அவர்களுக்கு நன்றி.

    //கைநிறைய சம்பளத்துடன் வேறு சில பணிகள் கிடைத்தும் அவற்றை உதறித்தள்ளி விட்டு ஆசிரியப்பணியின் மீதுள்ள அக்கறையால் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்//

    உங்கள் தலைமை ஆசிரியர் பணியை திறம்பட செய்து இன்னும் பல திறமையான மாணாக்கர்களை நமதூருக்கு உருவாக்கி தருவீர்கள் என நம்புகிறோம்.

    வாழ்த்துக்கள்...!


    ReplyDelete
  5. நம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும் என்ற எண்ணம் கொண்ட துடிப்பான தலையாசிரியர் கிடைத்துள்ளார். அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதும் அவரோடு துணைநின்று காரியங்களை சாதிப்பதும் பெற்றோர்கள், பொதுமக்கள், பொது ஆரவலர்களின் கையில் இருக்கிறது.

    இனி ஒரு சாதனை படைப்போம், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  6. ஒவ்வொரு மாணவனும் இதனை கடைப்பித்து நன்றாக பயன்படுதிக்கொள்ளவும் அருமையான பேச்சி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil. அவர்களுக்கு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers