திருச்சி விமான நிலையம் - இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை இயக்கி வருகின்றன. அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும். குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் மட்டுமே சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி விசயத்துக்கு வருவோம்...
திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோரை வளைகுடா நாட்டின் ஒன்றிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட காட்சிகள் அனைத்தும் என் மனதை வருடின. குறிப்பாக வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது மனதை வருடிய காட்சிகளாக இருந்தன.
குறிப்பாக...
1. குழந்தைகளோ தங்களின் அப்பாவை [ Father ] “டாட்டா” க் [ Bye Bye ] காண்பித்து வழியனுப்பியது... கண்ணீரை அடக்கிக்கொண்டு விரைவில் வந்துவிடுவேன்டா ‘செல்லம்’, ‘தங்கம்’ என கன்னத்தில் தட்டி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...
2. அன்பான மனைவியோ தங்களின் கணவன் இரண்டு மூன்று !?ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது...
3. பெற்றோர்களோ நினைவில் மூல்கியவாறு 'நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான்' என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது...
4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற எண்ணற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு 'கையசைத்து' விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது...
இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. விமான நிலையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பார்சல்களை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி...
2. பதற்றத்துடன் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
3. பயணம் மேற்கொள்ளும் முன் தங்களின் உடமைகளை சரிபார்த்துக்கொள்ளவும் குறிப்பாக தங்களின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவைகளை.
4. கூடுதல் எடைகளுடன் கூடிய பொருட்களை தவிர்க்கவும். விமான நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை மாத்திரம் கொண்டுசெல்லவும்.
சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...
அழகான உணர்வுகளை அவரவர் கோணத்திலிருந்து எடுத்துரைக்கும் நல்லதொரு பதிவு.
ReplyDeleteகடைசியில் கொடுத்துள்ளவை அனைவரும் கவனத்துடன் பின்பற்ற வேண்டியவைகளே.
பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteபதிந்து கவனத்தில் கொண்டு வந்த விழிப்புணர்வு வித்தகர் சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு நன்றி.
குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுப்பிரிந்து அயல் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது நினைவுகளை மனதில் சுமந்து நாட்களை கடத்தி வருவோம். விடுப்பு முடித்து திரும்பிச்செல்லும் போதும் நினைவுகளை மீண்டும் மனதில் சுமந்து செல்வோம். சுமை தாங்கியாகவே எங்களின் வாழ்வு கழிகிறது.
அப்படி இருக்கும் போது மறதி இருக்கத்தான் செய்யும். ஆனால் வீட்டை விட்டு கிளம்பி வரும்போதே சரிபார்த்துக்கொள்வது நலமே.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்பின் தம்பி சேக்கனா எம்.நிஜாம் அவர்களின் ஆக்கமாச்சே, சற்று சுவையாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
தாங்கிக் கொள்ளமுடியாத பிரிவோடுகளோடு விமானத்தில் பயணித்து வந்திறங்கி அதேநாள் பணிக்கு செல்லுவது என்றால் அது அதைவிட கொடுமையானது, காலம் செல்லச் செல்ல சரியாகிவிடும் என்றாலும் பிரிவு பிரிவுதான்.
திருமணம் முடிந்து முப்பது வருடங்களை கழித்திருக்கும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழ்ந்திருப்பதோ வெறும் ஐந்து ஆண்டுகளாகத்தான் இருக்கும் காரணம் வெளிநாட்டு வாழ்க்கை.
நல்ல சிந்திக்கக் கூடிய ஒரு ஆக்கத்தை கொடுத்து சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பயனுள்ள தகவல்களுடன் கூடிய பதிவு அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
i am having this experience in my life. i recall that moments.
ReplyDeleteஅவரவர் மனதில் உள்ளதை அருமையாக சொல்லிச்யுள்ளார் இது தான் நமது வாழ்க்கையின் முதல் படி.வாழ்த்துக்கள் சேக்கனா M. நிஜாம் காக்கா அவர்களுக்கு.
ReplyDelete