.

Pages

Thursday, January 10, 2013

மின்சாரப் பெண்னே !?

தில்லியில் 6 ஆண்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி, தமிழகத்தில் ஒரு ஆணால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி, பாண்டிச்சேரியில் ஆசிட் வீசி முகம் மற்றும் உடல் அங்கங்கள் கருகிய வினிதா என்ற பெண் இவர்கள் அனைவரும் ஆண்களால் சூறையாடப்பட்டவர்கள்.

தில்லிப் பெண்னோ தானாக வலையில் சிக்கியது போல் [ லிஃப்ட் கேட்டு பஸ் ஏறியவள் ] மாட்டிக்கொண்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவள், தமிழகப் பெண்னோ காமக்கொடுரனால் பாழடிக்கப்பட்டவள், பாண்டிச்சேரி வினோதினி தனக்கு தெரிந்த ஒரு ஆணால் காதலை மறுத்ததின் விளைவால் ஆசிட் வீசி துன்புறுத்தப்பட்டவள் இவைகளுக்கான காரணங்கள் எதுவானாலும் பாதிக்கப்பட்டது பெண்னே ! பாதிப்பை ஏற்படுத்தியது ஆண் ?

மின்சாரமென்பது அபாயகரமானது அபாயகரத்தை அனைவரும் ஆதரிக்கின்றோம் ஆனால் தக்க பாதுகாப்போடு ஒரு பெண் வெளியில் செல்லும் பொழுது இன்சுலேட் செய்யப்பட்ட மின்சாரக்கம்பி எவ்வாறோ அவ்வாறே தன்னுடைய ஆடை அலங்காரத்தில் அக்கறை காட்டாது பெண்னின் அங்கம் மின்சாரத்திற்குச் சமம்.

இன்சுலேட் என்பது மின்சாரத்திற்கு மட்டுமல்ல பெண்ணிற்கும் அவசியம் வெளியில் செல்லும் பொழுது  உடலை கவர் செய்வதில் பெண் அக்கறைக் காட்டுதல் வேண்டும். அடுத்தது வேளைக்கு போகும் பெண்கள் தம் சக தொழிலாளி அல்லது ஆண் நண்பர்கள் இவர்களிடம் பழகும் பொழுது [ தம்முடைய குணாதிஸயங்கள் எப்படியிருந்தாலும் ] சிடு மூஞ்சித்தனமாக இருப்பதே பெண்னிற்கு பாதுகாப்பு.

அடுத்தது வேளைக்கு சென்ற பெண்கள் இரவு 7 மணிக்குள் வீடு திரும்புவது அவசியம் அப்படிப்பட்ட வேளையை தேர்ந்தெடுத்துக் கொள்வது மிக அவசியம் 

ஆண்களுக்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதும் சம உரிமை இருக்கின்றன என்றாலும் இயற்கையாக பெண் சில விஷயங்களில் ஆணைச் சார்ந்து இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது. 

பெண் என்பவள் தாய் ! தாய் என்பவள் ஆணைப் பெற்றவள் !!

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்கிறது அல் குரான்.

தாயினும் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது இந்து மதம் !

அராஜகம் செய்யும் ஆண்களே தான் சார்ந்திருக்கின்ற ஆண் சரியில்லாததின் காரணம் கொண்டு எத்தனையோ பெண்கள் வேளைக்கு செல்கின்றனர் தம்முடைய வர்க்கம்[ ஆண் ] சரியில்லாததுதானே பெண்கள் வேளைக்கு போகின்றார்கள் ஆகையால் இனி அப்பெண்ணுக்கு நாம்தான் பாதுகாப்பளிக்க வேண்டும்.

மு.செ.மு.சபீர் அஹமது

18 comments:

 1. அலசல் அருமை !

  கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. சிந்திக்க வேண்டிய பதிவு.

  சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.

  இந்த அவலங்கள் மாற பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.

  சகோதரர் சபீர் அஹமது [மு.செ.மு] குறிப்பிட்டது போல ஆடை அலங்காரம், அந்நிய ஆண்களுடன் அன்னியோன்யமாய் பழகுவது, பேச்சில் குழைவு இவைகளை முடிந்த வரை தவிர்த்து கொண்டால் இது போன்ற தவறு செய்ய நினைக்கும் விசமிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளலாம்.

  ReplyDelete
 3. அலசல் அருமை !

  கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்பின் சகோதரர் அவர்களின் மின்சாரப் பெண்ணே என்ற தலைப்பில் ஆடை அலங்காரத்தோடு வந்த இந்த ஆக்கத்தை பார்த்து படித்துவிட்டு, பெண்ணினத்திற்காக நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வைத்தது.

  இதுவரை சும்மா கிடந்த என் சிந்தையை ஒரு கலக்கு கலக்கிவிட்டீர்கள், இனி பெண்களுக்கென்று நாம்தான் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவரனும்.

  இவ்வளவு வாஞ்சையோடு திட்டம் போடும் நம்மை, இதை விரும்பாத ஆண்கள் என்ன நினைப்பர்? விரும்பாத ஆண்கள் என்ன நினைத்தாலும் பெண்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கும்? பலவழிகளில் சிந்திக்க வேண்டியிருக்கு, எனினும் எதிர்நீச்சல் போட்டால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

  வாருங்கள் ஆலோசிப்போம், இது விளையாட்டல்ல, படு சீரியஸ். சகோதரிமார்களே நீங்களும் உங்களுடைய விளக்கமான கருத்துக்களை இங்கு பதியலாம்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 5. ** இன்சுலேட் என்பது மின்சாரத்திற்கு மட்டுமல்ல பெண்ணிற்கும் அவசியம் வெளியில் செல்லும் பொழுது உடலை கவர் செய்வதில் பெண் அக்கறைக் காட்டுதல் வேண்டும்.**

  Excellent

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  நானா, அவர்களின் இந்த கட்டுரையின் வடிவமைப்பு மிகவும் அற்புதம், ஒவ்வொருவரிகளும் உண்மையை சொல்லுகின்றது, உண்மையில் பெண்களுக்கு எந்த நேரத்திலும் உடலை கவர் செய்வதில் அக்கறைக் காட்ட வேண்டும்.

  சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அக்கறையுள்ள பெண்கள் இருக்கின்றார்கள், சில பெண்கள் செய்யும் தவரினால் இப்படி நடக்கின்றது.

  நானா, கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள் சொல்லியிருக்கும் ஐடியாககூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கு.

  \\எனினும் எதிர்நீச்சல் போட்டால் வெற்றி நிச்சயம் கிட்டும்.//

  கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

  வஸ்ஸலாம்




  ReplyDelete
 7. மூன்று வயது நான்கு வயது குழந்தைகளை கற்பழிக்கிறார்களே! அந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரி உடைகள் கொடுக்க வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. திரு விஜய் அவர்களே உங்கள் கேள்வி நியாயமானது. இப்போ உங்களுக்கு வயது என்ன என்று சொன்னால் உங்கள் கேள்விக்கு அவர் அல்ல நானே பதில் தர தயாராக இருக்கின்றேன்.

   அன்புடன்.

   K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
   த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
   உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

   Delete
 8. மூன்று நான்கு வயது குழந்தை ..
  தன்னை பாது காக தெரியாத வயது
  உடை தேவை இல்லை ..தாயின் இடை
  யில் இருக்க வேண்டும் ..(தாயி ன் பாதுகாப்பு )
  மிருகங்களிடமிருந்து...
  பாது காக்க கடுமையான சட்டம் தேவை ...

  ReplyDelete
  Replies
  1. 24 மணி நேரமும் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்க முடியுமா?

   Delete
  2. விஜை அவர்களே. ஒரு பெண் தாயாகிறாள் தாயின் பாதத்திற்க்கு கீழ் சுவர்கம் இருக்கிண்றது என்பதையும் எனது கட்டுறையில் சொல்லியிருக்கிறேன் ஆண்களாகிய நாம்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதையும் சொல்லி இருக்கிறேன் வெளியில் செல்லும் பெண்களின்(சில) அங்க அசைவு ஆணுக்கு ஒரு வித(காம) மின்சாரம் பாய்ச்சப்படுகிண்றதா இல்லையா? மனசார சொல்லுங்கள் தனது அங்கங்களை மறைத்து செல்வதில் பெண்களுக்கு என்ன பிறச்சனை எதில் குறைந்து விடுகிறாள்

   Delete
  3. //வெளியில் செல்லும் பெண்களின்(சில) அங்க அசைவு ஆணுக்கு ஒரு வித(காம) மின்சாரம் பாய்ச்சப்படுகிண்றதா இல்லையா?//

   அப்படி என்றால் நீங்களோ நானோ ஏன் பாலியல் பலாத்காரம் செய்வதில்லை?

   காம வெறி கொண்டவனுக்கு பெண்ணின் முகத்தை பார்த்தாலே காம உணர்வு வந்து விடுகிறது. அவ்வளவு ஏன்? அந்த உருவம் ஒரு பெண் என்று தெரிந்தாலே போதும். முழுவதும் போர்த்திக் கொள்வது இந்த விஷயத்திற்கு நிரந்தர தீர்வாகாது. சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் வளர வேண்டும். ஆணாதிக்க சிந்தனையிலிருந்து சமூகம் சிறிது சிறிதாக மாற வேண்டும். மாறும்.

   Delete
  4. திரு விஜய் அவர்களே, இறைவனின் படைப்பில் ஆண் இனம்தான் வெகு அழகு, அது மனித இனமாக இருக்கலாம் அல்லது மிருக இனமாக இருக்கலாம், ஆனால் ஆண்களின் கண்களுக்கு பெண்கள் அழகு இது இறைவனால் உண்டாக்கப்பட்ட நியதி இதுதான் உண்மை, அந்த இறைவன் மனிதனுக்கு மிருகத்தைக் காட்டிலும் கூடுதலான ஒரு அறிவையும் கொடுத்து இன்னும்பிற சிந்தித்து செயலாற்றக்கூடிய சக்தியையும் கொடுத்துள்ளான்.

   இந்த அறிவை வைத்துக்கொண்டு உங்களைப்போல் நல்லவர்களும் இருக்கின்றார்கள் இந்த உலகம் மறுக்கவில்லை, அதேசமயம் கெட்டவர்களும் அழைந்து கொண்டு இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வது? விடையை நீங்களே சொல்லுங்க.

   அன்புடன்.

   K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
   த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
   உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

   Delete
  5. //அதேசமயம் கெட்டவர்களும் அழைந்து கொண்டு இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வது? விடையை நீங்களே சொல்லுங்க.//

   அவர்கள் கெட்டவர்கள் ஆக மாறக் காரணமாக இருக்கும் நம்முடைய சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்க போராட வேண்டும். அதை விடுத்து பெண்களை மூடி வைப்பதில் நிரந்தர பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. பெரும்பாலான குற்றவாளிகள் பாலியல் வன்முறை செய்துவிட்டு அந்த பெண்களை கொலையும் செய்து விடுகின்றனர். இது பாலியல் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. மாறாக அவர்கள் மனதில் பதிந்திருக்கும் வன்முறை கலாச்சாரம் தான் முக்கியம். டெல்லி சம்பவத்தில் நடந்தது பாலியல் வன்முறை மட்டுமல்ல. அதையும் தாண்டி குரூரமாக நடந்து கொண்டுள்ளனர்.

   Delete
 9. அஸ்ஸலாமு அழைக்கும் அருமையாக சொல்லியுள்ளார்கள் மு.செ.மு.சபீர் அஹமது காக்கா அவர்கள் ஆண்களின் காம பார்வைக்கு 100% சதவீதம் பெண்களே காரணம் அவர்கள் அணியும் உடைகள் முதல் காரணம் இதைத்தான் நம் மார்க்கம் சொல்லுகின்றது.அதைதான் மதுரை ஆதினமும் சொல்லியுள்ளார்.

  ReplyDelete
 10. //வெளியில் செல்லும் பெண்களின்(சில) அங்க அசைவு ஆணுக்கு ஒரு வித(காம) மின்சாரம் பாய்ச்சப்படுகிண்றதா இல்லையா?//

  அப்படி என்றால் நீங்களோ நானோ ஏன் பாலியல் பலாத்காரம் செய்வதில்லை?

  ஒரு பெண்னை ஆசையாய் பார்த்தாலே(காமக்கண்கலோடு)விபச்சாரம் என்கிறது இஸ்லாம் நீங்கள் அப்பெண்னை கற்பழித்தால் தான் என்றில்லை காம இச்சையோடு பார்த்தாலே விபச்சார குற்றம் ஒரு கனம் சிந்தியுங்கள் தம்முடைய சகோதரியோடு நாம் தனியாக செல்லும் பொழுது 10 நபர்கள் தம் சகோதரியை கிண்டல் செய்தும் காம இச்சையோடு விமர்சித்தும் வந்தால் தாங்கள் தன்னந்தனியாய் இருக்கும் பச்சத்தில் எப்படியிருக்கும் கத்தி இருந்தால் குத்தி கொலை செய்து விடலாம் என்ற ஆத்திரம் வரும் அல்லவா

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers