நடு நிசி நேரமதில்
நன்றாக உறக்கமதி
யாவருமே திளைத்திருக்க
உள்ளமதில் உறங்கியிருக்கும்
நினைவு மட்டும் விழித்திருக்க
உல்லாச கனவுகளாய்
உறங்கியவரை கிறங்க வைக்க
நடு நிசி பொழுது
நல்லதொரு நேரமது
நம் கவிஞானி கனவிலும்
காட்சியது வந்ததுவே
கன பொழுதில் பதறியுமே
படுக்கையிலிருந்து எழுந்து விட்டார்
சுற்றுமுற்றும் பார்த்து விட்டு
சில நிமிடம் மௌனமானார்
அவர் கனவில் கண்ட காட்சி
மௌனத்தின் காரணமாம்
என்றும் போல் சபைதனில்
கவி ஞானி அமர்ந்திருக்க
பிறர் துன்பத்தின் காரணமதை
சொல்லி அவர் திருந்த செய்த
காரியங்கள் நன்மைதான்
என்றாலும்... உனக்கு நீ என்ன செய்தாய்
என்று ஒருவர் கேட்பது போல் கனவு கண்டார்
கவிஞானி...
அவர் பயணிக்கும் நாலதுமே
சில காலம் இருப்பதுவை
கனவின் அறிகுரியால்
நன்றாக உணர்ந்த அவர்
இனி வயதான காலமதில்
இறை தியானங்கள்
செய்திடவும்... உபரி தொழுகை தொழுதிடவும்
தனிமையதில் திருமறையை ஓதிடவும்
சமூகத்தின் அவலங்கள் கவிஞானியின் கனவுகளாக வெளிப்பட்டாலும் அதில் சிந்தனை தரும் தகவல் பல இடம்பெற்றது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே !
ReplyDelete// இறை தியானங்கள்
செய்திடவும்... உபரி தொழுகை தொழுதிடவும்
தனிமையதில் திருமறையை ஓதிடவும்
முடிவெடுத்து மௌனித்தார்.//
மேற்கண்ட இறுதி வரிகளில் நல்லதொரு வழிகாட்டுதலுடன் கவிதை தொடரை முடித்திருப்பது தனிச்சிறப்பு.
பத்திரிக்கைத்துறை நிபுணர் அதிரை சித்திக் அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு மற்றுமொரு சிறப்பான தொடரை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் வாசகர்களில் ஒருவனாக இருக்கின்றேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்பின் கவிஞானி அவர்களே, நான் கவலையில் இருக்கும்போதெல்லாம் உங்களின் கவி வரிகள்தானே என்னைத் தேற்றியது. ஆனால் இன்று நீங்கள் மௌனித்துவிட்டீர்கள் என்று பார்த்ததும் அதிர்ந்து போனேன்.
மொனகீதங்கள் என்று ஒன்று இருக்கும்போது மௌனத்திலும் சிரிப்பு இல்லாமலா போய்விடும்? நீங்கள் மௌனித்தாலும் நான் சிரிப்பதற்கே முயற்சிப்பேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மொனகீதங்கள் இல்லை மௌனகீதங்கள்.
ReplyDeleteஉனக்கு நீ என்ன செய்தாய்
ReplyDeleteஎன்று ஒருவர் கேட்பது போல் கனவு கண்டார்..
ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்கவேண்டிய கேள்வி சொல்லிச்சென்ற விதம் சிறப்பு.
கவிஞானி மௌனித்தாலும் கனவில் கண்டதுபோல்
ReplyDelete///உனக்கு நீ என்ன செய்தாய்
என்று ஒருவர் கேட்பது போல் கனவு கண்டார்///
கவிஞானியின் இத்தனை நாள் சிரிப்புக்கு ஒரு வரியில் பதிலுரைத்து மௌனித்து எங்கள் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்து விட்டார்.
அடுத்து இதுபோன்ற சமூக விழிப்புணர்வுடைய கவி வரிகளை தாங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள். அதிரை.சித்திக் அவர்களே.
அதிரை சித்திக் அவர்களுக்கு மட்டும் எப்படியல்லாம் கவிதைகளை வர்ணிக்க முடிக்கின்றது.அருமை வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.
ReplyDeleteசகோ நிஜாம்...சகோ ஜமால் காக்கா ,சகோ அதிரை
ReplyDeleteமெய்சா காக்கா ..சகோதரி சசி கலா ..,சகோ ஹபீப் ..ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி ...வாழ்வில் என்றும் இன்புற்று சிரித்துவாழ்வோம் ...பிறர் மனம் புண்படும் வண்ணம் சிரிக்காமல் இருப்போம் ...
ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்கவேண்டிய கேள்வி சொல்லிச்சென்ற விதம் சிறப்பு.
ReplyDeleteஅன்பு சகோ தமிழன் ...ஆம்
ReplyDeleteஒவொருவரும் தனக்கு தானே கேள்வி கேட்பது
ஒரு வகை வேள்வி தான்
3 ஜில்லா ஜமாத் ஒன்னு போகுது உங்க கவிஞானி போர் கொடுப்பாரா
ReplyDelete