ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என சொல்கின்ற அளவுக்கு மனித நேயம் நம் அனைவரிடத்திலும் வளர்ந்து காணப்படும்.
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !
சேக்கனா M. நிஜாம்
இதற்கான காரணம் இல்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற மனித வாழ்வாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ள ஒருவராலும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர முடியும்.
நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான். அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயலை சென்றடைகிறது. அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும். அதுபோல சமூகத்தில் நன்மக்கள் செய்கின்ற இது போன்ற சில சேவைகள் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் பயனை கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை !
எண்ணிக்கையை உயர்த்தி இயற்கை சீற்றத்திலிருந்து அவற்றை பாதுகாப்போம் என்றென்றும்...
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
வாழ்க ஆம்புலன்ஸ் ! வளர்க ஆம்புலன்ஸ்ஸின் சேவைகள் !
சேக்கனா M. நிஜாம்
பதிவுக்கு நன்றி
ReplyDeleteஆம்புலன்ஸ், இதை கண்டுபிடித்தவருக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவதாக இந்த வாகனத்தை அவசரகால தேவைகளுக்காக இந்த இடத்தில் நிறுத்தி, இக்கட்டான சூழலில் சிக்குண்டவர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியினை கொடுத்த இயக்கத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
ஆக மொத்தத்தில் எதுவாக யாராக என்னவாக இருந்தாலும் நாம் கவனிக்கப் படவேண்டியது பொதுசேவையையே. அந்த வகையில் பார்க்கும்போது இதுவும் ஒரு வகையில் மறுக்க முடியாத மகத்தான சேவையே.
சேவைகள் தொடரட்டும்.
சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றியடைவோம், சந்தோஷப்படுவோம், எதிர்காலத்தை வளமுள்ளதாக்குவோம்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நல்லொதொரு ஆக்கம்.
ReplyDeleteபதிவில் தந்தமைக்கு நன்றி.
ஆம்புலன்ஸ் என்பது ஒவ்வொரு ஊருக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று.
ஆம்புலன்சின் துரித சேவையால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கின்றன.
பதிவில் குறிப்பிட்டது போல ஆம்புலன்சின் அலைபேசி எண்கள் அவசியம் நம் அனைவர்களின் அலைபேசியில் இருக்கப்பட வேண்டியவை.
நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது போல் ...வள்ளுவனின் உதாரணம் ஆம்புலன்ஸ்
ReplyDeleteசேவையுடன் சேர்த்து எழுதிய ..எழுத்தாற்றல்
பாராட்டத்தக்கது ...
துரித சேவையால் உயிர் காப்போம்
ReplyDeleteதகவலுக்கு நன்றி நிஜாம்
ஆம்புலன்ஸ், அவசர வாகனம் ஏன் என்றால் அது உயிர் காக்கும் ஒரு வாகனம் அது அலாரம் இட்டால் நாம் ஒதுக்கி செல்ல வேண்டும்.
ReplyDelete