kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, February 15, 2013
[ 2 ] ஏன் பிறந்தாய்…?
நாளும் அறியுமுன்னே
நல்ல ஒரு பொருள் கூறி
உனக்கு நானுமதை
விளக்குகிறேன்
தங்கமது உசத்தி என்று
தரணிக்கே தெரியுமையா
குண்டுமணி நகையானாலும்
பாதுகாப்பாய் வைக்க வேண்டும்
பொன்னை விட பெண்ணை தான்
தரமாக மதித்திடனும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைக்கு
பாதுகாப்பை கொடுத்திடனும்
பள்ளியறைக்கு அழைக்கும்
பாதகனின் கண்ணுக்கு
குளிர்ச்சியான ஆடைகள்
அணியாமல் அலங்காரம்
பல செய்து ஆசையையும்
தூண்டாமல் பத்திரமாய்
அனுப்ப வேணும்
ஆசைக்கு இணங்காத
பெண்ணுக்கு ஆசிட்டை
ஊற்றும் காலமிது
ஆசையை தூண்டும்
அங்கங்கள் மூட வேண்டும்
ஆணுக்கு சமமாக
அலைவதையும் தடுத்திடனும்
பணத்தாசை பிடித்த இடம்
மனதாலும் தொட வேண்டாம்
தாயாக இருக்கும் பேரு
பெண்மைக்கு உள்ளது தான்
தாய் செய்யும் கடமைகள்
தவறாமல் செய்தாலே
தரித்திரங்கள் ஒரு போதும்
முதுமையத்தில் வந்திடாது
பேருந்து பயணமதில்
தக்க துணை யோடு
நடுநிசி நேரமில்லா
பயனமத்தை கொள்ள வேண்டும்
வீட்டிற்கு பெண்
விளக்காக இருந் தாலே
ஏன் பிறந்தாய் என்ற சொல்லும்
ஒரு போதும் வந்திடாது
அந்நியனின் கண்ணுக்கு
அசிங்கமாக தெரிந்திடனும்
குரலில் கூட இனிமைதனை
அன்னியருக்கு காட்டாதே
வீட்டில் இருக்கும்போதும்
அன்னியர்கள் விவரங்கள்
கேட்க வந்தால் தடித்த
குரலில் பதில் தரவே
திருமறையும் கூறுகிறது
பெண் என்றால் போன்னன்றோ ..
பெண் உரிமை என்று சொல்லி
பெண் விடுதலை என்று சொல்லி
பெண்ணை போக பொருளாய்
பார்ப்போரை ஏன் பிறந்தாய்
என்று கேளும் என்று
பதிலுரைத்தாள் பெண் அவளும்...!
ஏன் பிறந்தாய் ? தொடரும்...
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் பிறந்தாய்..? பெண்ணின் பாதுகாப்பை குறித்து அருமையான கவி விளக்கம். அருமை.
ReplyDeleteதொடர்ந்திடட்டும். வாழ்த்துக்கள்.
சமூகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்
ReplyDeleteபெண்கள் மீது அக்கறையுடன் எழுதப்பட்ட நல்லதொரு கவி !
தொடர வாழ்த்துகள்...
பெண்ணின் பாதுகாப்பு பற்றி கூறினால்
ReplyDeleteபழமை வாதம் என்கிறார்கள்
அருமையான கவி வரிகள் பெண்களின் இழப்பு நம்நாட்டின் அவமானம் பெண்கள் நம்நாட்டு கண்கள். வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.
ReplyDeleteஅன்பு நன்பர் அதிரை சித்தீக்
ReplyDeleteநல்லாய் பாடியுள்ளீர்
பெண்கள் மீது வைத்துள்ள கவனம் வெளிப்படுகிறது
ReplyDeleteநன்றி நண்பரே
அன்புத்தம்பி சேகன M நிஜாம் .சகோ அதிரைமெய்சா.தம்பி ஹபீப் .நண்பன் சபீர் .
ReplyDeleteசகோ தமிழன் ..வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி