kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, February 13, 2013
We Know... வினோதினி !
சிக்கிக் கொண்டவளே
வாழ்க்கை கனவுகள்
பலகண்டவளே
பாவிமகன் வீசிட்ட ஆசிட்டில்
தன்னுயிரை மாய்த்தவளே
வினோதினி உன்னை
நண்பர்கள் செல்லமாய்
வினோ என்றழைப்பர்
அதை We Know
உன் பெற்றோர் பட்ட
வேதனையும் We Know
ஆண் மகனின்
ஆணவம்தான் We Know
அன்பாய் அழகினாலும்
ஒரு அடி தள்ளி நின்று
பழகிடல் நன்று
என்பதையும்
போதித்து விட்டாய்
வினோ [We Know]
வினோதினி !
நீ தீனியானாய்
மரணத்திற்க்கு
சிறிது காலமாய்
பத்திரிக்கைகளுக்கும்
தீனியானாய்!
ஏனியாவாய்
என காத்திருந்த
பெற்றோருக்கு?
வயிற்று பசிக்காக
வேலை செய்யவரும்
பெண்களுக்கு
உங்கள் காமப்பசிக்கு
இரையாக்கிட நினைக்காதீர்
ஆடவரே
Subscribe to:
Post Comments (Atom)
மிக்க நன்றி சகோ. சபீர் அவர்களுக்கு...
ReplyDeleteசகோதரியே, நீ பட்ட வேதனைகளை நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன !
உனக்கு நேர்ந்த இக்கொடுமை, வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.
துன்பத்தில் வாடும் சகோதரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு இறைவன் இந்த இழப்பை தாங்கும் மனோபலத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteWe Know (WE NO - நாங்கள் கி்டையாது).
வினோதனியின் மரணத்திற்கு காரணத்திற்கு யாரோ ஒருவன் - நாங்கள் கி்டையாது.
காரணமானவன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், இனியொரு சம்பவம் நடக்கக்கூடாது, மானிட சமூதாயமே நீயும் இனி உறங்கிடக்கூடாது, பெண்கள் இனமே நீங்களும் இனியும் உறங்கிடக்கூடாது, தேசமே நீ உறங்கிவேகூடாது.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
விநோதினியை பற்றிய கவிதை படித்து நெஞ்சம் கனத்து விட்டது. காதெலெனும் பெயரில் களவாடப்பட்டது இந்த பிஞ்சுயிர்.
ReplyDeleteஈவிரக்கம் இல்லாமல் செய்த இந்தக்கொடுமை மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு என்ன தண்டனை...??????
அன்புச்சகோதரி விநோதினியை இழந்து வாடும் அந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல அகராதியில் வார்த்தையில்லை.
அன்புச்சகோதரி விநோதினியை இழந்து வாடும் அந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல அகராதியில் வார்த்தையில்லை.
ReplyDeleteசகோதரி விநோதினியை பற்றிய கவிதை படித்து நெஞ்சம் கணத்து விட்டது. காதெலெனும் பெயரில்ஒரு காமுகனால் களவாடப்பட்டது. இந்த பிஞ்சுயிர்.
ReplyDeleteஈவிரக்கம் இல்லாமல் செய்த இந்தக்கொடுமை மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு என்ன தான் தண்டனை...??????
அன்புச்சகோதரி விநோதினியை இழந்து வாடும் அந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல அகராதியிலும் வார்த்தையில்லை.
ஆகவே அவர்களின் மனம் சாந்தியும் சமாதானமும் அடைய இறைவனிடம் பிரார்த்திப்போமாக..!
அன்புச்சகோதரி விநோதினியை இழந்து வாடும் அந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல அகராதியில் வார்த்தையில்லை.
ReplyDeleteவினோதமான இவ்வுலகை
ReplyDeleteவிட்டு நீ விடை பெற்ற
வினோதினி,
மனசாட்சி உள்ளவர்களின்
மனத்தினில் ஆட்சி புரிகின்றாய், நீ!
உன் மீது வீசப்பட்ட அமிலத்தால்
உன் உடல் கருகியது போலவெ
உள்ளார்ந்த பாசமுடையோரின்
உள்ளங்களும் வெந்தனவே...!
ஒருதலைக் காதலுக்கு
தறுதலைகளின் விடையாக
அமிலத்தை வீசென்று
உமிழ்ந்து சொன்னது
உலகச் சினிமா தானே
சீரழிக்கும் சினிமாவால்
ஊரழிந்து போகு முன்பு
வழிகளை அடைத்திடும்
வழிகள் அரசின் வழியே
பழிகள் பெருகிடாமல் விழிப்பீர்!
தாக்கமுள்ள வரிகளைப் பதிவு செய்து ஆக்கத்தினை வழங்க்யுள்ள தொழிலதிபர் அவர்கட்கு உள்ளார்ந்த நன்றி
வினோதினியின் வாழ்க்கை ...
ReplyDeleteவிநோதமாய் முடிந்து போனது
பெற்றோர் எதிர்பார்ப்பில் ...
வினோதினியின் எதிர்கால கனவில்
மண்ணை போட்ட மா பாதகனுக்கு
மன்னிக்க முடியா கடும் தண்டனை
அளிக்க வேண்டும் ...நண்பன் சபீர் கருத்தில்
நயம் உள்ளது
வந்தோர் அனைவருக்கும் வரவேற்ப்பும் வாழ்த்துக்க்ளும்
ReplyDeleteவினோதினியின் நீ ஏன் பிறந்தாய்? சகோதரி வினோதனிக்கு நடந்த கொடுமை இனி எந்த சகோதரிக்கும் நடக்க கூடாது அந்த கயவனுக்கு கொடுக்க கூடிய தண்டனை மிக கொடுமையாக இருக்கனும் அப்போது தான் இதுபோன்று தவர்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும்.
ReplyDeleteஎன்னுடைய சின்ன டிப்ஸ் சில பெண்கள் ஆடைகளையும் கவர்ச்சிகள் இல்லாமல் அணியவும்.
பெண்ணை அடிமையாய் நினைக்கும் சில வக்கிர ஆண் வர்க்கம் இருக்கும் வரையில் மண்ணில் பெண்ணுக்கு விடுதலை இருக்க போவதில்லை.பாரதி கண்ட கனவுகள் எல்லாம் கனவுடனே நிற்க போகிறது.என்ன செய்ய முடியும் இவளால்??என்று தானே எதாவது ஒரு வகையில் பெண்களை தாக்கி கொண்டே இருக்கிறார்கள்.
ReplyDelete