kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, February 18, 2013
[ 3 ] ஏன் பிறந்தாய்...?
ஏன் பிறந்தாய்
வட்டிக்காரன் வாசலிலே
வசைபாடி நிற்கின்றான்
கேபிள் காரனவன்
கொடுக்கின்றான் பெரும் செலவை
பாலுக்கு மணியடித்து
அழைக்கும் பால்க்காரன்
பணம் கேட்டு அழுகின்றான்
நர்சரி பள்ளிக்கு
நலமாக செல்லும் பிள்ளை
தயங்கி போக மறுக்கிறது
ஆசையாக வாங்கி வந்த
தவணை திட்டம் பொருட்களுக்கு
தந்து விட்டான் எச்சரிக்கை
தவணை கட்டாது
போகுமாயின் பொருட்களையும்
எடுத்து சென்றிடுவேன்
என்று மிரட்டுகிறான்
இதற்கிடையே வீட்டுக்காரன்
வாடகை என்ன ஆச்சு என்று
இருமளால் சைகை காட்டிவிட்டான்
ஏன் பிறந்தாய் முதல் திகதியே
நிம்மதியை குலைப்பதற்கா
ஏன் பிறந்தாய்...?
[முதல் தேதியின் பதில் அடுத்த ஆக்கத்தில் ]
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
சமூகத்தில் உள்ள ஒரு பகுதினரின் மறுபக்க வாழ்வு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது
ReplyDeleteஇந்நிலை மாறவேண்டும் அல்லது மாற்ற முயற்சிக்க வேண்டும்.
முதல் தேதியின் பதிலைக் காண ஆவலாக இருக்கின்றேன்.
கவிதை அருமை !
வாழ்த்துகள்...
இன்றைய விலைவாசியில் அனைவரும் நினைக்கும் இந்நிலையை கவியாகத்தந்த விதம் சிறப்பு.
ReplyDeleteசிந்தனைப்பசிக்கு உணவளித்தது போல் சகோதரர் அதிரை.சித்திக் கவி வரிகள் அமைந்து இருந்தன. இனி முதல் தேதி வந்தாலே உங்கள் நினைவு வந்து விடும்...???
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிதை அருமை.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
உங்களின் ஒன்னாம் தேதி எப்படி ...?
ReplyDeleteநலமாக அமைய வாழ்த்துக்கள் ...
நண்பரே முதல் திகதியில் யார் கொடுக்கிறார் வாடகையை எரிச்சலை கிளப்பாதீங்க
ReplyDeleteசம்பளம் வாங்கும் மனிதரின் முதல் திகதியை பற்றி கூருங்கள் உங்கள் கவிதை நடையில்
நண்பரே காலம் பதில் சொல்லும் பொறுத்திருங்கள்
ReplyDeleteஏன் பிறந்தாய் அருமையான கவிவரிகள் ஆனால் அந்த ஒன்னாம் தேதி பிறக்காவிட்டால் நமகேள்ளாம் ஏது சம்பளம் அதற்க்காவது பிறக்கட்டும் அந்த ஒன்னாம் தேதி.
ReplyDeleteதம்பி ஹபீப் ..
ReplyDeleteதங்களின் பதிலே ..
முதல் தேதி கூறும் பதில்