kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, February 19, 2013
மின்வாரியமும்...!? அவர்களின் மின் விநியோகமும்...!?
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு அழகான ஊர் உள்ளது என்றால் அதுதான் அதிரை என்று அழைக்கப்படும் அதிராம்பட்டினம். கிழக்கு மேற்கு வடக்கு இம்மூன்று பகுதிகளையும் நிலத்தாலும் தெற்கு பகுதி;யை கடலாலும் ஆகிய எல்லைப்பகுதிகளை கொண்டதாகும்.
இவ்வூரில் கல்விக் கூடங்கள் பலவகையான வங்கிகள் மருத்துவமனைகள் சிறிய மற்றும் பெரிய வணிக மையங்கள் அதோடு தொழிற்சாலைகள் சமுதாய அமைப்புகள் அதோடு சமுதாய கூடங்கள் நற்பணி மன்றங்கள் இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டுபோனாலும் கடைசியாக வந்தோரை வாழவைக்கும் ஊர் எங்கள் அதிரையூர்.
அதிரைக்கு மின் இணைப்பு 1957-ம் ஆண்டில் வழங்கப்பட்டது அதே ஆண்டில்தான் நம் இந்தியாவில் செம்பு உலோகத்தாலான ஒருபைசா அதாவது நயாபைசா என்று அழைக்கப்பட்ட நாணயமும் வெளியிடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது மேலும் நான் பிறந்ததும் 57-ல்தான் என்றால் அதுவும் எனக்கு ஒருவகையில் சந்தோஷமே அதேநேரத்தில் இந்த 56-வருடங்களை கடக்கும் இந்த மின் இணைப்பைக் குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது காரணம் அந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்தின் வரவு ஒரு ஒளிமயமான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் அன்று 1957-ல் அதிரையின் மையப்பகுதில் ஒரே ஒரு மின்மாற்றியைவைத்து ஏறக்குறைய அநேக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கும் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் விவசாயப் பகுதிகளுக்கும் மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கி வந்தார்கள்.
இன்று அதிரையில் துணை மின்நிலையத்தையும் அமைத்து அதிலிருந்து பெறப்படும் 11000 ஆயிரம் உயர்மின்அழுத்தத்தை வைத்து 110-க்கும் அதிகமான மின்மாற்றிகளை நிறுவி மின்சாரத்தை வழங்கி வந்தாலும் அதிரையின் முழுத் தேவையை மின்வாரியத்தால் முழுதும் பூர்த்தி செய்யமுடியாமல் திணறுகின்றது என்றால் அதுவே உண்மை. காரணம் பல இருந்தாலும் ஏன் இந்த நிலை ?
இன்று அதிரையில் துணை மின்நிலையத்தையும் அமைத்து அதிலிருந்து பெறப்படும் 11000 ஆயிரம் உயர்மின்அழுத்தத்தை வைத்து 110-க்கும் அதிகமான மின்மாற்றிகளை நிறுவி மின்சாரத்தை வழங்கி வந்தாலும் அதிரையின் முழுத் தேவையை மின்வாரியத்தால் முழுதும் பூர்த்தி செய்யமுடியாமல் திணறுகின்றது என்றால் அதுவே உண்மை. காரணம் பல இருந்தாலும் ஏன் இந்த நிலை ?
நேரம் அறியாத அறிவிக்கப்படாத மின் வெட்டால் பள்ளிகளுக்கு செல்லும் மற்றும் உயர் கல்வியை பயின்று எதிர்காலத்தில் நம் பாரத இந்தியாவை வல்லரசாக மாற்றத் துடிக்கும் மாணவச் செல்வங்கள் தினம் தினம் அன்றாட வாழ்;க்கையை தொடங்கும் குடும்பங்கள் வேளைகளுக்கு செல்லும் பலதரப்பட்ட பணியாட்கள் ஏகப்பட்ட தொழில் மற்றும் வணிக மையங்கள் விவசாயிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனகைள் ஆக மொத்தத்தில் எல்லாமே நிலைகுழைந்து காணப்படுகின்றன. இது ஒரு ஊரில் என்றால் இதுபோல் தமிழகத்தில் எத்தனை ஊர்கள் உள்ளன ?
பொதுமக்களின் பொறுமைக்கு ஒரு நல்ல ஒளிமயமான எதிர்காலம் உண்டு நம் தமிழக அரசும் இந்த மின்வெட்டிலிருந்து விடுதலையடைய அதிதீவிரமாக செயல்பட்டுவருகிறது என்றால் அதுவே உண்மையிலும் உண்மை.
வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்டண மீட்டரில் உள்ள அளவுகளை குறித்துக்கொண்டும் அந்த அளவுகளுக்கான மின் கட்டணம் எவ்வளவு என்பதனை அவரிடம் உள்ள ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட வேண்டிய தொகையினை குறித்துக் கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகையை நாமும் அப்படியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்திவிட்டு வருகின்றோம்.
வீட்டு இணைப்புகளுக்கு:
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூ.1.00
நிலைக்கட்டணம் இல்லை.
நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும்தான் கூடுதலாக எந்த கட்டணமும் கடையாது.
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.1.50
நிலைக்கட்டணம் ரூ.20.00
நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 இதோடு நிலைக்கட்டணம் ரூபாய் 20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.2.00
201-500 யூனிட் வரை ரூ.3.00
நிலைக்கட்டணம் ரூ.30.00
நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை ரூ.2.00 வீதம் ரூ.400.00ம் மீதம் உள்ள 10 யூனிட்டுக்கு ரூ.3.00 வீதம் ரூ.30.00ம் நிலைக்கட்டணம் ரூ.30.00 ஆக மொத்தம் ரூ.460.00 செலுத்தவேண்டும்.
நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூ.3.00
201-500 யூனிட் வரை ரூ.4.00
500க்கு மேல் ரு.5.75
நிலைக்கட்டணம் ரூ.40.00
நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3.00 வீதம் ரூ.600.00ம் அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ.4.00 வீதம் ரூ.1200.00ம் மீதமுள்ள 10 யூனிட்டுக்கு ரூ.5.75 வீதம் ரூ.57.50ம் நிலைக்கட்டணம் ரூ.40.00 ஆகமொத்தம் ரூ.1897.50 நீங்கள் செலுத்த வேண்டும்.
கடைகளுக்கானது:-
1-100 யூனிட் வரை ரு.4.30.
100 யூனிட்டுக்கு மேல் உபயோகித்தால் 1 யூனிட்டுக்கு ரூ.7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிற்று ரூ.120.00 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Subscribe to:
Post Comments (Atom)
அறியத் தகவல் !
ReplyDeleteஅருமையான விளக்கம்
பிறருக்கு பயன்தரும் விவரங்கள்
தொடர வாழ்த்துகள்...
மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் தமிழக மக்கள் அவதி :
ReplyDeleteபெரும்பாலான ஊர்களில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.
அனைத்து அதிரை வாசிகளும் அறிய வேண்டிய பதிவு.
ReplyDeleteபதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
///பொதுமக்களின் பொறுமைக்கு ஒரு நல்ல ஒளிமயமான எதிர்காலம் உண்டு நம் தமிழக அரசும் இந்த மின்வெட்டிலிருந்து விடுதலையடைய அதிதீவிரமாக செயல்பட்டுவருகிறது என்றால் அதுவே உண்மையிலும் உண்மை.///
இப்போ தேவைக்கு கெரண்டு இருந்தா கொஞ்சம் கடனா தாரீங்களா...!
எப்படியும் வரும் மாதங்களில் 'முதல் நிலை'க்கு பலரும் வரக்கூடும்...
ReplyDeleteமின்வாரியத்தின் கணக்கு எடுப்பு எப்படி என்பதை அருமையாக பதித்துள்ளிர்கள் புரியதவர்க்கும் புரியக்கூடிய விதத்தில்.வாழ்த்துக்கள் ஜமால் காக்கா அவர்களே.
ReplyDeleteஹலோ,
ReplyDeleteமின்சாரம் மட்டுமா ஷாக் அடிக்குது? மின் வாரியத்தில் மின் கட்டணங்களும் சேர்ந்து அல்லவா ஷாக் அடிக்குது. ஷாக் அடிக்கிற விஷயம் இன்னும் அதிகம் இருக்குது, அது ஒவ்வொன்றாக பளிச் பளிச்சென்று வந்து கொண்டிருக்கும்.
நீங்கள் ஷாக் ஆகாமல் இருங்கள்.
கருத்து தெரிவித்த இனியும் தெரிவிக்கப்போகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
------------------------
நல்ல தகவல் ..
ReplyDeleteபதிவுக்கு நன்றி
அருமையான பதிவை தந்துள்ளிர் எனது பெற்றோர் திருமண நாள் அதிரைக்கு மின் இணைப்பு வந்த நாளும் அதுவே
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும்.vitrustu.blogspot.com
ReplyDelete