.

Pages

Saturday, February 2, 2013

பாரதியிடம் ஒரு குறுக்கு விசாரணை...

இந்தியா
சுதந்திரமடைவதற்கு முன்பே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டதாக 
கனவு கண்டாயே...
அப்போதே நீ
சொல்லியிருக்கலாம்
ஆனந்த சுதந்திரத்திற்கு
இப்படியொரு அர்த்தமிருப்பதை.

பாப்பாக்களைப்
படிக்கச் சொன்னாய்...
விளையாடச் சொன்னாய்...
சரிதான்,
பாடச் சொன்னாயே...?
இப்போதெங்கள்
பாப்பாக்கள் பாடும்
பாட்டையெல்லாம்
முகம் சுளிக்காமல்
முழுவதுமாய் கேட்டுவிட்டு
பிறாகாவது
உன் வார்த்தையைத்
திரும்ப பெற்றுக் கொள்கிறாயா ?

மங்கையராய் பிறப்பதற்கு
மாதவம் செய்ய வேண்டுமேன்றாயே ?
தவத்தின் பலம் !?
உன் வரமா ? சாபமா ? என்பதை
விளக்காமல் விட்டதேன் ?

ஊழலிலும் ஊரும்
அரசியல்வாதிகள்
இலஞ்சத்தில் புரளும்
அதிகாரிகள்
அச்சமில்லை அச்சமில்லையென்று
உலாவருவது
உனக்கு தெரியுமா ?

மெல்லத் தமிழினிச்
சாகும் மென்று
இப்போது நிகழ்வதை
அப்போதே சொன்னவன் நீ !
எதிர்பார்த்து சொன்னாயா ?
எதிர்பார்ப்பைச் சொன்னாயா ?

அண்ணா சிங்காரவேலு

15 comments:

 1. அதிரை அண்ணாவுக்கு வாழ்த்துகள்!

  அண்ணாவின் கவிதைகள் அண்ணாந்துப் பார்க்க வைக்கின்றன!

  இன்னும் முண்டாசுக் கவிஞன் பார”தீ” யெனும் அக்னிக் குஞ்சிடம் கேட்பதற்கு நிரம்ப உள. தொடருங்கள் உங்களின் குறுக்கு விசாரணையை.....
  உங்களை நேரில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. இன்றைய உலகில் ஒவ்வொரு ஊரிலும் முக்கிய ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சனைகளில் முதலிடத்தில் வருவது லஞ்சம் ! இதில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகள் [ PROFESSIONAL TAX, SALES TAX, CENTRAL SALES TAX, CUSTOM DUTY, INCOME TAX, Dividend Distribution TAX, EXCISE DUTY , MUNICIPAL & FIRE TAX, STAFF PROFESSIONAL TAX, CASH HANDLING TAX, FOOD & ENTERTAINMENT TAX, GIFT TAX, WEALTH TAX, STAMP DUTY & REGISTRATION FEE, INTEREST & PENALTY, ROAD TAX, TOLL TAX , VAT & etc… ] மூலமாகவே ஒவ்வொரு அரசு ஊழியர்களும் அவர்களுடைய சம்பளமாகப் பெறுகிறார்கள்.

  இதில் அவர்களுடைய கடமையைச் செய்ய எதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும் ? முன்பெல்லாம் அதிகாரத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுத்தார்கள் ஆனால் இன்று முறைப்படி நடக்க வேண்டிய வேலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் நகொடை,கட்டணம் ஏதும் பெறமால் சேவை செய்து வருகிறது தமிழகம் முழுதும் உள்ள மக்கள் தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையை இழக்காமல் வாழவேண்டும் என்பதே எங்களது நோக்கம் இந்நோக்கம் செயல்பட மக்களின் அறியாமை அகலவேண்டும். இப்படி சொல்வதுடன் நில்லாமல் தீர்வான தீர்வும் தருவதுடன் அதற்கு வழிகாட்டுகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உதவிமையங்களை செயல்படுத்தி பொது மக்கள் தங்களது அரசின் பயன்களை அடைய யாரிடம் எந்த அலுவலகத்தில் எப்படி முறையிடல் வேண்டும். புகார்களை எப்படி தெரிவிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறோம் சென்னையில் பிரதி மாதம் 1 ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதியும் நடைபெறும்.

   கட்டணமில்லா இந்த சேவை அனைவருக்கும் கிடைக்க இந்த தகவல்களை உங்களது நண்பர்களுக்கும் அதன் மூலம் அனைத்து நண்பர்களுக்கும் சென்றடைய உதவுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் - இந்தியன் குரல் --
   www.vitrustu.blogspot.com

   Delete
 3. //மங்கையராய் பிறப்பதற்கு
  மாதவம் செய்ய வேண்டுமேன்றாயே ?//

  உண்மைதான். கருவிலேயே கொல்லவும் செய்கிறார்களே.. !

  ReplyDelete
 4. அண்ணாவின் பாரதிக்கவிதை அகராதியை மாற்றிய இன்றைய கால சூழலை நாட்டில் நடக்கும் ஊழலை அழகாக வரிசைப்படுத்தியுள்ளது.

  வாழ்த்துக்கள் அன்பரே...!

  தொடரட்டும் உங்கள் குறுக்கு விசாரணை...
  .

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  பாரதியிடம் ஒரு குறுக்கு விசாரணை.
  கவிதை அருமை.
  என்ன கருத்து எழுதுவதென்று திகைக்கின்றேன்.

  வாழ்க உங்களின் குறுக்கு விசாரணை.

  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 6. பாரதியிடம் குறுக்கு விசாரணை சகோதரர் அண்ணா அவர்களின் குறுக்கு விசாரனை அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அதிரை அண்ணன் சிங்காரவேலுவின் குறுக்கு விசாரணையின் கவிதை வரிகள் அருமை உங்கள் கவிதை பதிவுகள் இன்னும் எதிர் பார்க்க படுக்கிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. தங்கள் சிந்தை சிந்திக்க வைக்கிறது. விசாரணை தொடரட்டும்.

  ReplyDelete
 9. சிறந்த கவி சொன்ன பாரதி ..
  வாழ்நாளிலும் தன்னுடைய கருத்து தனது சமூகதாரால் புறக்கணிக்கப்பட்டது ..இறந்த பின்
  போற்ற பட்டாலும் ..கவியின் தாக்கம் மேடை வரைதான் ...செயலில் அல்ல என்பதே உண்மை

  ReplyDelete
 10. கண்ணத்தில் அரையும் வார்த்தைகள்.... உமது சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நில் கவனி செல்
  http://vitrustu.blogspot.in/


  Balasubramanian Thiruvottiyur Chennai
  9444305581

  ReplyDelete
 12. ennaal mudiyum 2013 nigalvin vedio link

  http://vitrustu.blogspot.in/2013/02/ennaal-mudiyum-9-2013.html

  by balasubramanian Thiruvottiyur chennai
  9444305581

  ReplyDelete


 13. இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் நகொடை,கட்டணம் ஏதும் பெறமால் சேவை செய்து வருகிறது தமிழகம் முழுதும் உள்ள மக்கள் தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையை இழக்காமல் வாழவேண்டும் என்பதே எங்களது நோக்கம் இந்நோக்கம் செயல்பட மக்களின் அறியாமை அகலவேண்டும். இப்படி சொல்வதுடன் நில்லாமல் தீர்வான தீர்வும் தருவதுடன் அதற்கு வழிகாட்டுகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உதவிமையங்களை செயல்படுத்தி பொது மக்கள் தங்களது அரசின் பயன்களை அடைய யாரிடம் எந்த அலுவலகத்தில் எப்படி முறையிடல் வேண்டும் புகார்களை எப்படி தெரிவிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறோம் சென்னையில் பிரதி மாதம் 1 ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதியும் நடைபெறும்.

  கட்டணமில்லா இந்த சேவை அனைவருக்கும் கிடைக்க இந்த தகவல்களை உங்களது நண்பர்களுக்கும் அதன் மூலம் அனைத்து நண்பர்களுக்கும் சென்றடைய உதவுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் - இந்தியன் குரல் --
  www.vitrustu.blogspot.com

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers