.

Pages

Sunday, February 3, 2013

கோழிலே இம்புட்டு மேட்டரா !?

கோழி என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா ?

கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது.

2003-ல்  உலகில் இவற்றின் எண்ணிக்கை 24பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அந்த அளவுக்கு உலகம் முழுக்க அநுதினமும் பல வகைகளில் உணவாகி வருகின்றது என்றாலும் அதன் உற்பத்தியோ கணக்கில் அடங்காதது  அந்த அளவுக்கு உற்பத்தியும் பயன்பாடும் நிறைந்து காணப்படுகின்றது.

கோழிகளிலே நாட்டுக்கோழி  பிராய்லர்கோழி  நெருப்புகோழி  வான்கோழி நீர்க்கோழி இப்படி பலவகைகளில் இருந்தாலும் தற்காலத்தில் மக்கள் மத்தியில் அதீத பிரசித்தி பெற்றது பிராய்லர் கோழிதான்

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் கோழியின் வளர்ப்புமுறை என்ற ஒரு கலை எல்லா நாடுகளிலும் பல கோணங்களில் வளர்ந்து காணப்படுகின்றது. எல்லா நாடுகளையும் சேர்ந்த அசைவ விரும்பிகள் கோழியை ஒரு விஷேசித்த உணவாக உட்கொண்டு வருகின்றனர். சமையல் கலைகளிலும் கோழி ஒரு உன்னதமான மாமிச உணவாக சமைக்கப்பட்டு வருகின்றது. உணவகங்களில் வித விதமாக சமைக்கப்பட்ட கோழிக்கறிகளுக்கு கவர்ச்சிகரமான  பெயர்களைச்சூட்டி விற்பனை செய்து வருகின்றனர்  ஒவ்வொரு ரகங்களுக்கு ஒவ்வொரு பெயர்களை சூட்டினாலும் எல்லா ரகங்களும் படு டேஸ்ட்தான். 

உதாரணத்திற்கு – சிக்கன் சம்பல் சிக்கன் பிரியாணி சிக்கன் பிரைட் ரைஸ் சிக்கன் மசாலா ப்ரை சிக்கன் மஞ்சூரியன் சிக்கன் பாஸ்தா தேன் சிக்கன் கபாப் சில்லி சிக்கன் கராஹி பெப்பர் சிக்கன் தந்தூரி மொஹல் சிக்கன் கறி லெமன் இன்னும் இப்படியே 1000-த்துக்கும் மேல் சொல்லிக் கொண்டே போகலாம் என்றால் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

எங்கே டேஸ்ட் இருக்குதோ அங்கே ஆபத்தும் இருக்கும் ஆம் அந்த வகையில் பார்த்தால் இந்த கோழியும் விதி விலக்கள்ள எப்படியென்றால் சமைத்த கோழிகறியை 12நேரத்திற்குள் முடித்துவிடவேண்டும் அதற்குமேல் வைத்திருக்கும் கோழிக்கறிகளுக்கு எந்தவித உத்திரவாதமும் கொடுக்கமுடியாது  அது குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த கோழிக் கறியாக இருந்தாலும் அதற்கும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது. சமைப்பதற்கு முன்பு முழு கோழியையோ அல்லது துண்டாக்கப்பட்ட கோழி இறைச்சியையோ குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு வைத்து பின்பு சமைத்துவிடவேண்டும்  சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை 24 மணிநேர்திற்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்பு நன்கு சூடுபடுத்தி உட்கொண்டுவிடவேண்டும்.

சமைக்கப்பட்ட கோழிக் கறியில் ஏதேனும் சந்தேகப்படும்படி வாசனையோ அல்லது மசாலாவின் கலவையில் மாற்றங்கள் காணப்பட்டால் உட்கொள்ளாமல் அதை தவிர்த்துவிடுவது நல்லது.

கோழி முட்டையிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றன  அதே நேரத்தில் முட்டையின் தரம் அறிந்து பாவிப்பது நல்லது.

ஆக மொத்தத்தில் உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவதில் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

25 comments:

 1. கோழிலே இம்பூட்டு விசயமா !? அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

  விழிப்புணர்வு தரும் பதிவு !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

  வாழ்த்துக்கள்.

  கோழியின் சுவையையும் அது எத்தனை ரகமாக செய்யப்படுகிறது என்பதயும் வகை படுத்தி நாவில் எச்சில் ஊறவைத்து விட்டு.......

  அதன் பின்விளைவுகளை விளக்கி நா வறண்டு போகும்படி வைத்து விட்டீர்கள்.

  இனி கோழிக்கறி சாப்பிடும் போதெல்லாம் நம்ம மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கா ஞாபகம் தான் வரும்.

  ReplyDelete
 3. /இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகிறது./
  கோழி என்பது இப்பறவையின் பொதுப்பெயர், இப்பறவையின் பெண்ணினத்தைப் பேடு எனவும், ஆணினத்தைச் சேவல் எனவும் அழைப்பர்.

  ReplyDelete
  Replies
  1. இன்றுதான் முதல் முதலாக வருகைத்தந்திருக்கும் சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன், தாங்கள் குறிப்பிட்டதுபோல் எங்கள் பகுதியில் இப்பறவையின் பெண்ணினத்தை பெட்டைக் கோழி என்று அழைப்பதுண்டு, உங்களின் அன்பான தகவலுக்கு நன்றியோடு பாராட்டுக்கள்.

   Delete
 4. ஐயா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

  கோழிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்ததா ?

  ReplyDelete
  Replies
  1. ஐயா தமிழன் அவர்களே,
   உங்கள் கேள்விக்கு நன்றி.

   ஆதியில் இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்து பின்பு குழந்தைகளை உண்டாக்கினான், அதேபோல் ஆதியில் கோழியும் சேவலையும் படைக்கப்பட்டு பின்பு முட்டை வந்து அது பின்னாட்களில் குஞ்சுகளாக வெளிவந்து இருக்கும்.

   Delete
 5. ஐய்யா தமிழன்@ கோழியிலிருந்துதான் முட்டை வந்தது. :)

  ReplyDelete
 6. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

  தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்லதொரு பதிவு காக்கா வாழ்த்துக்கள் அய்யா தமிழன் அவர்களே கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழிவந்ததா என்பதை விட கோழியை வைத்து இத்தனை விரைட்டி சமைக்க முடியும் என்பது தான் பெரிய விசையம் , ஜமால் காக்கா ஊறுக்கு சென்று கடுமையான கோழி கறி வகை சாப்பிட்டுயிருக்க வேண்மென்று நினைக்கிறேன் ஆகையால் தான் கோழியை பற்றி கட்டுரை எழுதியுள்ளார்கள்.எனவே காக்கா அவர்களுக்கு என் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரர் அப்துல் மாலிக் அவர்கள் அபுதாபியிலிந்து கருத்து ஒத்துழைப்புக்கு நன்றி.

   நீங்கள் சொன்னதுபோல் பல வகைகளில் கோழிகளை பிரட்டி பிரட்டி துபாய் ஸ்டைலில் சாப்பிட்டது உண்மைதான். சாதுர்யமாக கண்டுபிடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

   Delete
 8. கோழி பற்றிய பல நல்ல தகவல் தந்த ஜமால் காக்காவுக்கு நன்றி ..
  உபரி தகவல் .சர்க்கரை நோய் உள்ளவர்கள்
  இரத்தில் அதிகம் கொழுப்பு உள்ளவர்கள் கோழி
  சாப்பிடுவது நலம்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரர் அதிரை சித்திக் அவர்களின் கருத்து ஒத்துழைப்புக்கும் உபரி தகவலுக்கும் நன்றி.

   ஊர் வருவதாக கேள்விப்பட்டேனே.

   Delete
 9. கோழிப்பண்ணை அருகில் இருந்தால் ஒரு முறை சென்று வரவும்... ஹார்மோன் ஊசி, இறந்த கோழிகளின் விலை..... இப்படி பலப்பல விவரங்கள் (கொடுமைகள்) தெரியும்...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் அனைத்தும் நம் நாட்டில் மட்டுமல்ல மேலைநாடுகளிலும் ஒரு சில பகுதிகளில் ஹார்மோன் ஊசி, இறந்த கோழிகள்.................இன்னும் நிறையவே உள்ளன. கூடுமானவரை அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவதுதான் கூடுதல் பாதுகாப்பு.

   உங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 10. ஞயற்றுக் கிழமை வந்து விட்டால் நிச்சயம் ஒரு கோழி தொடை பீஸ், கோழிக்கறி குழம்பு வயற்றுக்குள் சென்று விடும். ஆனால் கோழிக்குள் இத்தனை சங்கதிகள் உள்ளன என்பதை இப்பதிவு எடுத்துக் காட்டுகிறது. கோழிக்கறி சாப்பிட வேண்டுமானால் வீட்டில் சமைத்து சாப்பிடுவது மேல், கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட. கோழிக்கறி அபயகரமாகவும் மாறும் என்பது நல்ல விழிப்புணர்வு. பதிவை சிறப்பாக எழுதிய திரு ஜமால் முகம்மது அவர்களுக்கு பாராட்டுகள்.. வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. விடுமுறை நாட்கள் நமக்கு மட்டும்தான், சில வீட்டு விலங்குகளுக்கு விழா எடுத்து ஒருநாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது, ஆனால் பாவம் கோழிகள்!?!?

   நீங்கள் சொன்னதுபோல் கூடுமானவரை அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவதே கூடுதல் பாதுகாப்பு.

   உங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 11. அருமையானதொரு பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும், கருத்து ஒத்துழைப்புக்கும் நன்றி.
   வாழ்த்துக்கள்.

   Delete
 12. Replies
  1. உங்களின் வருகைக்கும், கருத்து ஒத்துழைப்புக்கும் நன்றி.
   வாழ்த்துக்கள்.

   Delete
 13. அறியாத பல விஷயங்களை அறிந்தேன்
  பகிர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers