பயணிகளின் ஆர்வம் செல்லும்
ஊருக்கு பேருந்து வருகிறதா
என்ற ஆர்வம்
பயணி என்றால் பைத்தியகாரன் என்பர்
உண்மையிலேயே பைத்தியம் போல்
ஒருவர் அங்கும் இங்குமாக
அலைந்தவராய் இருந்தார்
கண்கள் எதையோ தேடியது
அங்கிருந்தோர் சிலர் என்னாயிற்று
என கேட்க பல ஆயிரம் பணத்தோடு
சில தங்க நகைகளும் தொலைந்ததை
கூறி அழுதார் பார்போர் மனம்
பதை பதிக்க கவிஞானி மட்டும்
ஏளனமாய் சிரித்து விட்டார்
என் சிரித்தீர் ? என சிலர் கேட்க
பதில் பகர்ந்தார் கவிஞானி.
இவன் தொலைத்தது பணம்
மட்டுமல்ல வாழ்க்கையையும் தான்
பெரும் பணம் படைத்த செல்வன் இவன்
சூது எனும் மாய நோயில் இவன் மனமும்
கலந்ததையா தினம் இவன்
இல்லாளின் நகையை எடுத்து வந்து
சூதில் தொலைப்பதுவே இவன் வேலை
வீதியில் தொலைத்த பணம்
இவன் கையில் கிடைத்து விட்டால்
சூதில் போய் தொலைத்திருப்பான் ஐயா
தொலைக்க இவனிடம் ஏதுமில்லை
எனவே தான் அழுகின்றான்..!
சூதும் மாதும் வேதனை செய்யும்
என்ற மூதாட்டி அவ்வை சொல்
அறியாதார் யாருமுண்டோ...!
என் சொல்லி சிரித்தார்
கவிஞானி
[ சிரிப்பது தொடரும் ]
// சூதும் மாதும் வேதனை செய்யும்
ReplyDeleteஎன்ற மூதாட்டி அவ்வை சொல்
அறியாதார் யாருமுண்டோ...!
என் சொல்லி சிரித்தார் //
நல்லதொரு உபதேசம் !
சமூக அவலங்கள் கவிஞானியின் சிந்தனைப் பார்வையில் தொடரட்டும்...
இம்முறை சுருங்க சிரித்தாலும் சூதில் தோற்று குடும்பத்தை நடு வீதியில் கொண்டு வந்து விட்டவர்களுக்காக உணரவைத்து சுள்ளென்று சிரித்துள்ளார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசகோதரர் அதிரை சித்தீக் அவர்களின் ஆக்கத்தில் சூது இல்லை மாது இல்லை வேதனை இல்லை, அப்படி என்றால் வேறு என்னதான் இருக்கு?
சிறியதாக சொன்னாலும் காரம் இருக்குதே, காரத்தோடு கருத்தும் இருக்குதே, கருத்தோடு சிரிப்பு இருந்தாலும் கவிஞானியின் சிரிப்புக்கு எப்போதும் ஒரு வரவேற்ப்பு இருக்குதே, இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சூதாடுபவர் பணத்தை மட்டும் பறிகொடுப்பது இல்லை ..வாழ்வையே பரி கொடுத்து விடுகிறார்கள்
ReplyDeleteவளைகுடா நாடுகளில் கூட சூதாடிகள் முழுமாத
சம்பளத்தையும் சூதிலே விட்டு விடுகிறார்கள் பாவம்
குடும்பம் ஊரில் சோற்றுக்கு வலி இல்லாமல் பரிதவிக்கும் சூழல் ..சூது வேதனைக்குரியதே
தம்பி சேகனா M நிஜாம்,சகோ அதிரை மெய்சா ,
சகோ ஜமால் காக்கா ஆகியோர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நல்ல கருத்தை விளங்க வைத்த கவிதை .
ReplyDeleteநல்ல கருத்தை விளங்க வைத்த கவிதை .
ReplyDelete"சூதும் மாதும் வேதனை செய்யும்"
ReplyDeleteமெல்ல பேசும் கவிஞரே... பெண்மை பற்றி எது சொன்னாலும் இங்கே ஆணாதிக்கம் என்பர்.
சரியாக சொன்னீர்கள் இராம.மகேஸ்வரன்
ReplyDeleteபெண்கள் தந்து பெண்மையை பாதுகாக்கும்
வரை தான் அவர்கள் போற்ற தக்கவர்கள் .
தனது உடலை வியாபாரமாக்கி மாது என்ற
சொல் வேண்டாத சொல்லாக மாற்றும்
விபச்சாரிகள் பற்றி விமர்சிப்பாதால்
அது பெண்களுக்கு எதிரான கருத்துஎன்று
சொல்ல முடியாது
சகோ இராம .மகேஸ்வரன் .,சரியான கருத்தை சொன்னீர்கள்..விபச்சாரிகளை மாது என்று ஔவை
ReplyDeleteபாட்டிகூறி இருப்பது ..ஒட்டு மொத்த பெண்களை
அல்ல..முறை கேடான பெண்களை பற்றிதான்
அதாவது விபச்சாரிகளை பற்றி தான் .
சூது மாது மது இவை அனைத்தும் நமக்கு கேடுதான் அதனை கவிதையாக பதித்தமைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் வேகம்.வாழ்த்துக்கள் அதிரை சித்திக்,
ReplyDelete