ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தெரியாதவர்கள் யாரும் இல்லயென்றே சொல்லமுடியும் கோடைகாலம் என்றில்லாமல் எல்லா நாட்களிலும் ஐஸ்கிரீம் என்ற ஜில் ஜில் உணவை ஜில்லென்று சாப்பிட ஏராளமானவர்கள் இருக்கின்றனர் சிறியவர் பெரியவர் என்றில்லாமல் எல்லா வயதினரும் தயார் என்றால் பாருங்களேன் எந்த அளவுக்கு அமோகம் என்று. ஐஸ்கிரீம்களில் எத்தனையோ வகையராக்கல் உண்டு அதில் ஒன்றுதான் குல்பி என்றழைக்கப்படும் ஒரு வகையான ஐஸ்கிரீம்.
இதை ஆங்கிலத்தில் முரடக அல்லது ஞரடக என்று அழைக்கப்படும் இது இந்திய துணைக் கண்டத்தில் ஒரு பிரசித்திபெற்ற ஐஸ்கிரீம் மேலும் பாகிஸ்தான், வங்காளதேஷம், நேபாள் பர்மா போன்ற நாடுகளிலும் நாளடைவில் மத்திய கிழக்கு ஐரோப்பா கிழக்கு ஆசியா வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் மக்களால் விரும்பி சாப்பிடும் ஒரு விஷேசமான ஐஸ்கிரீம்.
முகலாய பேரரசர் ஜஹாங்கீர் அவர்களுடைய மனைவி நூர்ஜஹான் அவர்களால் உறைந்த ஹிமாலயன் ஏரிகளில் இருந்து பெறப்பட்ட ஐஸ் கட்டிகளை கொண்டு சுண்டிய இனிப்பான பால் மற்றும் பழ கூழ்களைக் கலந்து கி.பி.1600-ன் முற்பகுதியில் உருவாக்கியதாகவும் நவீன குளிர்பதன பெட்டிகள் வரும் வரை இந்த முறையில்தான் வட இந்திய உயர்குடி மக்களாலும் தயாரிக்கப்பட்டு வந்தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
வட இந்தியாவில் குல்பி ஒரு பாரம்பரிய ஐஸ்கிரீம் உணவாக கருதப்பட்டு வருகின்றது. விஷேச நாட்களிலும் விருந்தினர்களுக்கு பரிமாறும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
அதே நேரத்தில் நாம் இதை ஒரு உணவாக உட்கொள்ளும்போது பல விஷயங்களை சிந்திக்க வேண்டியிருக்கு.
(2) இதன் தயாரிப்பின் ஆரம்ப மற்றும் முடிவுபெறும் கால அவகாசம் என்ன.
(3) இதை தயாரிப்பவருக்கு மருத்துவச் சான்றிதழ்கள் இருக்குதா ?
(4) தயாரிக்கப்படும் நிறுவனத்தின் முழு முகவரி.
(5) இதில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள்.
போன்ற அநேக விவரங்கள் விதிமுறைகளை நாம் பார்த்து வாங்க வேண்டும். சரியான விவரங்கள் இல்லாத பொருள்களை வாங்குவதிலிருந்து தவிர்த்து கொள்ளுதல் நல்லது எதையுமே வருமுன் காத்துக் கொள்வது மிக மிக நல்லது.
குடிசைத் தொழிலோ அல்லது வேறு எந்த தொழிலோ அது முக்கியமல்ல முறையான விவரங்கள் வேணும் அவ்வளவுதான். தற்போது சில இடங்களில் உணவுப்பொருள்களின் தயாரிப்பு முறை மிகவும் மோசமாதாகவும் சுகாதார கேடு விளைவிக்கும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது. பொதுமக்கள் அவசர வேலைகள் நிமித்தம் எதையும் சிந்திக்காது வாங்கி சாப்பிட்டுவிடுகின்றனர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் பக்கத்து மாநிலத்தில் உலகமுழுதும் ஒரு பிரசித்திபெற்ற உணவு தயாரிக்கும் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட கோழிக்கறியில் நோய்களை உண்டாக்கும் பல கிருமிகளை கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததை இந்த உலகம் மறந்திருக்காது.
இது குல்பியோடு நின்றுவிடவில்லை பால்கோவா, பஞ்சுமிட்டாய் பொரிச்ச முறுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆக இதன் தயாரித்தலை விழிப்புணர்வோடு ஆராய்ந்து பரிசோதித்து பார்ததல் பொதுமக்களின் கடமை. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் இப்படி செய்தால் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக மிகவும் எச்சரிக்கையோடு தரமானதை தயாரித்து விற்பனை செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.
பொதுமக்களே பசி பொறுக்க முடியாததுதான் ஆனால் நோய் அதைவிட பொறுக்க முடியாதது நோய் கடுமையான வேதனையை தரக்கூடியது. நோய் பணச்செலவை எற்படுத்தக்கூடியது நோய் சில நேரம் உயிரையும் குடித்துவிடக்கூடியது. ஆகவே பசியோடு இருக்கும் நீங்கள் கொஞ்சநேரம் சிந்தித்து ஆலோசித்து நல்ல உணவுகளையே வாங்கிப் பருகுங்கள் கூடுமானவரை சொந்தமாக சமைத்தே பருகுங்கள். மற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் நீங்கள் உணவிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
தகவல் அனைத்தும் அறியாதவை !
ReplyDeleteசுவாரசியமாக தொகுக்கப்பட்டு இறுதியில் தந்துள்ள அறிவுரை அருமை
தொடர வாழ்த்துகள்...
உங்களின் கருத்துக்கு நன்றி.
Deleteநல்ல விழிப்புணர்வு கட்டுரை என்றே சொல்ல வேண்டும். விதிமுறைகளை நாம் பார்த்து வாங்க வேண்டும். சரியான விவரங்கள் இல்லாத பொருள்களை வாங்குவதிலிருந்து தவிர்த்து கொள்ளுதல் நல்லது எதையுமே வருமுன் காத்துக் கொள்வது மிக மிக நல்லது. குடிசைத் தொழிலோ அல்லது வேறு எந்த தொழிலோ அது முக்கியமல்ல முறையான விவரங்கள் வேணும் அவ்வளவுதான். தற்போது சில இடங்களில் உணவுப்பொருள்களின் தயாரிப்பு முறை மிகவும் மோசமாதாகவும் சுகாதார கேடு விளைவிக்கும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.இவை சரியான வார்த்தை காக்கா மக்கள் யாரும் இதையெல்லாம் யாரும் பார்ப்பது கிடையாது. உங்களின் இந்த தவலுக்கு மிக்க நன்றி உங்களின் அறிவுரைக்கு.மேலும் உங்களின் பனி தொடர என் வழ்த்துகள்...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteவெளி உபயோகத்துக்கு வாங்கும் பொருள்கள் எதுவாக இருந்தாலும் அதை அப்படி இப்படியென்று புரட்டி புரட்டி பார்த்து வாங்கும் நாம், ஏன் உள் உபயோகத்துக்கு வாங்கும் பொருள்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதி்ல்லை?.
முகலாயர் காலத்து உணவா நல்ல தகவல்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteசாப்பிட்டு பாருங்கள்.
அருமையான விழிப்புணர்வு பதிவு.!
ReplyDeleteஐஸ் கிரீமின் வெரைட்டி போல ஜமால் காக்காவின் ஆக்கமும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சுவையுடன் உள்ளது.
உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஎன்னுடைய ஆக்கத்தில் நல்ல சுவையிருந்தால் சுவைக்க மறக்க வேண்டாம், அதே நேரத்தில் சுவையில் ஏதாவது மாற்றம் கண்டால் உடனே புகார் செய்யுங்கள்.
உங்கள் மனம் போல் குளிர்ச்சியானது இவ்வாக்கம்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteகருத்தும் குளிர்ச்சியாகவே இருக்கின்றது.
சிறுவயதில் தின்ற நாபகம் வருக்கின்றது குல்பி ஐஸ்கிரீம் என்றால் அது ஒரு தனி ருசித்தான் வாயே வைத்து உரிந்தால் அதில் உள்ள ருசியே தனித்தான்.வாழ்த்துக்கள் நாபகம் செய்தமைக்கு
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Delete