.

Pages

Thursday, February 7, 2013

உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !

1. கட்சிக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...

2. கட்சியின் 'தல' பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...

3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...

4. கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...

5. கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு...

6. தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றி மிட்டாய் பொவுரும் உங்களுக்கு...

7. எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு...

8. சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு...

9. மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு...

10. கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு...

உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...

1. சமூக நலன்

2. உள்ளூர் வளர்ச்சி

3. வேலைவாய்ப்புகள்

4. விளையாட்டுப் பயிற்சிகள்

5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு

6. சமூக குற்றங்கள் ஒழிப்பு

7. கல்வி மேம்பாடு

8.  சுகாதார விழிப்புணர்வு

9. வட்டி

10. லஞ்சம் ஒழிப்பு

11. ரேஷன் முறைகேடுகள் தடுப்பு

12. முதியோர் நலன் 

13. இலவச மருத்துவ முகாம்

14. கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி

15. நலத்திட்ட உதவி

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?

உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !

சேக்கனா M. நிஜாம்

[ இது ஒரு மீள் பதிவு ]

9 comments:

  1. //உன்னைத்தான் கேக்கிறேன்..! 'தில்லு' இருக்கா !? சொல்லேன் பாப்போம் !//

    அருமையான தலைப்புடன் யாவரையும் சிந்திக்க வைத்த கேள்விக்கணைகள்..!

    அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட சமூக பிரச்சனைகள்...!

    இதையெல்லாம் யார் தீர்த்து வைப்பது...???

    தில்லு இருந்தா சொல்லுங்களேன்..!!!

    ReplyDelete

  2. இந்த கேள்வியை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இது போல் பெரும் பதவிகளில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இந்த கேள்விக்கு பங்கு உண்டு.

    ReplyDelete
  3. நெஞ்சத்”தில்’ ஆழமாய்ப் பதிந்த”தில்” இஃதே போன்று வேறு எ”தில்” உண்டு என்று நெஞ்சம் என்னும் “தில்” இருந்தா சொல்லுங்களேன் யாராவது?
    துணிவுக்கு மறுபெயர் நிஜாம் என்பதே நிஜம்!

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    உன்னைத்தான் கேக்கிறேன் என்று இடது கையை நீட்டிக்கொண்டு கேட்பது கடுமையான கோபத்துடன் கேட்பதுபோல் இருக்கு, இவ்வளவு நாட்கள் பொறுத்தாச்சே, இனியும் எவ்வளவு நாட்கள் பொறுக்கனும்?

    சரியான கேளிவிக் கனைகள், என்றாலும் பதில் சொல்ல யார் முன்வருவது?

    அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையுடன்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. நெத்தியடி கேள்விகள்

    ReplyDelete
  6. அருமையான தலைப்பு தலைப்புக்கு ஏற்ற காரச்சாரமான கேள்வி சிந்திக்க வேண்டிய ஒன்று அனைவரும்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நண்பர்களே இந்தியன் குரல் அமைப்பின் நிறுவனர்கள் ஆகிய நானும் எனது சக நண்பர்களும் எங்களால் முடிந்த அளவு மக்கள் பிரச்சனைகளைக் களைய உதவிவருவதொடு பயிற்ச்சியும் அளிக்கின்றோம் தமிழகம் முழுவதும் இலவச உதவி மையங்களை நடத்தி வருகிறோம் சென்னையில் பிரதி மாதம் 01,15 ஆகிய இரு தினங்கள் இலவச உதவிமையம் செயல்படுகிறது முகவரி கும்பத் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் 29 ரட்டன் பஜார் பூக்கடை காவல் நிலையம் எதிரில் சென்னை 600003 பிற மாவட்ட உதவிமையம் வலைப்பூவில் பார்க்க. உங்களது சுய அடையாளம் இழக்காமல் உங்கள் அமைப்பின் பெயரிலேயே எங்களோடு இணைந்து செயல்படலாம் அல்லது இந்தியன் குரல் மூலம் செயல்படலாம்
    மனமிருந்தால் மாற்றம் வரும் இந்த சமூக அவலங்களை சுட்டிக்காட்டாமல் தீர்வுக்கான முன்செல்

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers