.

Pages

Wednesday, February 6, 2013

கவனம் : பால் வாங்கும் முன் !

பால் என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்ககும் ஒரு உணவுப் பொருள் பால்.

பெரியவர்களுக்கென்று மாட்டுப்பால் ஆட்டுப்பால்  ஒட்டகப்பால் இப்படி இருக்கின்றது  எல்லா நாட்களிலும் பால் ஒரு அதீத தேவையான உணவுப் பொருளாக இருக்கின்றது  குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தாய்பால் உண்டு  ஆனால் தாய்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் "பாக்கெட் பால்", "பவுடர்பால்" மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால்.

அயல் தேசங்களில் 100-க்கு 90-சதவிகிதம் தாய்மார்கள் தாய்பால் புகட்டுவதற்கு பதிலாக மாட்டுப்பால் அல்லது பவுடர்பால் வகைகளை குழந்தைகளுக்கு புகட்டி  வருகின்றனர். நம் பாரதத்தில்கூட தற்போது வெளி மாநிலங்களில் தாய்ப்பால் புகட்டுவது முற்றிலும் குறைந்து காணப்படுகின்றது  நம் தமிழ்நாட்டில்கூட இதுமாதிரி  தாய்மார்கள் உருவெடுக்கின்றனர் என்பதை கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

முன்பெல்லாம் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் தாய்பால் புகட்டி வந்தார்கள்  தற்காலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் முறையாக சுரப்பதில் சிக்கல் இருக்கின்றது  பல தாய்மார்களுக்கு தாய்;பால் முறையாக சுரந்தாலும் தன் அழகு இழந்துவிடுமே என்றதொரு பயத்தினால் குழந்தைகளுக்கு பசும்பால்களையும் பவுடர் பால்களையும்  புகட்டி வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும்  இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும்  அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும்  இதையெல்லாம் யார் சிந்திப்பது ?  தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.

அதே போல் பெரியவர்களுக்கு இருக்கவே இருக்கு பசும்பால் ஆம் பசும்பாலிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றது. பசும்பாலிலிருந்து தயிர்  மோர்  வெண்ணெய்  நெய் போன்ற உணவு வகைகளும் பெறப்படுகின்றது. சுத்தமான மாட்டுப்பாலை அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு  தேவையில்லாத சில தீய பக்க விளைவுகள் வராது.

கடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுக்கொரு கரவை மாடு வைத்து வளர்த்து அதை பராமரித்து தனக்கு தேவையான பாலை பெற்று வந்தார்கள் நாளடைவில் அதுவே தேவைக்கு அதிகமாக கிடைக்கவே வெளியில் விற்கவும் செய்தார்கள்  நாளடைவில் பல விஞ்ஞான நவீன வளர்சியினால் வீட்டுக்கொரு மாடு என்ற நிலை போய் மிக்ஸி  கிரைன்டர்  பிரிஜ் பின்பு டிவி போன்ற நவீன சாதனங்களால் மக்களின் வாழ்க்கை தரமும் தடம் மாறி கிடக்கின்றது.

இன்றைய மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கின்றது ? 
எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதை பணம் கொடுத்து பெறவேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்  அப்படி பெறப்படுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்குதா என்று பார்த்தால் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து புருவத்தை மேலும் கீழும் அசைப்பதோடு சரி. 

உதாரணத்திற்கு நாம் அன்றாடம் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் பசும்பாலில் ஏகப்பட்ட கலப்படம் நிறைந்துள்ளது என்று பல ஆய்வறிக்கைகள் எடுத்துரைக்கின்றன. இப்படி கலப்படமுள்ள பாலை அருந்துவதினால் நமக்கே தெரியாத எத்தனையோ நோய்கள் வர ஏதுவாகின்றது.

சைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது.  இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்தால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்திலும்  மூன்று சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும்  வீடு வீடாக சென்றும் ஆங்காங்கே ஒரு நிறுத்தத்தை உண்டு செய்தும் பால் விநியோகம் செய்து வருகின்றனர் இரண்டு கரவை மாடுகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விநியோம் செய்கின்றார். பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்கவேண்டும். 

அன்பின் தாய்மார்களே  உங்கள் அன்பு குழந்தைகள் நோயின்றி சீராக வாழவேண்டுமா ? காற்றுகூட எட்டிப் பார்க்க முடியாத தாய்ப்பாலை புகட்டுங்கள்  வெளியில் விற்க்கப்படும் பால்களை புகட்டினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் கலந்த எதிர்காலம் சீர்குழைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அன்பின் பொதுமக்களே  வெளியில் பால் வாங்கும்போது கவனமாக இருங்கள்  இது சுத்தமான பால்தானா என்று கேட்டு வாங்குங்கள். ஆக மொத்தத்தில் உங்களுடைய விழிப்புணர்வு ஊரை திருத்திவிடும்.

சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கும் நவீனமே உன்னால் அதே சோதனைக் குழாயகள் மூலம் தாய்பாலை உருவாக்க முடியுமா ?

தாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா ? அதுபோல்தான் உங்கள் குழந்தையும்.

விற்பனைக்கு உட்படுத்தபடும் பாலுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதா ?

விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாலுக்கு வழியில் பாதுகாப்பு இருக்குதா ?

இப்படி ஒவ்வொரு கோணத்திலும் மக்கள் விழிப்புணர்வோடு சிந்துத்து செயல்பட்டால் சுத்தமான பால் கிடைக்கும் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம் கிடையாது.
வாழ்க வளமுடன்

அன்புடன்,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

24 comments:

 1. பாலைப்பற்றிய அருமையான விழிப்புணர்வு ஆக்கம் தந்துள்ளார் நமது மனித நேயக்காவலர் ஜமால் காக்கா.

  நன்றி....பாராட்டுக்கள்.

  பாலில் இவ்வளவு சக்திகள் இருப்பதும் தாய்ப்பாலின் மகிமையும் பலன்களும் விளக்கமளித்த உதாரணமும் அருமை.

  தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு ஆக்கம்.

  ReplyDelete
 2. மக்கள் விழிப்புடன் இருக்க உணர்த்திய பகிர்வு சிறப்பு நன்றிங்க.

  ReplyDelete
 3. // சைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம். //

  நீங்கள் கூறுவது நிதர்சனமான உண்மை !

  எக்காலத்திற்கும் ஏற்றதொரு விழிப்புணர்வு பதிவு

  தொடரட்டும் உங்களின் சமூக சேவை...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கு நன்நி.

   Delete
  2. ரொம்பவே பயனுள்ள பதிவு. பால் கலப்படம் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது. ரொம்ப அருமையான ஆக்கபூர்வமான கட்டுரை இதை எல்லோரும் படித்து அதன்படி கவனமாக நடந்து கொண்டால் நமது உடல் ஆரோக்கியத்திர்க்கு நல்லது ஜமால் காக்கா அருமையான் தகவல் உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி இதை தான் நான் ரொம்ப நாட்களாக எல்லோரிடமும் சொல்லிவருகிறேன். நமக்கு பக்கத்து ஊரான மதுக்கூரில் கூட்டுரவு பால் விற்பனை கூடம் அரசே நடத்திவருகிறது சைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்னை செய்ய வருபவர்களின் பால் கேன் மேல் அரசின் முத்திரை குத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது அரசின் சீல் இல்லாமல் பால் விற்க்க முடியாது, அது சம்மந்தப்பட்ட அதிகாரி தரவாக செக் செய்யப்பட்ட பின்பு தான் அந்த கேன் மேல் அரசு சீல் வைக்கப்படுகிறது இப்படி சீல் வைக்கப்படுவதனால் இடையில் எங்கேயும் தண்ணீரை கலந்தோ அல்லது தம்பி நிஜாம் சொன்னது போல் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை குளுகோஸ், பால் பவுடர், போன்றவைகள் கலப்பதற்க்கு வாய்ப்பே கிடையாது. இது போன்று நமதூரிலும் ஒன்று அவசியம் தேவை, அரசு முத்திரையோடு பால் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது ஆவல் இதுகான முயற்ச்சிகள் எடுத்தால் நன்றாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.

   Delete
  3. உங்களின் கருத்துக்கு நன்நி.

   Delete
 4. பால் பற்றிய இப்பதிவு பல்வேறு தகவல்களை தந்துள்ளது. சிலசமயம் பால் குடித்தவுடன் வயிற்றை பிசைவது போல் ஒரு வலி தோன்றி, உடனே வயிற்றுப் போக்கு ஏற்படும். பதிவுக்கு நன்றி.

  பொட்டலப் பால் பற்றிய தாங்கள் கருத்து?

  ReplyDelete
 5. ரொம்பவே பயனுள்ள பதிவு. பால் கலப்படம் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது.

  ReplyDelete

 6. தாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா ? அதுபோல்தான் உங்கள் குழந்தையும்
  * நெத்தியடி

  ReplyDelete
 7. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்... பகிர்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 8. இந்தியாவில் பிரதான உணவு அரிசி, அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு, ஆனால் உலகம் முழுவதும் பொதுவான உணவு பால் மட்டுமே இறுதியில் வாயில் ஊற்றுவதும் இதே.

  பாலின் பெருமை அருமை. நன்றி

  ReplyDelete
 9. விழிப்புணர்வு ஆக்கம்.தாய் பாலின் அருமை பாக்கெட் பாலின் அருமை விளக்கம் தொடரட்டும் உங்கள் சமுக பணி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பால்பற்றிய தகவல் ..
  மிக அருமை ...நன்றி ..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. நல்ல கட்டுரை
  ------------------
  உன்னுடலில் உருவாகும் பால் எனக்காக உருவாக
  உருவாகும் பாலை உயிர் வாழ உவகையுடன் தந்தாய்
  உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்
  உருவாகும் பாலை தருவதை நிறுத்தி பால்கட்டி நடுங்குகின்றாய்

  உன் பால் நான் குடிக்க உயர்வாய் இருப்பேன்
  உன்பால் உயிராய் இருப்பேன்
  உன் பால் உன்னிடமே இருக்க உன் மேனி கெடும்
  உன்பாலை ஊர வைத்தவன் உன்னை வருத்துவான்

  ReplyDelete
 12. பால் பற்றிய உங்கள் “தலைப்பால்” இனிமை!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers