உள்ளம் கேட்குமே MORE ! என்ற தலைப்பில் எழுத ஆரம்பிக்கும்போது எனது மனதில் ஓடும் ஓட்டங்களில் அடிப்படையில் எழுதவே ஆசைபட்டேன் அதுவே ஆரோக்கியம் ! காரணம் பல்வேறு தரப்பு புத்தகங்களின் தொகுப்பாக ஒரு படைப்பு இருத்தல் கூடாது. அது எந்த தகவலையும் தந்து விடாது ஒரு கட்டுரையாளர் அல்லது ஆய்வாளர் தனது கருத்தினை பதிகின்ற போது ஒரு துளி தகவலாவது கல்வியாளர் மத்தியில் போய்சேரும் என்பதே எனது கருத்து இதே கருத்தை அன்புடன் புகாரி அவர்கள் ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார் அதுவே சரி பல அறிஞர்கள் பெயரை கூறி அவர் கூறும் கருத்தை பதிவது அவர்களை நினைவு கூறும் விதமாக அமையுமே தவிர நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதே இல்லாமல் போகும் இருப்பினும் நாம் ஆக்கம் எழுதுவதற்கு ஏற்ற கருத்துகள் உள்வாங்கி கொள்வதில் தவறில்லை.
உளவியல் என்பது மனிதர்கள் மத்தியில் அன்றாட செயல்பாடே அதில் குறிப்பிட்ட சில விசயங்களைப் பற்றி ஆராய்வோம் .உள்ளம் என்றால் என்ன என்று கேட்டிருந்தேன் அதற்கு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அரூபம் என்றார்... KMA. ஜமால் முஹம்மது அவர்கள் மனசு புத்தி என்றார்... ஆனால் அவைகள் உள்ளத்தை அழைக்கும் வேறு பெயர்கள் அது என்ன என்பதை சரியாக விளக்கினார் கவியன்பர் அபுல் கலாம் அவர்கள் எனவே உள்ளம் என்றால் நாம் பார்க்கும் கேட்கும் விசயங்களை கிரகிக்கும் மூளையின் ஒரு பகுதியே... அதன் செயல்பாடுகளே உள்ளம் ! அந்த உள்ளத்தில் பதியும் விசயங்கள் நல்லவையாக் அமைய இருக்கும் சூழல் முக்கியம் சிறு வயதில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லி கொடுக்கும் விசயமே உள்ளத்தில் பதியும் ! பசுமரத்து ஆணி போல பதியும் எனவே நல்ல விசயங்களை கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
இது வரை எழுதிய விசயங்களுக்கும் உள்ளம் கேட்குமே MORE என்ற தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.
உள்ளம் எதுவெல்லாம் கேட்கும் MORE...?
பொதுவாக சிறு குழந்தைகள் பாசம் என்ற ஒன்றை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும் ஆனால் நம்மவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத வயதில்குழந்தைகளிடம் பாசத்தை அள்ளி கொடுப்பார்கள். ஆனால் பாசங்களை எதிர்பார்க்கும் ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாசம் என்ற ஊட்டம் கிடைக்காமல் தடுமாறும் நிலை எப்படி ? பள்ளிக்கூடம் சென்றால் அங்கு ஆசானின் அறிவுரை ! வீட்டிற்கு வந்தால் பெற்றோர் பள்ளிக்கூடப் பாடங்கள் பற்றிய கேள்வி இவைகளால் பிள்ளைகள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படும். அந்த சிறு உள்ளம் யாராவது அன்பு காட்டினால் அவர்களிடம் இன்னும் இன்னும் என கேட்கும்...
கூட்டு குடும்பங்கள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் கண்டிப்புடன் நடந்து கொண்டால் பாட்டி போன்றோரின் அரவணைப்பு இருக்கும் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனி குடும்பம் என்று பிரியும் சூழல் இயந்திர வாழ்க்கை உள்ளசோர்வு என்பது பெரியவர் முதல் சிறுவர் வரை உள்ளது அந்த உள்ளம் கேட்கும் அன்பு பாசம் MORE MORE... என்று பெரியவர்கள் சிறார்களுக்கு அன்பு காட்டி மகிழலாம் சிறுவர்களும் மகிழ்வர் பிள்ளைகளிடம் முற்றிலும் கல்வி பற்றியே கேட்டு போரடித்து விடாதீர்கள். உங்கள் விடுமுறை நாட்கள் மகனுக்கும் விடுமுறையே மகிழுங்கள்.
நல்லதொரு உளவியல் தொடர்
ReplyDeleteபெற்றோர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக அமையும்
குட்டீஸ்களுடன் பொழுதை செலவழிப்பதே குதுக்கலம்ந்தான் போங்க :)
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
Deleteஉண்மை - பெற்றோர்களின் சுயநலம்....
ReplyDeleteபாதிக்கப்படுவது குழந்தைகள்...
குழந்தைகள் விருப்பம் எதிர்ப்பார்ப்பு எல்லாமே அன்பு, பாசம்... - அருமையான ஆரம்பம்...
வாழ்த்துக்கள் தோழரே...
நன்றிகள் பல ..
Deleteதங்களின் வருகை விழிப்புணர்வு தளத்தை மிளிர செய்கிறது
அன்பே அனைத்திற்கும் ஆணிவேர்
ReplyDeleteஅன்புக்கு நிகர் அன்பேதான்
தட்டிக் கேட்கும் அதிகாரம்;
எட்ட முடியாத தூரம்
தட்டிக் கொடுக்கும்
அன்புப் பெருக்கால்
எட்ட முடியும் நெருக்கம்
பிள்ளைகளின் கிறுக்கல்களை
பிழைகளைப் பொறுக்கையிலே
கிடைக்கும் அங்கீகாரம்
படைக்கப்போகும் சரித்திரம்
அன்பாய்ச் சொன்னீர் அதிரைத் தமிழூற்று அன்பர் சித்திக்!
கவியன்பரின் கருத்துக்கள்
Deleteகவி மழையாய் கொட்டுவதில் மகிழ்ச்சியே
அருமையாகச் சொன்னீர்கள்
ReplyDeleteநன்றி சகோ தமிழன்
Deleteசிறு பிள்ளை பருவம் என்பது வளரும் கொடிபோல் கோடி பற்றி பிடித்து வளர நாம் பாசத்தை காட்டி,கண்டிப்பை கனிவுடன் ஊட்டி பிள்ளைகளை அரவணைத்தால் அவர்களின் உள்ளம் கேட்க்கும் மோருக்கு தீனியிடலாம்
ReplyDeleteநல்ல கருத்து நண்பா
Deleteபெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகக்கவனம் செலுத்துவதால் வெளிப்படையான பாராட்டு பாசம் என்பதை குறைத்துக்கொன்டாலும் அது அடிமனதில் ஆழமாய் பதிந்திருக்கும். அதை அவர்கள் வெளிக்கொண்டு வந்து விட்டால் பிள்ளைமார்களுக்கு அலட்சியப்போக்கு மனதில் ஏற்ப்பட்டு விடும் என்ற பயத்தில் கண்டிப்புடன் வளர்க்கப்படுவார்கள்.
ReplyDeleteஆனால் பகுத்தறிவு பரிபூரணமாக வரும் வரை பாசத்திற்கு முதலிடம் கொடுப்பதே நன்று.
பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அதுவே.
தொடரட்டும். உங்கள் உளவியல் கட்டுரை.
நன்றாய் கூறுனீர்கள் ..
Deleteநான் கூறப்போகும் கருத்தை முன்னுரைத்தீர்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல நல்ல கருத்துக்களை கொள்ளையடிக்கும் அழகான ஒரு ஆக்கம், என்னதான் ஆனாலும் ஒவ்வொரு கிழமையும் வித விதமான விருந்து, இப்போ நன்றாக தெரிந்து போச்சு ஒவ்வொரு நாளும் மாலை சரியாக ஆறுமணிக்கெல்லாம் சுடச் சுட விருந்து வந்துவிடும் என்று.
நான் தான் ரொம்ப லேட்டாக வந்து விட்டேன், லேட்டானாலும் சுவை மாறவே இல்லையே.
விருந்துக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மிக்க நன்றி ..
Deleteசகோ ஜமால் காக்கா அவர்களே
நல்ல தொடருக்கு வாழ்த்துக்கள் சித்திக்
ReplyDeleteநன்றி .
Deleteநீங்கள் அன்பாய் தந்த வாழ்த்து ஏன் ஆக்கத்திற்கு ஊட்டம்
நல்லதோர் ஆக்கம் மீண்டும் மீண்டும் கேட்கும் உங்களின் விழிப்புணர்வு ஆக்கம். வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பி ஹபீப்
ReplyDeleteபின்னூட்டம் மூலம் தரும் ஊக்கம் என்ஆக்கத்திற்கு வலு
சேர்க்கிறது