நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா
இன்றைய செய்திகளை
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு
துக்கங்கள் யாவும்
மறந்துப் போக வைக்கும்
மாமருந்து
வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்
காத்திருத்தல்
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்
மேலும் கீழுமாய்ச்
சுழற்றிப் போடும்
சக்கரம்
பிறப்பு, இறப்பு
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்
பெட்டகம்
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச்சமம்.
ReplyDeleteநேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிட்டு நாமும் நம்மைச்சார்ந்தவர்களும் பயன்பெற உறுதுணையாக இருப்போமே
காலம் பெருமை - அருமை !
கவிக்குறளுக்கு வாழ்த்துகள்...
காலம் தாழ்த்தாமல் பதிவுக்குள் கொண்டு வந்த காலம் தவறாக் கடின உழைப்பாளி - விழிப்புணர்வு வித்தகர் அவர்கட்கு எக்காலமும் யான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
Deleteநன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகாலம். இது தலைப்பு.
காலத்தின் கோலம், காலம் சரியில்லை,
காலம்தான் பதில்சொல்லும்,
கெட்ட காலம், நல்ல காலம்,
காலம் வரட்டும் இப்படி காலத்தை வைத்து நம் மக்களிடையே அனேக நடைமுறை பேச்சுக்கள் காணப்படும். அதேபோல் காலத்தை நேரத்தோடு ஒப்பிட்டு சொல்வது இன்றளவும் உண்டு.
காலத்தை மையமாக வைத்து காலத்திற்கு ஏற்ப ஒரு கவிதையை காலம் தாழ்த்தாது உரிய காலத்தில் தந்து அதை சரியான நேரத்தில் பதிந்து இருப்பது, படைத்தவரும் வெளியிட்டவரும் ஒருசேர காலத்தில் பேசிக் கொண்டனரோ?
கவிதையோ மிகச் சுருக்கம் ஆனால் விளக்கமோ மிகப் பெருக்கம்.
மச்சான், இந்த கோர்வை மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
”காலத்தின் மீது சத்யமாக!” என்று திருமறை அல்-குர்- ஆனில் அல்லாஹ்வே காலத்தின் மீது உள்ள முக்கியத்தை வெளிப்படுத்தி விட்டான். எனவே தான் காலத்தைத் திட்டாதீர்கள் என்று மார்க்கம் சொல்லும் கட்டளையாகும். காலமறிந்துப் பின்னோட்டம் இட்ட மச்சானுக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்
Deleteகாலத்தை
ReplyDeleteகவி வரியாய்
அலங்கரித்து
கடந்த
காலத்தில்
காகிதத்தில்
கப்பல் விட்ட
காலமதை
கண்முன்னே
கொண்டுவந்து
கனாக்காணும்
காலமதை
கணப்பொழுதில்
நினைவு கூர்ந்த
கவியன்பருக்கு
கரம் கொடுத்து
கனிவான
வாழ்த்துக்கள்.
இளமைக் காலங்களை
Deleteமுதுமைக் “கலாம்” கவியால்
நினைவு நாடாக்கள்
நிற்காமல் சுழன்றுவிட்டன
என்ற செய்தியைப் பின்னூட்டமிட்டுக் கரம் கொடுத்துக் கனிவான வாழ்த்தும் அளித்த கவிஞர் மெய்சாவுக்கு நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.
Time is extremely important in our life and Luck always knocks the door of that person who realizes the value of time. Try to be punctual in every thing.
ReplyDeleteIt is fantastic poem and Thank you so much for your Social Act.
Wow...! fantastic! amazing!!
DeleteReally I am so proud of you, my dear sister Parveen Ayisha and you have proved that you are an educated lady in our town. I think no need to teach you grammar since I have not found any mistakes in your writings.
As you are seem to be very punctual in time-keeping and to be very perfect in utilizing opportunities whenever knock your doors, you will surely In Sha 'Allah obtain success in all walks of your life span.
Best wishes from your KAKA
காலம் ..
ReplyDeleteகடந்த காலம் துன்ப கீறலால்
ஆன ரணங்கள் ஆறாத வடு
கடந்து விட்டதே என்ற ஆறுதல்
கடந்த காலம் சிலருக்கு வசந்த காலம்
ஏன் சென்றாய் என்ற ஏக்க கேள்வி
"ஏன் சென்றாய்?” என்பது தான் உங்களின் அடுத்த ஆக்கத்தின் தலைப்பாக இருக்குமோ? அப்படியானால் அதைக் கருவாக்கிய என் கவிதை “காலத்துக்கு” நன்றி. உங்களின் வாழ்த்துக்கும் நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரகசியப் பெட்டகம் அறிந்தால் சுவாரஸ்யம் போய் விடும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மரணம் என்னும் தூது வந்து மகா இரகசியங்களை எல்லாம் அறிவித்து விட்டுச் செல்லும்!
Deleteசுவாரஸ்யமான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது.
ReplyDeleteஇனிய காலைப்பொழுதில் கவி அய்யாவின் கவிதையை வாசித்தது இனிமை
அஃது ஓர் அழகிய பொற்காலம் அய்யா தமிழன் அவர்களே! ஆம். அப்பொழுதெல்லாம், ஏழு மணிக்குள் மார்க்கக் கல்வி ஓதுதல், குளித்தல் போன்றவற்றை எல்லாம் முடித்து விட்டுப் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்து விட்டு அமைதியாகப் பள்ளி நோக்கிச் சென்றோம், கால்நடையாக! ஆனால் இன்று ஏழு மணிவரைக்கும் தூங்கும் மாணாக்கர்களின் காலம்! காலத்தையும் அறியவில்லை; கடமையையும் அறியவில்லை; கல்வியையும் அறியவில்லை!
Deleteஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை என்று விழிகள் பிதுங்க அழுகின்றோம். அடிப்படையில் ஓட்டை; ஆனால் கட்டுவதோ பெரும் மனக்கோட்டை!!
பழமொழியை அழகான காலத்தில் அழகாய்ச் சுட்டிக் காட்டிய அய்யா தமிழன் அவர்கட்கு நன்றி.
காலங்கள் கடந்தாலும் நம் நினைவில் இருக்கும் காலம் அதுதான் நமக்கு பொற்க்காலம்.அருமை பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅஃது ஓர் அழகிய பொற்காலம் ஹபீப் என்னும் நேசரே! ஆம். அப்பொழுதெல்லாம், ஏழு மணிக்குள் மார்க்கக் கல்வி ஓதுதல், குளித்தல் போன்றவற்றை எல்லாம் முடித்து விட்டுப் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்து விட்டு அமைதியாகப் பள்ளி நோக்கிச் சென்றோம், கால்நடையாக! ஆனால் இன்று ஏழு மணிவரைக்கும் தூங்கும் மாணாக்கர்களின் காலம்! காலத்தையும் அறியவில்லை; கடமையையும் அறியவில்லை; கல்வியையும் அறியவில்லை!
Deleteஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை என்று விழிகள் பிதுங்க அழுகின்றோம். அடிப்படையில் ஓட்டை; ஆனால் கட்டுவதோ பெரும் மனக்கோட்டை!!
பொற்காலமாய்க் கடந்து விட்ட அந்நற்காலத்தை நினைவு நாடாக்களில் சுழல விட்ட நேசர் ஹபீப் அவர்கட்கு நன்றி.
இன்றைய செய்திகளை
ReplyDeleteநாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு
உங்களது இன்றைய கவிதை
நாளைய வரலாறாகட்டும்
பாதுகாக்கும் பெட்டகமாய்
ச.வி.ப.விளங்கட்டும்
அதெப்படி? என் மனத்தினில் நேற்று தோன்றிய எண்ணங்கள் தொழிலதிபரின் உள்ளத்தினுள்ளே!!
Deleteஆம். நான் எண்ணினேன்; நீங்கள் எழுதி விட்டீர்கள்; எம்மிருவரின் எண்ணமும் எழுத்தும் ஒன்றாகவே அமைகின்றன. அல்ஹம்துலில்லாஹ்! உண்மையில், என் மறைவுக்குப் பிறகு என் கவிதைகளைப் பெட்டகமாய்- பொக்கிஷமாய்ப் பாதுகாக்கச் ச.வி. ப என்னும் பாதுக்காப்புப் பெட்டகமே என் மனக் கண் முன்னே தோன்றியது. அந்த அளவுக்கு அன்புச் சகோதரர் விழிப்புணர்வு வித்தகரின் இப்பக்கத்தில் தொடர்ந்து என் கவிதைகளும் பதியப்படுவதும் ஓர் அரிய பாதுகாப்புப் பெட்டகமே! இன்ஷா அல்லாஹ் நூலுருவில் அவற்றை மாற்றுவதற்கும், இப்பெட்டகத்திலிருந்தே நேரடியாக அச்சுக்குச் செல்லும்; அப்பொழுது விழிப்புணர்வு வித்தகர்க்கு என் கவி வரிகள் நன்றி சொல்லும்; அந்நாளில் என்னைக் கேவலமாய் எண்ணியவர்கள்- என் கவிதைகளைப் புறக்கணித்தவர்கள் முன்னால் இறையருளால் என் பேரும் புகழும் வெல்லும்!
ஆத்மார்த்தமான வாழ்த்துரை வழங்கிய தொழிலதிபர் அவர்கட்கு என் உளம்நிறைவான வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகுக!
எல்லா புகழும் அல்லாவிர்க்கே என்று சொல்லுங்கள் கவியன்பன் அவர்களே தடை கற்களை படிக்கர்க்கலாய் மாற்றவேண்டும் நீங்கள் என்றும் சிறப்பாய் இருப்பீர்கள் எனது துஆ நிச்சயம் உங்களுக்கு உண்டு
ReplyDeleteமேலும் கீழுமாய்ச்
ReplyDeleteசுழற்றிப் போடும்
சக்கரம்
வாழ்த்துக்கள் நண்பா