kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, March 13, 2013
[ 2 ] தொழில் புரிவோம் வாருங்கள் !
சென்ற வாரத்தின் தொடர்சியாக ஒரு நிறுவனத்தில் ஒரே துறையில் 10 வருட அனுபவசாளி அந்த நிறுவனம் செய்யும் அதே தொழிலை சுயமாய் தொழில் செய்ய ஆசை படும்போழுது அவரின் தகுதி சரியா என்பதை பார்ப்போம். ஒரு நிறுவனத்தில் ஃபோர் மென், கணக்காளர், போன்றவர்கள் ஆசை படும்போழுது சில சிக்கல்கள் இருக்கின்றது ஒரு தொழில் என்பது பல துறைகளின் ஒட்டு மொத்த அறிவும் தேவைபடுகிறது ஒரு முதலாளிக்கு. உற்பத்தி, விற்பனை, செலவினங்களை கட்டுப்படுத்தல், தொழிலார்ளர்களை அரவணைத்தல் போன்ற நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கின்றது.
ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் ஏழு விதமான பிரச்சனைகளை மட்டுமே சிந்திக்கமுடியும் [ தனி நபருக்கேற்ப்ப + / - 2 மாறுபடும் ] ஒரு ஆவரேஜ் மனிதனால் நான்கு விஷயங்களை மட்டும் தான் யோசிக்க முடியும். ஒரு கட்டாய சூழ்நிலை வரும்பொழுது மன அழுத்தம் ஏற்பட்டு விரக்தி உண்டாகும் ஆகையால் சுயதொழில் செய்ய முற்படுவோர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பொழுதே தம்மை தயார் படுத்திக்கொள்ளல் வேண்டும் எப்படி ?
தாம் பணிபுரியும் பொழுது சுய தொழில் ஆசை வந்தால் குறைந்தது மூன்று வருடங்களாவது தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்து விடவேண்டும் அதாவது அந்த நிறுவனத்தில் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்துணை துறைகளிலும் குறைந்தது 6 மாதங்கள் பணிபுரிவதுபோல் சுழலை உருவாக்கிக்கொண்டு அனுபவங்களை வளர்த்து கொண்டால் நலம் பயக்கும். மற்றும் நம் சக பணியாளர்களிடம் அன்பு பாராட்டி அவர்களின் வேலைக்கு உதவிட்டு நம் அனுபவங்களை மேலும் வளர்த்துக்கொள்வதோடு நம் என்னத்தை இப்படி அஸ்திவாரமிட்டுக்கொள்ளல் வேண்டும்.
அப்பொழுதுதான் தாம் இவ்வளவு காலம் பணிபுரிந்த இடமானாலும் எவ்வளவோ விஷயங்கள் மறைந்து இருப்பதை நம்முடைய ஆர்வத்தால் நான் சொன்னது போல் நடந்துகொண்டால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். நாம் சுயமாய் தொழில் செய்யும் பொழுது பலனளிக்கும்
ஒரு பொருள் சந்தைக்கு வருவதற்கு முன் அவைகள் எத்தனை தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், நாட்கள் ஆகியவைகளை தாண்டி வருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம் வரும் வாரம் எனது துறை சம்மந்தமாக தங்களிடம் பகிர்கிறேன்...
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
புதிய தொழில் முனைவோருக்கு நல்லதொரு பயன்தரும் தொடராக வளர்ந்து வருகின்றது... இன்னும் உங்கள் துறையில் உள்ள பல்வேறு அனுபவங்களை வருகின்ற வாரங்களில் வாசிக்க ஆவலாக இருக்கின்றேன்.
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
உங்களின் தொழில் புரிவோம் வாருங்கள் என்ற இந்த தொடர் கட்டுரையை வாசிக்கும் போதே, எனது சீனப்பயணம் கட்டுரையை மேற்கொண்டு தொடர ஆவல் ஏற்படுகிறது.
ReplyDeleteஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்... அருமை...
ReplyDeleteவாழ்வில் முன்னேற தொழில் அவசியம்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதொழில் ஆரம்பிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு ஏற்றதொரு தொடர். இந்த தொடர் தொடர்ந்து தொடர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
உங்களின் தொழில் புரிவோம் வாருங்கள் என்ற இந்த தொடர் கட்டுரையை வாசிக்கும் போதே, எனது சீனப்பயணம் கட்டுரையை மேற்கொண்டு தொடர ஆவல் ஏற்படுகிறது///
ReplyDeleteஅதற்காகத்தானே எமது கட்டுரையும் மீண்டும் தொடருங்கள்
சக தொழிலாளியிடம் அன்பு பாராட்டுதல் ...
ReplyDeleteஎல்லா துறையிலும் அனுபவம் வேண்டும்
நல்ல தகவல் தொடருங்கள் தோழரே ...!
நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteசுய தொழில் புரிய பெரியதும் உதவும். அவசியம் .அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
இன்னும் எதிர் பார்க்கிறேன்.
நல்ல தொடர் சிறந்த ஆலோசனைகள், வாழ்த்துக்கள் வாசிப்பவர்களுக்கு. பாராட்டுக்கள் எழுதும் திரு சபீர் அவர்களுக்கு
ReplyDeleteவெளிநாட்டு வாழ்க்கை எந்தனை நாளைக்குத்தான்.நாமும் சுய தொழில் தொடக்குவோம்.அதற்கான வழிமுறைகளை சபீர் காக்கா அனுபவம் சொல்க்கின்றது.எந்த தொழில்ளாக இருந்தாலும் அதற்க்கு அனுபவம் தேவை.அதற்கான பதிவுதான் சபீர் காக்காவின் இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அனுபவ பணி.
ReplyDeleteநல்ல வழிகாட்டல்கள்.
ReplyDeleteஇன்னும் அடுத்த வியாழனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.