.

Pages

Saturday, March 30, 2013

[ 3 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

பாசம் எவ்வளவு அவசியமோ... அது அளவிற்கு அதிகமானால் அதுவே குழந்தைகளின் எதிர் காலத்தை படு பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும். எப்படி  என்பதை பார்போம்…

சிறு குழந்தை ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆனா  குழந்தை மீது நாம் காட்டும் அளப்பெரிய அன்பு அது எதை கேட்டாலும் கொடுக்கும் மனநிலை நம்மிடம் இருக்கும். நாம் அக்குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சும்போது நமது பாக்கெட்டில் உள்ள பேனாவையோ அல்லது முக்கியமான பொருளையோ அந்த பிஞ்சு கைகளால் எடுக்கும்... பார்த்து ரசிப்போம்... அக்குழந்தை உடனே அதனை வாயில் வைக்க முற்படும், அந்த சமயத்தில் நாம் வாயில்வைப்பதற்கு முன் தடுத்து விடுவோம். அழுது அடம் பிடித்தாலும் நாம் அனுமதிப்பதில்லை அதுபோன்றுதான் விவரம் அறிந்த வயதி ஐந்து முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளிடம் அன்பு பாசம் என்ற பெயரில் எல்லாவற்றையும் அனுமதித்து விட கூடாது அது பெரிய எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

உதாரணமாக சில உறவினர் வீட்டிற்கு விருந்தினராக வரும்போது பிள்ளைகளை கொஞ்சும் போது கொச்சையான வார்த்தைகளால் அழைப்பர். அந்த பயலே... இந்த பயலே... அதே போல் தாத்தா பாட்டி இடம் பிள்ளைகள் மரியாதை குறைவான வார்த்தைகள் கொண்டு அழைப்பார்கள். பாசங்களின் காரணமாக அதனை பெரிய பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. ஆனால் அது எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் உள்ளத்தில் பதிந்து பெரியவர்களை மதிக்காத தன்மை வெளிவரும். எனவே பிள்ளைகளுக்கு பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்று கொடுக்க சரியான தருணம் பிள்ளைகள் பெரியவர்களிடம் எப்படி அணுகுகிறது என்பதை கண்காணித்து  திருத்தம் செய்ய வேண்டும். 

சிறு பிள்ளை விவரம் தெரியாமல் சொல்கிறது கொஞ்சும் வயதில் ஏன் அதட்டுகிறாய் என்று சில பெரியவர்கள் கூறுவார்கள். ஜாக்கிரதை திருத்துவது சிறு அரும்பில் மட்டுமே முடியும். எனவே பிறருக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை கற்று கொடுத்தல் வேண்டும் .அதே போன்று பிறருக்கு இடையூறு செய்யும் போது உடனே அதற்கு தகுந்த விளக்கம் கூறி புரிய வைக்க வேண்டும். 

குழந்தை பருவம் தாய் மடியே கல்வி கூடம் நல்ல பழக்கங்களை ஊட்டி வளர்க்க வேண்டும். ஐந்து வயதிற்கு மேல் வெளியே சண்டை சச்சரவுகள் செய்து வீட்டிற்கு பஞ்சாயத்து வருகிறது என்று வைத்து கொள்வோம்.  ஒருபோதும் நம் குழந்தைக்கு ஆதரவாக எதிர் தரப்பிடம் சண்டைக்கு சென்று விடாதீர்கள். அது சிறு குழந்தை உள்ளத்தில் நமக்கு நல்ல ஆதர இருக்கிறது. பிறரிடம் சண்டையிடவோ இடையூறு தரவோ தயங்காத நிலை உள்ளத்தில் உருவாகலாம் பாசங்கள்  உள்ளத்தில் வைத்து கண்டிப்பை வெளியே காட்ட வேண்டும் என்ற கருத்தை அற்புதமாக அதிரை மெய்சா பின்னூட்டம் மூலம் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் சரியே !

அதிகமான செல்லம், எந்த தவறு செய்தாலும் கண்டிப்பு செய்யாமல்,வளர்ந்த குழந்தை பள்ளி கூடம் செல்ல மறுத்த போதுதான் தனது தவறு அந்த தாய்க்கு தெரிய வந்தது.

உளவியல் மருத்துவரிடம் சென்றாள் தாயவள் ..குழந்தை மனதில் தாய் காட்டிய அபரிதமான அன்பு... பிறரிடம் அணுக கூட மறுக்கிறது என விளக்கம் கிடைக்கபெற்றாள். குழந்தைக்கு  தகுந்த பயிற்சி அளிக்க பட்டு பள்ளி கூடம் செல்ல ஆரம்பித்தது. எனவே பள்ளிக்கூடம் செல்ல போக வேண்டும் என்பதை பிள்ளைகளிடம் கூறி வருவதும் சிறு சிறு பாடங்கள் சொல்லி கொடுப்பதும் பிள்ளைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து செல்லம் உள்ளம் கேட்கும் மோர்... மோர்... என்று. ஆனால் அளவாய் கொடுத்து வளமாய் வாழுங்கள். செல்லம் அதிகமாய் கொடுத்ததால் பிள்ளையின் வாழ்வு சூன்யமானதை அடுத்த ஆக்கத்தில் தருகிறேன்...
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

16 comments:

  1. செல்லம் எந்தளவிற்கு உள்ளதோ, அந்தளவிற்கு கண்டிப்பும், கண்காணிப்பும் இருக்க வேண்டும் என்பதை நன்றாக சொன்னீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...

      சகோ ..திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..

      குழந்தைகளின் உள்ளம் மிகவும் மெல்லிய் மலர்களின்

      இதழ் போன்றது கடுமையாக கையாளுதலும் கூடாது

      Delete
  2. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். கண்டிப்பு அவசியம் ! அதிக செல்லம் ஆபத்தில் முடியும்

    மிக்க நன்றி பத்திரிக்கைத்துறை நிபுணருக்கு பதிவு ஒவ்வொன்றும் நல்லதொரு தகவலுடன் சுமந்து வருகின்றது.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..

      தம்பி நிஜாமின் பின்னூட்டமே ..ஆக்கத்தைபோல பல

      கருத்துக்களை தாங்கி வருகிறது ..

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    விளக்கம் அருமை.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. நன்றி ..ஜமால் காக்கா ..

    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  5. பிள்ளைவளர்ப்பில் அதிகம் செல்லம் காட்டுவதினால் ஏற்ப்படும் பின்விளைவுகளை சரியாக எடுத்துச்சொல்லி இருந்தீர்கள். தவழ்ந்து, எழுந்து,நடைபயின்று,பேசும் திறன் வந்த பிறகு நாம் பேசும் பேச்சை பிள்ளைகளிடம் கவனமுடன் பேசுவதே நல்லது.

    (பிள்ளைவளர்ப்பை பற்றி நான் ஒரு ஆக்கம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.)

    ReplyDelete
  6. குழந்தை வளர்ப்பைக் குழந்தையாகவே மாறி உளவியலாராய் உயர்ந்து சொன்ன விதம் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்து விட்டது;

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  8. நண்பரே அருமையாய் சொல்லி இருக்கின்றீர் சிறு வயதில் சாதாரண விஷயங்களிலும் கவனம் செலுத்தவேண்டும் உண்மைதான்

    ReplyDelete
  9. தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  10. அருமையான ஆக்கம் உங்கள் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க்க சொல்கின்ற்றது.தாயின் பாசம் எப்படி காட்டவேண்டும் என்பதுக்கு உங்களின் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.

    ReplyDelete
  11. இக்காலச் சூழலில் அனைத்து பெற்றோர்களும் அறிய வேண்டிய உண்மைகளை தெளிவாக சொன்னீர்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers