.

Pages

Wednesday, March 27, 2013

[ 4 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் ! ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள் படிப்பு முடிந்ததும் ஒருவர் அயல் நாடு சென்று பொருள் ஈட்டுவதற்காக போய்விட்டார் மற்றொருவரோ உள்நாட்டிலேயே ஒரு வேலையை தேடிக்கொண்டு தன் வாழ்க்கையை துவங்கினார் பல வருடங்கள் உருண்டோடின ஒருநாள் இரண்டு நண்பர்களும் சந்திக்கும் சூழல் உருவானது இருவரும் ஆரத்தழுவிக்கொண்டு பரஸ்பரம் விசாரித்துக் கொள்கின்றார்கள் வெளி நாட்டிலிருந்து வந்த நண்பர் உள் நாட்டு வாசியிடம் கேட்கின்றார் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் மாப்புலே ?  உள்நாட்டு வாசியின் பதில் ஓர் தொழில் நிறுவனம் சொந்தமாய் நடத்தி கொண்டிருப்பதாய் கூறுகிறார்.

நண்பருக்கு இன்ப அதிர்ச்சி ! இருவரும் பேசிக்கொள்வதை உரையாடலாய் பார்ப்போம் 

வெளி நாட்டு வாசி :  தொழில் நல்லா போகுதா 

உள்ளூர் வாசி :  எல்லா புகழும் அல்லாஹ்விற்கே 

வெளி நாட்டு வாசி :   எனக்கும் ரொம்ப நாளாக சொந்தமாய் தொழில் செய்யணும் என்ற ஆசை 

உள்ளூர் வாசி :  சந்தோஷம் தாராளமாக செய் எனது ஒத்துழைப்பு நிச்சயமாக உண்டு 

வெளி நாட்டு வாசி :  என்ன தொழில் செய்யலாம் 

உள்ளூர் வாசி :  [அமைதியாக இருக்கின்றார்] 

வெளி நாட்டு வாசி :  என்ன மாப்லே அமைதியாயிட்டே 

உள்ளூர் வாசி :  ஒன்னும்மில்லே நா ஒன்னு கேட்பேன் பதில் சொல்றியா 

வெளி நாட்டு வாசி :   ஓ தாராளமாக சொல்றேன் 

உள்ளூர் வாசி :  என் மகனுக்கு கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன் எப்படி பட்ட பொண்ணா பாக்கணும் 

வெளி நாட்டு வாசி :  நல்ல பொண்ணா பாரு

உள்ளூர் வாசி :  நல்ல பொண்ணுன்னா எப்படி !?

வெளி நாட்டு வாசி :  அழகான, அடக்கமான, அறிவான, பொண்ணாகவும் நல்ல குடும்பமாகவும் ஓரளவு வசதியும் சேர்ந்த இடமாக பார்க்கவேண்டியதுதானே

உள்ளூர் வாசி :  இது அனைத்தும் ஒரு சேர கிடைக்குமா !? ஒன்று இருந்தா ஒன்று இருக்காது நீ சொல்வது போல் பார்த்தால் கோடியில் ஒன்னு கிடைக்கிறது சிரமம் உனக்குத் தெரிந்தால் சொல்லேன்

வெளி நாட்டு வாசி :  சிரிக்கிறார் [ பதில் இல்லை ]

உள்ளூர் வாசி :  உனது சிரிப்புதான் நீ ஏற்கனவே தொழில் சம்மந்தமாய் கேள்வி கேட்டாயே அதற்கு உண்டான பதிலும் ஆகும்

ஒரு தொழில் செய்வதற்கு ஆசை மட்டும் போதாது அனுபவம் மிக மிக அவசியம் என்ன தொழில் செய்வதென்றே தெரியாமல் ஆசையாக இருக்கின்றது என்ன செய்யலாம் என்று கேட்டால் அபத்தமாக தெரிகிறது ஒரு பெண்ணிடம் அழகு, அறிவு அடக்கம், பணிவு என்று நாம் ஆசைப்பட்ட அனைத்தும் எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தமோ அது போல் தான் தொழிலிலும். எந்த பிரச்சனையும் இருக்கக்குடாது, நல்ல வருமானம் இருக்கணும், அதிகநேரம் உழைப்பதுபோல் இருக்ககூடாது.என்றெல்லாம் யோசித்தால் அவர் தொழில் செய்ய லாயக் இல்லாதவராகிறார்.

தொழில் செய்பவர் போலீஸ்காரர் உத்தியோகம் போல் எந்த நேரமும் அலார்ட்டாக இருக்க வேண்டும். நீ ஆசையை வளர்த்து கொள்வது போல் ஏதாவது ஒரு தொழிலில் அறிவை வளர்த்துக்கொள் நீ வெளிநாட்டில் இருக்கும் பொழுதே ஊரில் தொழில்  செய்யும் ஆர்வம் கொண்ட உனது உடன் பிறப்பு, மைத்துனர், மிகவும் நம்பிக்கையான நண்பன் போன்றவர்களை தேர்ந்தெடுத்துக்கொள் ஒரு விடுப்பில் ஊர் வரும்பொழுது முன் சொன்ன நபர்களில் யாராவது ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் எந்த தொழிலில் அனுபவமாக இருக்கிறார்களோ அதில் உனது முதல் ஈட்டை ஆரம்பத்தில்  [ குறைவாக ]  போட்டு முதலீட்டுக்கு ஓர் நபரை  உரிமையாளராக நியமித்து கூட்டாளி பத்திரம் தயார் செய்து தொழில் அனுபவசாலியான உனது தேர்ந்தெடுப்பை 40 சதவிகிதம் இலாப நஷ்ட கூட்டாக்கி ஆரம்பிக்கலாம் முதலின் உரிமையாளர் [ உனது தந்தை, மாமனார், மனைவி ] போன்றோர் இருக்கலாம் மாமனாருக்கு ஆண்மக்கள் இல்லாது இருந்தால் மாமனாரை  தேர்ந்தெடுக்கலாம் நண்பன் பாட்னராக அமைந்தால் மனைவியை உரிமையாளராக்க வேண்டாம் உனக்கு அண்ணன் தம்பிகள் இருந்தால் உன்  தகப்பனாரை உரிமையாளராக்க வேண்டாம்.

ஆக ஏதோ தொழிலை ஆரம்பித்து தாம் வெளிநாடு சென்று அடிக்கடி போன் தொடர்புகள் கொண்டு  கணக்கு வழக்குகள், வியாபார நடவடிக்கைகளை அறிந்து கொள்வது.  இவைகளை மாத மாதம் மெயில் செய்யச்சொல்லி சந்தேகங்களை அப்பொழுதே சரி செய்து கொள்ள வேண்டும் வியாபாரத்தில் நட்பு சொந்தங்களுக்கு இடமில்லை தொழிலில் கண்டிப்போடு இருக்கவேண்டும் எந்த விஷயங்களும் தெரியாதது போல் காட்டிக்கொள்ளக்கூடாது.

இரண்டு  வருடத்திற்கு ஒரு முறை விடுப்பு கிடைப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி 10-15 நாள் விடுப்பில் இடையில் வந்து வியாபார விஷயங்களை மேம்படுத்துதல்,கணக்கு பார்த்தல், பிரச்சனைகள் சரிசெய்தல், லாபம் எடுப்பது, முதலை அதிகரிப்பது, போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  
ஒரு நாள் வரும். அது நமது உடல் கோளாறு, கம்பெனி பிரச்சனை, வீட்டு பிரச்சனை இது போன்று சம்பவங்கள் வந்தால் கவலைப்படாது ஊர் வந்து நாம் ஆரம்பித்த தொழிலை சிறப்பாய் தொடரலாம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

12 comments:

 1. கற்றது கையலவாயினும் கல்லாதது கடலளவு என்று சொல்வது போல தொழில் அனுபவம் மிக்க சகோதரர் சபீர் அவர்களிடம் நிறைய தொழில் இரகசியம் நிறைந்து கிடக்கிறது.

  இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நமது விழிப்புணர்வு பங்களிப்பாளர் பலர் பங்கெடுத்து கூட்டுத்தொழில் புரிவோம்.!

  ReplyDelete
 2. புதிய தொழில் புரிய தூண்ட வைக்கின்ற தொடர் !

  அசலூர் / அயலூர் வாசிகளின் உரையாடல் அருமை

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. புதிதாக தொழில் புரிய அரசிடம் உரிமம் பெற விண்ணபிப்பது எவ்வாறு ? என்பதை வருகின்ற வாரங்களில் தொழில் அதிபர் சபீர் காக்கா அவர்கள் விளக்குவார் என எதிர்பார்ப்போம்.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.

  தொழில்மீது உள்ள ஆர்வத்தின் காரணம், சந்தித்தவர்கள் ஒரு முடக்கு தண்ணீர்கூட குடிக்கலையே, ஆர்வம் தாகத்தை விரட்டிவிட்டது. இதுதான் உண்மையான தொழிலின் ஆர்வம், நல்ல சம்பாஷனை, அதே நேரத்தில் மணப்பெண்ணை உதாரணம் காட்டியது மிகவும் அருமை, என்ன செய்வது சல்லடை போடமுடியாத சூழல்கள். அப்படியே சல்லடை போட்டாலும், இந்த காலத்து சல்லடை தாங்குமா?

  இப்போ எனக்கு சல்லடை கிடைத்து விட்டது. இதை வைத்தே ஒரு விழிப்புணர்வு கட்டுரையை எழுதுவேன்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 5. பங்குதாரர் சேர்ப்பது தொடர்பான விளக்கம் அருமை

  ReplyDelete
 6. உங்களுடன் பங்குதாரர் ஆகும் ஆசையை உருவாக்கி விட்டீர்களே, மருமகனார் அவர்களே!

  ReplyDelete
 7. 4 நாட்களாக வலைதள தொடர்புக்கு வெளியில் இருந்ததால் கருத்துப்பகுதிக்கு வரமுடியவில்லை மற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களை இன்று தான் படிக்கமுடிந்தது தொடருங்கள் உங்கள் பணியை
  தொழில் புரிவோம் வாருங்கள் பகுதி நான்கில் கருத்துப்பகுதியில் வந்தத மெய்ஷா அவர்கள் யோசனை கலாம் காதிர் அவர்களின் ஆசை ஜமால் காக்காவின் ஈடுபாடு அனைத்தையும் ரசித்தேன்
  நிஜாம் அவர்கள் புதிய தொழில் புரிய அரசிடம் விண்ணப்பிக்கும் வழிமுறையை எழுத சொல்லி இருக்கின்றீர் இறைவன் நாட்டப்படி தொடரலாம்.
  உங்களுடைய மேலான ஆதரவை தொடர்ந்து கொடுத்து வாருங்கள் வாசகர்களே

  ReplyDelete
 8. கரும்பு தின்ன கூலியா ..

  நல்ல ஆக்கத்திற்கு என்றும் வாசகர்களின் ஆதரவு உண்டு

  நண்பா

  ReplyDelete
 9. தொழில் ரகசியத்தை உலகறிய சொல்வது யாரிடமும் இல்லாத ஓன்று. நன்றி தோழரே

  ReplyDelete
 10. கரும்பாய் ருசித்த நண்பன் சித்திக்கிற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 11. தொழில் துவக்க பெண் பார்க்கும் படலத்தோடு ஒப்பிட்ட விதம் அருமை! பலனுள்ளவை!

  ReplyDelete
 12. நீங்கள் சொன்ன விலக்கமே தொழில் செய்தது போல் உணர்வு கிடைத்தது சபீர் அஹமது காக்கா அருமை.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers